Monday, July 9, 2018

:((

அன்பின் ராஜாராம் அவர்களுக்கு 

ராஜன் தன்னோட ட்வீட்ஸ்ல உங்க கவிதைகள் போஸ்ட் பண்ணினதை பார்த்துட்டு உங்க நியாபகம் வந்துச்சு.உங்க blog போய் எனக்கு பிடிச்ச போஸ்ட் எல்லாம் நிதானமா வாசிச்சுட்டு வந்தேன்.அப்போல்லாம் நீங்க இறந்துட்ட செய்தி எனக்குத் தெரியாது.
சந்தோசமா வாசிச்ச கடைசி முறை அதுவாத்தான் இனி இருக்கும்.

உங்களை நன்றியோடு நினச்சு பார்க்க எனக்கும் சில தருணங்கள் உண்டு.
எனக்கு உங்க முகமே தெரியாது.குரல் மறந்துடுச்சு எழுத்துதான் மிகநன்றாய் தெரியும்.அதின் வழி அன்பும்.அதுதான் இப்போது அழ வைத்து என்னை எழுத வைத்தும் கொண்டிருக்கிறது.

ஆன்மா இளைப்பாற வேண்டுதல்கள் 

Sunday, April 22, 2018

joshua

இவன் 
சிரிப்பானா 
பேசுவானா 
விளையாடுவானா 
ஒழுங்கா வளருவானா 
இவனுக்குரிய தனித்துவம் பக்குவப்படுமா??

இப்ப்டில்லாம் 
நினைக்காமலோ பதறாமலோ 
பினட்டாயின் கொடுக்கும் ஒவ்வொரு தருணத்தையும் 
கடக்க முடியுறதில்ல 

joshua பேசுறான் 

kar... ம்ம் கார் 
குக்கூ ... ம்ம் ஏதோ ஒரு பறவை 

இதல்ல சுவாரசியம் 
:)

குக்கூகார் 
அதே 
விமானம் 

இப்போதெல்லாம் 
அச்சம் தவிர்க்க விழைகிறேன் 

நிறைவு!

Sunday, February 25, 2018

:)

Thanks

Gm

Merry Christmas

Letter vanthuduch

..

ஆல் போல் விழு

Friday, October 27, 2017

...

விரல்களை நதிகளாக்கி 
உள்ளங்கையை கடல் என்றாள் 

மேடுகளில் மலைகள் வரைந்து 
குழிந்த உள்ளங்கையை குளம் என்றாள் 

விரல்கள் சேர்த்து வளைத்து 
நீள் சமவெளி என்றாள் 

விரல்கள் மட்டும்  
வரப்பு மேடுகள் என்றாள் 

நேற்று காதலென்றாள் 
இன்று எதுவுமில்லை என்றாள் 

வெறுமையாய் இருக்கிறது 
எதுவுமாய் இல்லாத உள்ளங்கைகள்

Monday, August 7, 2017

#HBD Joshua

Joshua க்கு ஒருவயசு.ஆகஸ்ட் 07 2016 ல பிறந்தான்.நைட் 9.50 இருக்கலாம்.ஒரே மழை.ரேமண்ட் பிறக்கும் போதும் அப்படித்தான் மழை.
மழை எனக்கு ஒரு நம்பிக்கை ஊடகம்.பிடிச்ச பாட்டு போல.

பிறந்ததுமே நீல நிறம் ஆகி ICU ல வச்சு அப்புறம் மஞ்சள் நிறமாகி போட்டோதெரபி க்கு போய்ன்னு 5 நாள் கஷ்ட்டபட்டான்.அந்த குட்டி கையில் காலில் ஊசி மருந்து போட்டோதெரபி வெப்பம் குளுக்கோஸ் ன்னு பார்த்து விரக்தியா ஆனதென்னவோ உண்மைதான்.
அப்புறம் வீட்டுக்கு வந்து அதீத கவனம்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும்.கொஞ்சம் கொஞ்சமா நல்லாவே வளந்தான்.
அப்புறம் ஒருநாள் ஏப்ரல் 4 லில் முதன்முதலா பிட்ஸ் வந்துச்சு.MRI ல செரிப்ரல் அட்ரோபி ன்னு ரிசல்ட்.அழுது நொறுங்கி வேற வழியில்ல பினட்டாயின் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு.3வருஷம் கொடுக்கணும்னு சொல்லியிருக்காங்க.

இதுவரை 
21 வாட்டி பிட்ஸ் 
4வாட்டி மருந்தின் அளைவை கூட்டி கொடுத்திருக்காங்க 
27 நாள் இரவு ஹாஸ்பிடல் 
5 நாள் இரவு 102 டிகிரி வரை குறையாத காய்ச்சல்ன்னு ஏதேதோ நோயின் நாட்களின் பட்டியல் 

ஆட்டிசம் குழந்தையாகலாம் 
பேசாமல் போய்டலாம் 
வளர்ச்சி இல்லாமல் போய்டலாம் 
படிக்க முடியாமல் போய்டலாம் 
இப்படி நிறையா லாம் கள்.இரவை நரகம் ஆக்கும். 

எல்லாமும் தவிர்த்து ஒவ்வொரு மாசமும் சரியான வளர்ச்சி இருக்குன்னு ஹாஸ்பிடல் போய் செக்அப் சொல்லும்போது ஒரு ஆசுவாசம் அது ரெம்பவே நிம்மதி கொடுக்கும்.

இப்போ தவழ்ந்து எழுந்து நிக்குறான்.

எப்படி இந்த சின்ன குழந்தை எல்லாத்தையும் தாங்கிக்கிடுதுன்னு யோசிச்சா , ஒரு நிஜம் தெரிஞ்சது.
அவன் என்னை தைரியமானவளா மாத்தியிருக்கான்.

மடியில பிட்ஸ் வந்து வெட்டிவெட்டி இழுத்து  நீலமாகும் அவனை பார்க்கும் துணிகரமும் அவனை சரியாக்கிடலாம்னு எனக்குள்ள தினமும் சொல்லிக்கும் போதும் ஒரு அம்மாவா நான் வளர்ந்திருக்கேன் 

இதையெல்லாம் எழுதும் போது எனக்கு அழுகையே வரல.அவன்தான் என்னை வளர்த்திருக்கான் 
வேறென்ன சொல்ல?

வாழ்க வளர்க

Saturday, March 4, 2017

raymond raymond raymond

ரிமோட் கார் 
ப்ளாக்ஸ் 
கிரேயான்ஸ் 
லுடோ 
மொபைலில் கேம் 
மோட்டோ பட்லு நோபிட்டா இன்னும் கார்ட்டூன்ஸ் 
gags just for laughs 

எல்லாம் bore ஆகி 
இப்போ  

விளையாட்டு பொம்மை joshua 

நிஜமாவே பொம்மைபோல வச்சு விளையாடுறான் 
பதறுது.
....................................... 

ஏலேய்ன்னு கூப்பிடாதடா 
அவனும் வளந்து ஏலேய் ன்னு உன்னை கூப்பிட போறான் 

அப்போ எப்படி கூப்பிடனும் ?

தம்பின்னு 

அப்போ மட்டும் அவன் என்னை தம்பின்னு கூப்பிடுறதுக்கா?

ஆ 
..........................................................................................
காலையிலேயே என்ன z டிவி? 

justforlaughs ம்ம்மா 
சிரிச்சிட்டே ஆரம்பிப்போம் 
அழக்கூடாதுன்னு சொல்லுவல்ல நீ.