Happy world health day to all........!!
முன்குறிப்பு:வேலை பார்க்கும் போது, என்னோட ஒரு மாணவிக்கு மன நிலை சரியில்லாமல் போனபோது..,(நீ...லாம் சொல்லிக் கொடுத்தா இப்படித்தான் ஆகும்னு என் தம்பி கலாயிச்சதெல்லாம் அப்போதான்)
அவளுடன் psychiatric hospital - லில் ஒரு இரவும், இரு பகல்களும்.., தங்க வேண்டியிருந்தது.அப்போ,இரவெல்லாம் பிற நோயாளிகளின் உளறல்களும் என் மாணவியின் நடவடிக்கைகளும் என் உறக்கத்தைப் பறித்தன...,பின்வரும் வரிகளைக் கொடுத்தன..!
மரிக்கும் முன்
சிரி!
மனம் பிழைக்க
அழு!
பிழையானாலும்
பேசு!
கேள்விகள்
கேளு!
பதில்கள்
தேடு!
உன் செயல்
யோசி!
வாழ்க்கையை
அழை!
தீயதை
மற!
குற்றம்
களை!
உரியதை
எடு!
மீதியைக்
கொடு!
கபடம்
விடு!
எண்ணம்
தெளி!
கிடைத்தவை
வாசி!
நல்லவை
காண்!
தீயவையும்
அறி!
விழு பின்
எழு!
கட்டளை
(கைக்)கொள்!
தோல்வியில்
வண்ணத்துப் பூச்சியாய்
நிறம் கொள்!
வானவில்லாய்
வளை!
தும்பி போல்
தேன் காண்!
கொள்கை
கொள்!
உன் கருத்தை
சொல்!
வன்மை
உடை!
மென்மை
பேண்!
உள்ளம்
திற!
உணர்வுகள்
பிரி!
எல்லாம்
நேசி!
ஆபத்திலாவது
விழி!
செய்திகள்
சுவை!
கீதம்
இசை!
பிறர் இதயம்
அசை!
பறவையாய்
பற!
பூக்கள்
பார்!
நிலவையும்
நினை!
குழந்தைகள்
ரசி!
பசித்தாலும்
ருசி!
ருசிக்காவிட்டாலும்
புசி!
தேய்!
உண்மைக்குள்
தோய்!
உறவுகள்
இணை!
நம்பிக்கை
வளர்!
இயற்கையோடு
புணர்!
மனிதம்
உணர்!
இன்னும் ஆயிரம்....
பின்.,
உன் உருவமில்லா மனம்
நோயாகாது..!
நிச்சயமாய்
பூரணமாகும்..!!
மனதைப் பிணமாக்காதே - அதற்கு..,
உயிரூட்டு!
உரமேற்று!
உள்ளத்தால்
உலகம் காண்..!
மனிதனாகவேவாவது
மரி....!!