Showing posts with label D.I.A.R.Y.(Daily I Am Remembering You). Show all posts
Showing posts with label D.I.A.R.Y.(Daily I Am Remembering You). Show all posts

Monday, June 1, 2020

கத ...

joshua: அடு யாடு.

மீ: அது பிச்சைக்காரன் 

joshua: அப்படின்னா?

மீ: அவுங்களுக்கு,வீடு இல்ல, சோறு இல்ல,அப்புறம் 

joshua: அம்மா இல்லையா?? சோறு ஊட்ட மாட்டாங்களா?
...................................................

மீ: பாட்டு பாடவா?கத சொல்லவா?

joshua:கட

மீ: ஒரு காக்கா இருந்துச்சாம்,தண்ணிதாகமா இருந்துச்சாம்.ஆத்துலையும் தண்ணியில்லையாம்,குளத்துலையும் தண்ணியில்லையாம்,

joshua: அவுங்க வீட்டுல அம்மா இல்லையா? , டம்மர்ல ஊத்தி தரமாட்டாங்களா ?
.......................................................
மறுபடியும்,கதை.

மீ: குருவி கூட்டுல இருந்துச்சாம்,அப்போ ஒரு பெரிய மழை,குரங்கு நனஞ்சுட்டே வந்து மரத்துல இருந்துச்சாம்.அப்போ குருவி,கேட்டுச்சாம் உனக்கு கை இருக்கு,கால் இருக்கு வீடுகட்டிக்கலாம்லன்னு குரங்குட்ட சொல்லுச்சாம்.குரங்குக்கு கோவமாகிடுச்சாம்,உன்னையும் உன் கூட்டையும் பிச்சு போடவான்னு கேட்டுச்சாம்.

joshua: கொடங்க அவுங்க அம்மா அடிச்சு வீடு கட்ட சொல்லியே கொடுக்கலையா? 
................................


ஒவ்வொரு வார்த்தைக்கும் ம்ம் கொட்டிக் கதை கேக்குறான்,கேள்வி கேக்குறான்,எல்லாம் அம்மா சம்பந்தமாவே இருக்கும்.3yrs 9months ஹ்ம்ம்.

Tuesday, July 24, 2018

நினைவுகள்

அப்பத்தா 

அற்புதம் பெரியப்பா 
ஆசீர் பெரியப்பா 
ரஞ்சித் அப்பா 

ஜோசபின் பெரிம்மா 
ரோஸ்லின் பெரியம்மா 
அன்னம் அம்மா 

லியோ அண்ணா 
ஆல்வின் அண்ணா 
ஜான்சி /ராணிம்மா 
ரெக்ஸ்
வின்சன் /அந்தோணி 
பிரின்ஸ்  
சாம் 

Monday, July 9, 2018

:((

அன்பின் ராஜாராம் அவர்களுக்கு 

ராஜன் தன்னோட ட்வீட்ஸ்ல உங்க கவிதைகள் போஸ்ட் பண்ணினதை பார்த்துட்டு உங்க நியாபகம் வந்துச்சு.உங்க blog போய் எனக்கு பிடிச்ச போஸ்ட் எல்லாம் நிதானமா வாசிச்சுட்டு வந்தேன்.அப்போல்லாம் நீங்க இறந்துட்ட செய்தி எனக்குத் தெரியாது.
சந்தோசமா வாசிச்ச கடைசி முறை அதுவாத்தான் இனி இருக்கும்.

உங்களை நன்றியோடு நினச்சு பார்க்க எனக்கும் சில தருணங்கள் உண்டு.
எனக்கு உங்க முகமே தெரியாது.குரல் மறந்துடுச்சு எழுத்துதான் மிகநன்றாய் தெரியும்.அதின் வழி அன்பும்.அதுதான் இப்போது அழ வைத்து என்னை எழுத வைத்தும் கொண்டிருக்கிறது.

ஆன்மா இளைப்பாற வேண்டுதல்கள் 

Sunday, April 22, 2018

joshua

இவன் 
சிரிப்பானா 
பேசுவானா 
விளையாடுவானா 
ஒழுங்கா வளருவானா 
இவனுக்குரிய தனித்துவம் பக்குவப்படுமா??

இப்ப்டில்லாம் 
நினைக்காமலோ பதறாமலோ 
பினட்டாயின் கொடுக்கும் ஒவ்வொரு தருணத்தையும் 
கடக்க முடியுறதில்ல 

joshua பேசுறான் 

kar... ம்ம் கார் 
குக்கூ ... ம்ம் ஏதோ ஒரு பறவை 

இதல்ல சுவாரசியம் 
:)

குக்கூகார் 
அதே 
விமானம் 

இப்போதெல்லாம் 
அச்சம் தவிர்க்க விழைகிறேன் 

நிறைவு!

Sunday, February 25, 2018

:)

Thanks

Gm

Merry Christmas

Letter vanthuduch

Monday, August 7, 2017

#HBD Joshua

Joshua க்கு ஒருவயசு.ஆகஸ்ட் 07 2016 ல பிறந்தான்.நைட் 9.50 இருக்கலாம்.ஒரே மழை.ரேமண்ட் பிறக்கும் போதும் அப்படித்தான் மழை.
மழை எனக்கு ஒரு நம்பிக்கை ஊடகம்.பிடிச்ச பாட்டு போல.

பிறந்ததுமே நீல நிறம் ஆகி ICU ல வச்சு அப்புறம் மஞ்சள் நிறமாகி போட்டோதெரபி க்கு போய்ன்னு 5 நாள் கஷ்ட்டபட்டான்.அந்த குட்டி கையில் காலில் ஊசி மருந்து போட்டோதெரபி வெப்பம் குளுக்கோஸ் ன்னு பார்த்து விரக்தியா ஆனதென்னவோ உண்மைதான்.
அப்புறம் வீட்டுக்கு வந்து அதீத கவனம்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும்.கொஞ்சம் கொஞ்சமா நல்லாவே வளந்தான்.
அப்புறம் ஒருநாள் ஏப்ரல் 4 லில் முதன்முதலா பிட்ஸ் வந்துச்சு.MRI ல செரிப்ரல் அட்ரோபி ன்னு ரிசல்ட்.அழுது நொறுங்கி வேற வழியில்ல பினட்டாயின் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு.3வருஷம் கொடுக்கணும்னு சொல்லியிருக்காங்க.

இதுவரை 
21 வாட்டி பிட்ஸ் 
4வாட்டி மருந்தின் அளைவை கூட்டி கொடுத்திருக்காங்க 
27 நாள் இரவு ஹாஸ்பிடல் 
5 நாள் இரவு 102 டிகிரி வரை குறையாத காய்ச்சல்ன்னு ஏதேதோ நோயின் நாட்களின் பட்டியல் 

ஆட்டிசம் குழந்தையாகலாம் 
பேசாமல் போய்டலாம் 
வளர்ச்சி இல்லாமல் போய்டலாம் 
படிக்க முடியாமல் போய்டலாம் 
இப்படி நிறையா லாம் கள்.இரவை நரகம் ஆக்கும். 

எல்லாமும் தவிர்த்து ஒவ்வொரு மாசமும் சரியான வளர்ச்சி இருக்குன்னு ஹாஸ்பிடல் போய் செக்அப் சொல்லும்போது ஒரு ஆசுவாசம் அது ரெம்பவே நிம்மதி கொடுக்கும்.

இப்போ தவழ்ந்து எழுந்து நிக்குறான்.

எப்படி இந்த சின்ன குழந்தை எல்லாத்தையும் தாங்கிக்கிடுதுன்னு யோசிச்சா , ஒரு நிஜம் தெரிஞ்சது.
அவன் என்னை தைரியமானவளா மாத்தியிருக்கான்.

மடியில பிட்ஸ் வந்து வெட்டிவெட்டி இழுத்து  நீலமாகும் அவனை பார்க்கும் துணிகரமும் அவனை சரியாக்கிடலாம்னு எனக்குள்ள தினமும் சொல்லிக்கும் போதும் ஒரு அம்மாவா நான் வளர்ந்திருக்கேன் 

இதையெல்லாம் எழுதும் போது எனக்கு அழுகையே வரல.அவன்தான் என்னை வளர்த்திருக்கான் 
வேறென்ன சொல்ல?

வாழ்க வளர்க

Saturday, March 4, 2017

raymond raymond raymond

ரிமோட் கார் 
ப்ளாக்ஸ் 
கிரேயான்ஸ் 
லுடோ 
மொபைலில் கேம் 
மோட்டோ பட்லு நோபிட்டா இன்னும் கார்ட்டூன்ஸ் 
gags just for laughs 

எல்லாம் bore ஆகி 
இப்போ  

விளையாட்டு பொம்மை joshua 

நிஜமாவே பொம்மைபோல வச்சு விளையாடுறான் 
பதறுது.
....................................... 

ஏலேய்ன்னு கூப்பிடாதடா 
அவனும் வளந்து ஏலேய் ன்னு உன்னை கூப்பிட போறான் 

அப்போ எப்படி கூப்பிடனும் ?

தம்பின்னு 

அப்போ மட்டும் அவன் என்னை தம்பின்னு கூப்பிடுறதுக்கா?

ஆ 
..........................................................................................
காலையிலேயே என்ன z டிவி? 

justforlaughs ம்ம்மா 
சிரிச்சிட்டே ஆரம்பிப்போம் 
அழக்கூடாதுன்னு சொல்லுவல்ல நீ.

Monday, September 26, 2016

இப்படித்தான்..

இப்படித்தான் நானும் உன் வயித்துக்குள்ள இருந்து வந்தேனா?

இப்படித்தான் நானும் சிறுசா இருந்தேனா?

இப்படித்தான் எனக்கும் குட்டி குட்டி டிரஸ் போட்டியா?

இப்படித்தான் நானும் உன் மடியிலேயே கக்கா போய்டுவேனா?(முகத்தை சுளுச்சு வச்சுக்கிட்டு )

எனக்கும் ஜான்சன்ndஜான்சன் ல ஜவ்வாது கலந்து பவுடர் போட்டியா?நானும் இப்படித்தான் மணத்தேனா ?(அப்படி ஒரு சிரிப்பு )
இப்போல்லாம் எனக்கு அப்படி செய்ய மாட்டுக்க?ஓ .. நான் வளந்துட்டேன் அதானே? valanthuten இப்படித்தானே இங்கிலிஷ்ல ஸ்பெல்லிங் 

இவனும் இனி என்னைப்போல வளருவான்ல ?

அம்மா அப்பா அண்ணா எல்லாத்துக்கும் முதல் எழுத்து அ - னாதான் ,இப்போ அவன் அ அ ன்னு வாயை தொறக்க ஆரம்பிச்சுட்டான்லம்மா 

இப்படித்தான் என்னை நைட்டெல்லாம் என்னையும் முழிச்சு பார்த்துக்கிட்டியா?

note:இப்படித்தான் ரேமண்ட் நிறையா இப்படித்தான் சொல்லுறான் :)))    joshua வைப்பார்த்து 

Saturday, September 24, 2016

raymond 2nd unit test மார்க்ஸ் கொடுத்திருக்காங்க 

கடந்த 2 மாதங்களாகவே raymond படிப்பை சரிவர கவனிக்கவே இல்ல நான்.நிறையா காரணங்கள்,அவனுக்கு ஒரு குட்டித்தம்பி பொறந்ததை  (
joshua ஆகஸ்ட் 7த் 2016 ) ஒரு காரணமா சொல்லிக்கலாம்.இருந்தாலும் நானும் அவனை படி வைன்னு கட்டாயப்படுத்தல.
பரீட்சைக்கு கிளம்பும் போது மட்டும் மனசு அடிச்சுக்கிட்டு.என்னன்னு எழுதப் போறானோன்னு?
இன்னைக்கு ரிசல்ட்
எல்லாத்துலயும் 100 ,99, 99 ன்னு மார்க்ஸ்.இந்த நாட்டு மொழி பாடங்களிலும் அதிக மார்க்ஸ் எடுத்தே பாஸ்.
அவன் வழக்கம் போலவே நான் பாஸ் பண்ணிட்டேனான்னு கேட்டான்.
:))
ரெம்ப கடைசியா இப்படித்தான் எனக்குத் தோணுச்சு..
நான்தான் சொல்லிக் கொடுக்குறேன்,அப்போதான் அவனால இவ்வளவு ஸ்கோர் பண்ண முடியுதுன்னு எனக்கு ஒரு எண்ணம் இருந்துச்சு.இன்னைக்கு எனக்கு அதுதப்புன்னு தோணுச்சு கூடவே நான் இனி அவனை வேற மாதிரி guide பண்ணணும்ங்கிற எண்ணமும்.
குழந்தைகள் நம் கர்வங்களை அழிக்கத் துவங்க புது ஒளியில் ஒருபாதை மிளிர்கிறது.

Sunday, July 24, 2016

கேள்விகள் ...

காலைல பல்ல இன்னும் விளக்கல சாப்பிடாதன்னு சொல்லுற 
நைட் பல்ல விளக்கிட்ட சாப்பிடாதன்னு சொல்லுற 

பல்லு விளக்கினா சாப்பிடணுமா கூடாதா ?
குழப்புற நீ ம்மா.
.............................................
புகையிலை உடலுக்கு கேடு விளைவிக்கும் 
ஸ்மோக்கிங் காஸெஸ் கான்செர் 

கான்செர் ன்னா தமிழ்ல கேடு - வா?
................................................................................
நீ கால்சியம் tab சாப்பிட்டியா 
விட்டமின் சி - க்கு லெமன் ஜூஸ் குடிச்சியா 
ஒமேகா 3 க்கு walnut சாப்பிட்டியா 
ஐயர்ன் க்கு egg சாப்பிட்டியா 
குட்டிபாப்பா நல்லா துடிச்சாளா 
வொமிட் பண்ணுனியோ?

இதெல்லாம் raymond கேக்கும் கேள்விகள்
.....................................

Tuesday, July 19, 2016

raymond க்கு halfyearly xam results வந்தாச்சு 

இந்த நாட்டு மொழியில் இரண்டு பாடத்துலயும் பாஸ் 

கணக்கு 95 அறிவியல் 98 ஆங்கிலம் 93

இந்த மார்க் வந்ததும் ஒவ்வொருத்தருடைய கமெண்ட் 

அப்பா : நீ பிள்ளையை எவ்வ்ளோ கொடுமை பண்ணியிருக்கன்னு தெரியுது 

அம்மா : எங்க தங்கம் அறிவு பிள்ளை 

raymond அப்பா : இந்த ஊர் மொழியை படிச்சதுதான் அப்பாக்கு ரெம்ப சந்தோஷம் 

தம்பி : மாப்பிள்ள கலக்கு , மாமா சைக்கிள் வாங்கித்தர்றேன் 

தம்பி மனைவி : வாழ்த்துக்கள் raymond தங்கம் 

raymond : அம்மா நான் பாஸ் பண்ணிட்டேனா?
:)



Monday, March 21, 2016

raymond ரகளைகள் :))

#
3 எண்ணங்குள்ளையும் ஒழுங்கா வந்துடு raymond 
நீ 100 99 98 ன்னு எண்ணிட்டு இரு வந்துடுறேன்
#
பாகற்காய் சாப்பிட்டாதான் புழுலாம் சாகும்.
அல்பேண்டாசோல் சாப்பிட்டுக்கலாம்ம்மா
#
100 ஸ்பெல்லிங் சொல்லு h ..
ச்சே one zero zero ன்னு இருந்திருக்கலாம் 

Monday, March 7, 2016

raymond அலம்பல்கள் 


#என்னடா பண்ணுற
பெயிண்ட்டிங் பிரஷ் காணும் அதான் நெயில் பாலிஷ் மூடியை கழட்டிகிட்டேன்.இந்த பிரஷ் தொலையாது இப்படியே மூடி வச்சுடலாம்.

#என்னடா இது பாட்டில்ல ?
இப்போதான் ஒன்டாய்லெட் அதுல இருந்தேன்.
எதுக்குடா?
நீ சொன்னது போலவே தண்ணிகுடிச்சா மஞ்சள் நிறம் மாறியிருக்கன்னு பாக்க.

#இது என்னம்மா?
ultra sound ரிப்போர்ட்
இதுல பாப்பா எங்க இருக்கா?
இதோ .. 2cm
இவ்வளோ இருட்டா இருக்கு.பயமா இருக்கும் பாப்பாக்கு கொஞ்சநேரம் தினம் வாயை தொறந்து நீ இந்த லைட்ட பாரும்மா.

#என்ன சாப்பிட்டாலும் கொஞ்சம் கடிச்சு கொடுக்குறான்.பாப்பாவுக்காம்.

#இந்த கேபிட்டல் w வை டபுள் v ன்னுதான் சொல்லணும்
ஸ்மால் லெட்டெர் w வை அப்படியே சொல்லிக்கலாம்.தப்பில்லை.
ஹோம் வொர்க் பண்ணும் போது அவனே சொல்லிகிட்டான் 

#எனக்கு சொன்னபடி கேக்கவே பிடிக்கலம்மா
எதுக்கு தங்கம்?
போர் அடிக்குதும்மா அதான்

#இந்த பாகற்காய் கசக்காமல் இருந்தால் நானே சாப்ட்டுடுவேன்.
கசக்குது அதான் நீயே ஊட்டி விட்டுடு 

#சரி ஜெபம் சொல்லிட்டு தூங்கு raymond 
மனசுக்குள்ள சொல்லிட்டேன்ம்மா 
எனக்கு கேக்கவேயில்ல
மனசுக்குள்ள சொன்னா உனக்கு எப்படிம்மா கேக்கும்,யேசுசாமிக்கு கேட்டிருக்கும்.

#இந்த டிரஸ்க்கு இந்த ஷர்ட் மேட்ச் ஆகவேயில்லம்மா.
மேல ஜெர்க்கின் போடப்போற அப்புறம் என்னவாம்?
மத்தவங்க பாக்க இல்லம்மா, எனக்கே மேட்ச்சா வேணும்.

#தண்ணில விளையாடாத.காய்ச்சல் வந்துடும்.
முதல்ல சளிதான் பிடிக்கும்.நீ உடனே மாத்திரை கொடுத்துடு காய்ச்சல் வராது.

#நைட் பெட்ல கதை சொல்லவா பாடவா?
நீ பாட்டே பாடு அப்போதான் வேகமா தூங்கிடுவேன் கதை சொன்னால் லேட் ஆகும் ஸ்கூல்க்கு

இன்னும் இன்னும் ...:)

Monday, September 14, 2015

:)) raymond...

ம்மா நான் கண்டுபுடிச்சுட்டேன்.இதைத்தான் அதிகமா கேக்குறேன் நான் இப்போல்லாம் 

5 ஐ தலைகீழா எழுதினா வ எழுத்து வரும் ..ம்மா.. நான் கண்டுபுடிச்சுட்டேன்
இந்த காதுல இந்த ஓட்டை வழியாதான் சத்தம் நம்ம மனசுக்குள்ள போகுது அதான் எனக்கு கேக்குதும்மா.நான் கண்டுபுடிச்..
டென்னிஸ் game ல tie பிரேக் ல tie லாம் கொடுக்க மாட்டாங்கம்மா நான் கண்டு..
இந்த என் கூட படிக்கும் rinchen க்கு one two three லாம் தெர்லம்மா .. நான் கண்..
இந்த வரஞ்சிருக்கும் 8 flowers ஐயும் முன்னாடி இருந்து எண்ணினாலும் பின்னாடி இருந்து எண்ணினாலும் 8 ன்னுதான்மா வரும்.நான் க...
இந்த மங்கோ ஜூஸ் எப்படி செய்வாங்கன்னா,மாம்பழத்தை ஜார்ல போட்டு அரச்சி பில்ட்டர் பண்ணிடுவாங்க.அதுகூட சீனி போட்டு ஸ்பூன்ல கலக்கி இந்த பிரூட்டி டப்பால pack பண்ணிடுவாங்கம்மா.நான் க..
இப்படித்தான் சிப்ஸ் வாங்கினா ஒரு கண்டுபிடிப்பு play material வாங்கினா ஒரு கண்டுபிடிப்புன்னு  நிதம் ஒரு கண்டுபிடிப்பு நடக்கும் ஆய்வுக் கூடமாகி வருது வீடு.
:)
குழந்தைகள் உலகம் கண்டுபிடிப்புகளால் நிறைந்தும் வழியும் போல.அதே போல கேள்விகளும்,

இந்த egg குள்ள எப்படி எல்லோ பார்ட் white பார்ட்டும் போச்சு.அதுஎதுக்கு ஒன்னா கலக்கல.எப்படியே தனியாவே இருக்கு.

எதுக்கு எல்லாரும் வேற  வேற சாமி கும்பிடுறாங்க.

எல்லாருக்கும் குட்டிபாப்பா இருக்கு நமக்கு மட்டும் எதுக்கு இல்ல.

நான் எப்போ காலஜ் போவேன் 

இந்த நைட் மட்டும் எப்படி கருப்பாகுது.

நமக்கு எதுக்கு ரெக்கை இல்ல?

நீ படிக்கும் போதெல்லாம் என்னை எதுக்கும்மா உனக்குத் தெரியாது ?

நான் எதுக்குமா கருப்பா இருக்கேன் ?

இன்னும் இன்னும் ன்னு நிறையா...


Sunday, June 14, 2015

:)

நான் raymond ஐ sunday class க்கு கிளம்பிக் கொண்டிருந்தேன்.
குளிச்சதும் towel கட்டிய படியே எண்ணை தேய்த்துக் கொண்டிருக்கும் போது
towel ஐ கழட்டிவிட்டான்.
நான்... ஐயே shame shame puppy shame என சொல்லியபடியே towel மறுபடியும் காட்டியாச்சு.
ம்மா..நான் ஒன்னு கண்டுபிடிச்சுட்டேன்.
ம்ம் சொல்லு
ம்மா..
puppy டிரஸ் போடாது அதான் puppy shame
ஆமால்ல
நீ சொல்லுறது சரிதான் தங்கம் (நான்)
ஆனா
 lion tiger monkey லாமும் டிரஸ் போடாது
அதுனால
இன்னைக்கு shame shame lion shame சொல்லலாம்
நாளைக்கு tiger shame
ok வா?
ங்கே ...(நான்)

Wednesday, March 25, 2015

raymond

raymond எழுதிக் கொண்டிருந்தான் 
ம்மா..
இதை டபுள் வீ  ன்னுதானே 
சொல்லணும் எதுக்கு டபுள் யு ன்னு சொல்லுறோம் 

யோசிச்சாலும் பதில் கிடைக்கப் போறதில்லை அதனால 
நீ வேகமா எழுதி முடியேன்னு கொஞ்சம் அதட்டலா 
சொல்லிகொண்டிருக்கும் போதே 

பக்கத்தில் இருந்த தண்ணீரை குடிக்க ஆரம்பிச்சுட்டான் 

என்னடா?? ன்னு கேட்டால் 

ட்ரிங்க்ஸ் பிரேக் -ன்னு பதில் 
(வேர்ல்ட் கப் -மேட்ச் ல கவனிச்சிருக்கான்)
..........................................................................................................
சண்டே கிளாஸ் போறான் 
பைபிள் வசனம் மனப்பாடம் பண்ண சொல்லுவாங்க 

மெம்மொரி பண்ணுன்னா?என்னம்மா 

மனப்பாடம் பண்ணுறது  

மனப் பாடம்னா?

பாக்காமல் சொல்லுறது raymond 

(நான் திரும்ப திரும்ப சொல்லி அவனும் சொல்லி மனப்பாடம் பண்ணிட்டான்)

கண்ணை இறுக்க மூடிட்டு 
லூக் 1:37
for nothing is impossible with GOD 

இப்போ எதுக்கு கண்ணை மூடுற நீ?

பாக்காமல் சொல்லனும்ல அதான்.
..........................................................................................................

evening walk போகும் போது ஒரு குட்டி பூ கீழ கிடந்தது.
நான் எடுத்து கையில் வச்சுகிட்டேன் 

தனக்குத்தான் வேணும்னு raymond வாங்கிகிட்டான் 

இதுல இருந்துதான் மரம் வருமாம்மா ?

ம்ம் .. இதுல காய் அப்புறம் பழம் 
பழத்துல இருந்து விதை 
விதைல இருந்து மரம் வரும்  

மறுநாள் ஸ்கூல்க்கு போகும் போது 
புறா இறகு ஒன்றை கையில் எடுத்துகிட்டு 
இதுல இருந்து புறா வரும்லன்னு கேட்டான் 

ங்கே.. ன்னு பார்த்தேன் 

உனக்கு தெரியாது.நான் அப்பாட்ட கேட்டுகிறேன்னுட்டான்
......................................................................................................
ம்மா..
எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தா 

நீ ஐஸ்கிரீம் ஸ்பெல்லிங் மனப்பாடமா படிச்சுடு,வங்கித் தர்றேன் 

கோவமா..,அப்போ lion க்கு ஸ்பெல்லிங் சொன்னா சிங்கம் வாங்கித் தருவியோ?
..............................................................................................
இந்த மலையெல்லாம் எப்படி வளந்துச்சு?
மழை பெய்யும் போது தானா வளந்துச்சு 
(அவனே கேள்வி அவனே பதில்)
.............................................................................................

Wednesday, February 18, 2015

-0-


train க்கு wait பண்ணிட்டு இருக்கும் போது பிறவியிலேயே கண்ணு தெரியாதவர்கள் கொண்ட பாடகர் குழுவை சந்தித்தோம்.நிறைய பேசினாங்க.அமைதியாவே கேட்டுட்டு இருந்த raymond,அவுங்கள்ட்ட நேரடியாவே நீங்கள்ளாம் காரெட்டெ சாப்பிடமாட்டீங்களான்னு கேட்டதும் திகைப்பாயுட்டு.
எல்லாருமே சிரிச்சாங்க.அதுல ஒருத்தர் மட்டும் நீ ஒழுங்கா காரெட் சாப்பிடனும் சரியான்னு கேட்டு மறுபடியும் சாதரணமா அனுபவங்களை பேசத் துவங்கீட்டாங்க.இப்போலாம் அவுங்களை பற்றி பேசிக் கொண்டே காரெட் சாப்பிடுறான்.

-0-

ஸ்பெல்லிங் சொல்லிக் கொண்டே(book பார்த்துதான்) இனி alphabets படிக்கணும்ங்கிற வழக்கத்தை கொண்டு வரும் முயற்சியில் முதல் நாளில் ..:,

A for A P P L E

B for ball

C for cat

D for duck

E for elephant ம்மா இந்த elephant ஸ்பெல்லிங் எதுக்கு இவ்வளோ பெருசா இருக்கு 

எதுக்குனா யானை ரெம்ப பெருசுல்ல அதான்.
ஆமாம்மா,பாரேன் பூனை குட்டியா இருக்கும்ல அதான் catன்னு கொஞ்சம் ஸ்பெல்லிங் 

ம்ம் ..:))

-0-

நேற்று கொஞ்சம் feverish ah இருந்துச்சு.
(nursing)படிக்கும் போது வாங்கின ஸ்டெத்தஸ்கோப் வச்சு விளையாண்டுட்டு இருந்த raymond, chestpiece-i என் தலையில் கழுத்தில் வச்சு  நல்லா மூச்சு விடுன்னு சொல்லிட்டு உனக்கு நிறையா காய்ச்சல் இருக்கும்மான்னு சொல்லிட்டே மருந்தும் சொல்லிட்டான் sinarest (அவனுக்கு usual ah கொடுப்பது)

(லேப்-ல இருக்கும் ஸ்டெத் i use பண்ணிக்கிறோம்.தனித்தனியாலாம் எங்களுக்கு இப்போ வாங்க முடியாதுன்னு class ல எல்லாரும் excuse செய்ததுக்கு, பின்னாடி use ஆகும் இப்போ கிளம்புங்கன்னு பிரின்சிபால் சொன்ன நியாபகம் வந்துச்சு)

-0-

அப்பா சிமெண்ட் கரைச்சு உடைஞ்ச இடத்துல பூசிட்டு இருந்தாங்க 
raymond நானும் நானும்னு உள்ள உள்ள போயி விழுந்துட்டு இருந்தான் 

அப்பா கோவமா கையில பட்டால் கை பொத்துப் போகும் தள்ளி நில்லுன்னு சொன்னதும் 

அப்போ,உங்க கைக்கு மாம்ப்பா?

-0-

மதியம் சாப்பிட வரும் தம்பி மறுபடியும் கடைக்கு போக படாதபாடு எல்லாரையும் படுத்துவான்.கிளம்புடா கிளம்புடான்னு எல்லாரும் கதற கதற அவனாட்டுக்கும் இருப்பான்.

ஒருநாள் எல்லாரும் மதியம் சாப்பிடும்போது 
அப்பா raymond-க்கு ஊட்டிக் கொண்டே சாப்பிட்டு முடிச்சதும் குப்புறடிக்க படுக்கணும் இல்லாட்டி அடி விழும்ன்னு சொன்ன நிமிஷம் ,என் தம்பி சரிப்பா 
தந்தை சொல்மிக்க மந்திரமில்லைன்னு சொல்லிட்டே போய் படுத்துட்டான். 

உன்னை சொல்லல.கடைக்கு கிளம்பு இது அப்பா. 
மாப்ள உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயம் ஹ்ம்ம் அப்படி பொலம்பிக்கிட்டே, ஐவின்.. அப்பா கடைக்கு போகட்டுமான்னு தொட்டில் பக்கம் போய் நின்னுகிட்டான்.மாமா இனி ஐவின் சரின்னு  சொன்னாத்தான் கிளம்புவாங்க போலன்னு ஜீவா கொடுத்த timing இன்னும் நச்.

அப்போ ஐவின் பிறந்து 10 நாளாயிருந்தது.

Tuesday, September 16, 2014

விளம்பரங்கள்

-0-
ம்மா..  எனக்கு
ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கலாமா
பவுடர்தான் வேணும்.

ங்கே.. ன்னு பார்த்தேன்.

ponds

-0-
ஹார்பிக் அப்பாஸ்
நம்ம வீட்டுக்கும் வருவாரா?

எதுக்குடா?

பாத்ரூம் கழுவ..

-0-
இந்த நாயிக்கும்
க்ளுகோவிட்டா கொடுத்தா
அவனை முந்திடும்.

-0-
அம்மாக்கு வயசாயிட்டா
சோறு கொடுப்பியா தங்கம்?

வயசாகுறதுன்னா ம்மா ?

முடில்லாம் போய்டும்..
பல்லெல்..

அப்படின்னா
பிருங்காவும் (இந்துலேகா மறந்துட்டு போல )
எர்வாமெடினும் வாங்கித் தரேன்மா.

-0-
ஒரு கிரீம் add  க்கு
அந்த மலையாள ஹீரோ
கிடார் வாசிக்கிறார்.அப்படியே விளம்பர ஹீரோயினும்
வாசிக்கிறார்.

பொம்மை கிடார்ல என் பையனும் join பண்ணிடுறான்.
tune முணுமுணுத்தபடி.

-0-
எனக்கு அந்த பிஸ்கட் வாங்கித் தாம்மா.

எந்த பிஸ்கட்?

ஒரு அக்கா பூ தச்சுகிட்டே சாபிடுவாங்கல்ல அது

-0-
ம்மா

ஜெம்ஸ் னா என்ன?

மிட்டாய்.தெரியும்ல உனக்கு.

இல்லம்மா , பேஸ்ட் add ல சொல்லுற ஜெம்ஸ்.

அது germs டா.கிருமிகள்.

கடிக்குமா..?

இல்லடா.அதுவந்து..

பல்லுல கடிக்கும்.உனக்குத்தான் தெரியல.

ஹ்ம்ம்..


-0-
அந்த பாப்பா
பிறந்தநாளுக்கு
யாரு பலூன் பறக்க விட்டாங்க?
யாரையுமே காணும்?

-0-
வெறும் குட்மார்னிங்  சொல்லாதம்மா.

குட் மார்னிங் beautiful சொல்லு. 

-0-
என்னடா சேனல்
மாத்திட?

இங்க விளம்பரம் முடிஞ்சுட்டுல 
-0-

:)

Thursday, August 21, 2014

மொழியறிதல்

-0-

ம்மா..
அது  CAPITAL LETTER
C யா?
இல்லாட்டி small letter
c யா ?

எதுடா?
எங்க இருக்கு?

அந்தா
மேல பாருங்கமா 

நிலா.

-0-

ம்மா
DISCOVERY CHANEL  ல்ல
D எதுக்கு தப்பா போட்டிருக்காங்க?

D - ல உலக உருண்டை சுத்திட்டு இருக்கு raymond.
அது creativity.தப்பில்ல.

எங்க மிஸ்லாம் இப்படில்லாம் போடமாட்டங்க.
நானும் போடமாட்டேன்.

-0-

ம்மா 
அது என்ன shape?

ஓ 
செங்கலா?
அது செவ்வகம்.

இதுவா (கையில் எடுத்து)

இது பாதி செங்கல்
சதுரம்.
நான் சொன்னது 
முழு செங்கல் டா .

அப்போ 
ஒரு செவ்வகம் ஒடஞ்சா 
ரெண்டு சதுரமா?

ங்கே ..

Thursday, July 24, 2014

RAYMOND ..

-1-
அடிக்காதடா வலிக்கும்
வலிக்கட்டும்(இது raymond )
கொட்டீடும்டா
கொட்டட்டும்(இது raymond )
பாவம்டா
பாவட்டும்  (இது raymond )

-2-
வேமா சாப்பிடு தங்கம் வேலை இருக்கு 
'ஆ' சொல்லு 

நான் 'ஊ' தான் சொல்லுவேன் 
ஆ போதும்மா
ஊ ... 

-3-
A B C D.. பார்த்து எழுதுறான் 
சில எழுத்துகளை அப்படியே தலைகீழா எழுதுறான்  
(நிலக்கண்ணடியிலவா  மாப்ள சொல்லிக் கொடுத்தாங்கன்னு தம்பி கேக்கும்போது எனக்கும் முதல்ல புரியல)
 :)

-4-
டார்ச் LIGHT னா அவ்வளோ பிடிக்குது 
வீட்டுக்குள்ள தலைகீழா கவுத்தி வச்சுட்டு 
நிலா ஒளிஞ்சு இருக்கும்மான்னு சொல்லுறான்.
ஒரு FULL MOON DAY க்கு நிலா காமிக்கும் போது வானத்துக்கு உள்ள யாரோ டார்ச் பிடிசுருக்காங்க.
எங்கம்மா  சார்ஜார்ல போடுவாங்க? - னு கேக்கும்போது நான் மக்கு ஆகிடுறேன் 

-5-
TRAIN, NORTH INDIA -ல வந்துட்டு இருக்கு.

கிடார் வச்சு அவர் பாடுவார்ல .. அந்த பாட்டை  தப்பு தப்பா  பாடிகிறாங்கன்னு  சொன்னான்.

புரியவே இல்ல எனக்கு.
அவர் கொண்டைகடலை விக்கிறார்டா.

நல்ல பாரேன்ம்மா..

சனா சனா சானா..(விக்கிறார் )

(அட ஆமா எந்திரன் SONG  )

:)

-6-
கார் வரை 
லாரி வரை 
யானை வரைங்க 
தண்ணிகுடம் வரைங்கம்மா 

முடிஞ்சவரைக்கும்  வரைஞ்சு கொடுப்பேன் 

நேத்து கிடார் வரைய சொல்லிக் கேட்டான் 
STRINGS லாம் அழியும் வரை விரல் வைத்து  சிலேட்டில் வாசித்தபடி 
டிங் டிங் டிங் ன்னு சொல்லிட்டே   உறங்கி போனான்.

அழகாதான் இருக்கு