Wednesday, February 18, 2015

-0-


train க்கு wait பண்ணிட்டு இருக்கும் போது பிறவியிலேயே கண்ணு தெரியாதவர்கள் கொண்ட பாடகர் குழுவை சந்தித்தோம்.நிறைய பேசினாங்க.அமைதியாவே கேட்டுட்டு இருந்த raymond,அவுங்கள்ட்ட நேரடியாவே நீங்கள்ளாம் காரெட்டெ சாப்பிடமாட்டீங்களான்னு கேட்டதும் திகைப்பாயுட்டு.
எல்லாருமே சிரிச்சாங்க.அதுல ஒருத்தர் மட்டும் நீ ஒழுங்கா காரெட் சாப்பிடனும் சரியான்னு கேட்டு மறுபடியும் சாதரணமா அனுபவங்களை பேசத் துவங்கீட்டாங்க.இப்போலாம் அவுங்களை பற்றி பேசிக் கொண்டே காரெட் சாப்பிடுறான்.

-0-

ஸ்பெல்லிங் சொல்லிக் கொண்டே(book பார்த்துதான்) இனி alphabets படிக்கணும்ங்கிற வழக்கத்தை கொண்டு வரும் முயற்சியில் முதல் நாளில் ..:,

A for A P P L E

B for ball

C for cat

D for duck

E for elephant ம்மா இந்த elephant ஸ்பெல்லிங் எதுக்கு இவ்வளோ பெருசா இருக்கு 

எதுக்குனா யானை ரெம்ப பெருசுல்ல அதான்.
ஆமாம்மா,பாரேன் பூனை குட்டியா இருக்கும்ல அதான் catன்னு கொஞ்சம் ஸ்பெல்லிங் 

ம்ம் ..:))

-0-

நேற்று கொஞ்சம் feverish ah இருந்துச்சு.
(nursing)படிக்கும் போது வாங்கின ஸ்டெத்தஸ்கோப் வச்சு விளையாண்டுட்டு இருந்த raymond, chestpiece-i என் தலையில் கழுத்தில் வச்சு  நல்லா மூச்சு விடுன்னு சொல்லிட்டு உனக்கு நிறையா காய்ச்சல் இருக்கும்மான்னு சொல்லிட்டே மருந்தும் சொல்லிட்டான் sinarest (அவனுக்கு usual ah கொடுப்பது)

(லேப்-ல இருக்கும் ஸ்டெத் i use பண்ணிக்கிறோம்.தனித்தனியாலாம் எங்களுக்கு இப்போ வாங்க முடியாதுன்னு class ல எல்லாரும் excuse செய்ததுக்கு, பின்னாடி use ஆகும் இப்போ கிளம்புங்கன்னு பிரின்சிபால் சொன்ன நியாபகம் வந்துச்சு)

-0-

அப்பா சிமெண்ட் கரைச்சு உடைஞ்ச இடத்துல பூசிட்டு இருந்தாங்க 
raymond நானும் நானும்னு உள்ள உள்ள போயி விழுந்துட்டு இருந்தான் 

அப்பா கோவமா கையில பட்டால் கை பொத்துப் போகும் தள்ளி நில்லுன்னு சொன்னதும் 

அப்போ,உங்க கைக்கு மாம்ப்பா?

-0-

மதியம் சாப்பிட வரும் தம்பி மறுபடியும் கடைக்கு போக படாதபாடு எல்லாரையும் படுத்துவான்.கிளம்புடா கிளம்புடான்னு எல்லாரும் கதற கதற அவனாட்டுக்கும் இருப்பான்.

ஒருநாள் எல்லாரும் மதியம் சாப்பிடும்போது 
அப்பா raymond-க்கு ஊட்டிக் கொண்டே சாப்பிட்டு முடிச்சதும் குப்புறடிக்க படுக்கணும் இல்லாட்டி அடி விழும்ன்னு சொன்ன நிமிஷம் ,என் தம்பி சரிப்பா 
தந்தை சொல்மிக்க மந்திரமில்லைன்னு சொல்லிட்டே போய் படுத்துட்டான். 

உன்னை சொல்லல.கடைக்கு கிளம்பு இது அப்பா. 
மாப்ள உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயம் ஹ்ம்ம் அப்படி பொலம்பிக்கிட்டே, ஐவின்.. அப்பா கடைக்கு போகட்டுமான்னு தொட்டில் பக்கம் போய் நின்னுகிட்டான்.மாமா இனி ஐவின் சரின்னு  சொன்னாத்தான் கிளம்புவாங்க போலன்னு ஜீவா கொடுத்த timing இன்னும் நச்.

அப்போ ஐவின் பிறந்து 10 நாளாயிருந்தது.

Thursday, February 12, 2015

...

-0-

அதிகாலையிலேயே எழும்பிவிட்ட
குழந்தைகளுக்கு விளையாட
தூங்கும் இரு பொம்மைகள்
அம்மா அப்பா  

-0-

கிச்சு கிச்சு கிச்சு 
சொல்லிக் கொண்டிருக்கும் போதே 
சிரிக்கத் துவங்கும் 
குழந்தைமை .