-0-
இரு பிழைகளுக்கிடையே
மாட்டிக் கொண்டது ஒரு சரி
இரு சரிகளுக்கிடையே
சிக்கித் தவித்தது ஒரு பிழை
அவர்களும்
காதலும்.
-0-
பிரபஞ்சத்தில்
ஒரேயொரு சரியும்
ஒரேயொரு பிழையும்
மட்டுமே.
இறப்பும் பிறப்பும்
பிறப்பும் இறப்பும்.
குறிப்பு :
2009 ல் கிறுக்கியிருக்கேன்
diary பாக்கும் போது கிடைச்சது.