Monday, September 14, 2015

:)) raymond...

ம்மா நான் கண்டுபுடிச்சுட்டேன்.இதைத்தான் அதிகமா கேக்குறேன் நான் இப்போல்லாம் 

5 ஐ தலைகீழா எழுதினா வ எழுத்து வரும் ..ம்மா.. நான் கண்டுபுடிச்சுட்டேன்
இந்த காதுல இந்த ஓட்டை வழியாதான் சத்தம் நம்ம மனசுக்குள்ள போகுது அதான் எனக்கு கேக்குதும்மா.நான் கண்டுபுடிச்..
டென்னிஸ் game ல tie பிரேக் ல tie லாம் கொடுக்க மாட்டாங்கம்மா நான் கண்டு..
இந்த என் கூட படிக்கும் rinchen க்கு one two three லாம் தெர்லம்மா .. நான் கண்..
இந்த வரஞ்சிருக்கும் 8 flowers ஐயும் முன்னாடி இருந்து எண்ணினாலும் பின்னாடி இருந்து எண்ணினாலும் 8 ன்னுதான்மா வரும்.நான் க...
இந்த மங்கோ ஜூஸ் எப்படி செய்வாங்கன்னா,மாம்பழத்தை ஜார்ல போட்டு அரச்சி பில்ட்டர் பண்ணிடுவாங்க.அதுகூட சீனி போட்டு ஸ்பூன்ல கலக்கி இந்த பிரூட்டி டப்பால pack பண்ணிடுவாங்கம்மா.நான் க..
இப்படித்தான் சிப்ஸ் வாங்கினா ஒரு கண்டுபிடிப்பு play material வாங்கினா ஒரு கண்டுபிடிப்புன்னு  நிதம் ஒரு கண்டுபிடிப்பு நடக்கும் ஆய்வுக் கூடமாகி வருது வீடு.
:)
குழந்தைகள் உலகம் கண்டுபிடிப்புகளால் நிறைந்தும் வழியும் போல.அதே போல கேள்விகளும்,

இந்த egg குள்ள எப்படி எல்லோ பார்ட் white பார்ட்டும் போச்சு.அதுஎதுக்கு ஒன்னா கலக்கல.எப்படியே தனியாவே இருக்கு.

எதுக்கு எல்லாரும் வேற  வேற சாமி கும்பிடுறாங்க.

எல்லாருக்கும் குட்டிபாப்பா இருக்கு நமக்கு மட்டும் எதுக்கு இல்ல.

நான் எப்போ காலஜ் போவேன் 

இந்த நைட் மட்டும் எப்படி கருப்பாகுது.

நமக்கு எதுக்கு ரெக்கை இல்ல?

நீ படிக்கும் போதெல்லாம் என்னை எதுக்கும்மா உனக்குத் தெரியாது ?

நான் எதுக்குமா கருப்பா இருக்கேன் ?

இன்னும் இன்னும் ன்னு நிறையா...


Sunday, June 14, 2015

:)

நான் raymond ஐ sunday class க்கு கிளம்பிக் கொண்டிருந்தேன்.
குளிச்சதும் towel கட்டிய படியே எண்ணை தேய்த்துக் கொண்டிருக்கும் போது
towel ஐ கழட்டிவிட்டான்.
நான்... ஐயே shame shame puppy shame என சொல்லியபடியே towel மறுபடியும் காட்டியாச்சு.
ம்மா..நான் ஒன்னு கண்டுபிடிச்சுட்டேன்.
ம்ம் சொல்லு
ம்மா..
puppy டிரஸ் போடாது அதான் puppy shame
ஆமால்ல
நீ சொல்லுறது சரிதான் தங்கம் (நான்)
ஆனா
 lion tiger monkey லாமும் டிரஸ் போடாது
அதுனால
இன்னைக்கு shame shame lion shame சொல்லலாம்
நாளைக்கு tiger shame
ok வா?
ங்கே ...(நான்)

Saturday, May 9, 2015

...

யாரோ அவனின்  

நிழற்கரம் பற்றி 

கடந்த சாலையின் முடிவில் 

பகிரவழியில்லா நன்றியொன்று

பிரசவிக்கிறது 

Wednesday, March 25, 2015

raymond

raymond எழுதிக் கொண்டிருந்தான் 
ம்மா..
இதை டபுள் வீ  ன்னுதானே 
சொல்லணும் எதுக்கு டபுள் யு ன்னு சொல்லுறோம் 

யோசிச்சாலும் பதில் கிடைக்கப் போறதில்லை அதனால 
நீ வேகமா எழுதி முடியேன்னு கொஞ்சம் அதட்டலா 
சொல்லிகொண்டிருக்கும் போதே 

பக்கத்தில் இருந்த தண்ணீரை குடிக்க ஆரம்பிச்சுட்டான் 

என்னடா?? ன்னு கேட்டால் 

ட்ரிங்க்ஸ் பிரேக் -ன்னு பதில் 
(வேர்ல்ட் கப் -மேட்ச் ல கவனிச்சிருக்கான்)
..........................................................................................................
சண்டே கிளாஸ் போறான் 
பைபிள் வசனம் மனப்பாடம் பண்ண சொல்லுவாங்க 

மெம்மொரி பண்ணுன்னா?என்னம்மா 

மனப்பாடம் பண்ணுறது  

மனப் பாடம்னா?

பாக்காமல் சொல்லுறது raymond 

(நான் திரும்ப திரும்ப சொல்லி அவனும் சொல்லி மனப்பாடம் பண்ணிட்டான்)

கண்ணை இறுக்க மூடிட்டு 
லூக் 1:37
for nothing is impossible with GOD 

இப்போ எதுக்கு கண்ணை மூடுற நீ?

பாக்காமல் சொல்லனும்ல அதான்.
..........................................................................................................

evening walk போகும் போது ஒரு குட்டி பூ கீழ கிடந்தது.
நான் எடுத்து கையில் வச்சுகிட்டேன் 

தனக்குத்தான் வேணும்னு raymond வாங்கிகிட்டான் 

இதுல இருந்துதான் மரம் வருமாம்மா ?

ம்ம் .. இதுல காய் அப்புறம் பழம் 
பழத்துல இருந்து விதை 
விதைல இருந்து மரம் வரும்  

மறுநாள் ஸ்கூல்க்கு போகும் போது 
புறா இறகு ஒன்றை கையில் எடுத்துகிட்டு 
இதுல இருந்து புறா வரும்லன்னு கேட்டான் 

ங்கே.. ன்னு பார்த்தேன் 

உனக்கு தெரியாது.நான் அப்பாட்ட கேட்டுகிறேன்னுட்டான்
......................................................................................................
ம்மா..
எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தா 

நீ ஐஸ்கிரீம் ஸ்பெல்லிங் மனப்பாடமா படிச்சுடு,வங்கித் தர்றேன் 

கோவமா..,அப்போ lion க்கு ஸ்பெல்லிங் சொன்னா சிங்கம் வாங்கித் தருவியோ?
..............................................................................................
இந்த மலையெல்லாம் எப்படி வளந்துச்சு?
மழை பெய்யும் போது தானா வளந்துச்சு 
(அவனே கேள்வி அவனே பதில்)
.............................................................................................

Friday, March 13, 2015

!!..

வெளியில் கருவிழிப் படலம் 
உலகைச் சூழ
நடுவில் வெண்விழிப் படலம்
நிலவென சிரிக்க

இரவின் கண்கள்
அசாதாரணமனவை 

Wednesday, February 18, 2015

-0-


train க்கு wait பண்ணிட்டு இருக்கும் போது பிறவியிலேயே கண்ணு தெரியாதவர்கள் கொண்ட பாடகர் குழுவை சந்தித்தோம்.நிறைய பேசினாங்க.அமைதியாவே கேட்டுட்டு இருந்த raymond,அவுங்கள்ட்ட நேரடியாவே நீங்கள்ளாம் காரெட்டெ சாப்பிடமாட்டீங்களான்னு கேட்டதும் திகைப்பாயுட்டு.
எல்லாருமே சிரிச்சாங்க.அதுல ஒருத்தர் மட்டும் நீ ஒழுங்கா காரெட் சாப்பிடனும் சரியான்னு கேட்டு மறுபடியும் சாதரணமா அனுபவங்களை பேசத் துவங்கீட்டாங்க.இப்போலாம் அவுங்களை பற்றி பேசிக் கொண்டே காரெட் சாப்பிடுறான்.

-0-

ஸ்பெல்லிங் சொல்லிக் கொண்டே(book பார்த்துதான்) இனி alphabets படிக்கணும்ங்கிற வழக்கத்தை கொண்டு வரும் முயற்சியில் முதல் நாளில் ..:,

A for A P P L E

B for ball

C for cat

D for duck

E for elephant ம்மா இந்த elephant ஸ்பெல்லிங் எதுக்கு இவ்வளோ பெருசா இருக்கு 

எதுக்குனா யானை ரெம்ப பெருசுல்ல அதான்.
ஆமாம்மா,பாரேன் பூனை குட்டியா இருக்கும்ல அதான் catன்னு கொஞ்சம் ஸ்பெல்லிங் 

ம்ம் ..:))

-0-

நேற்று கொஞ்சம் feverish ah இருந்துச்சு.
(nursing)படிக்கும் போது வாங்கின ஸ்டெத்தஸ்கோப் வச்சு விளையாண்டுட்டு இருந்த raymond, chestpiece-i என் தலையில் கழுத்தில் வச்சு  நல்லா மூச்சு விடுன்னு சொல்லிட்டு உனக்கு நிறையா காய்ச்சல் இருக்கும்மான்னு சொல்லிட்டே மருந்தும் சொல்லிட்டான் sinarest (அவனுக்கு usual ah கொடுப்பது)

(லேப்-ல இருக்கும் ஸ்டெத் i use பண்ணிக்கிறோம்.தனித்தனியாலாம் எங்களுக்கு இப்போ வாங்க முடியாதுன்னு class ல எல்லாரும் excuse செய்ததுக்கு, பின்னாடி use ஆகும் இப்போ கிளம்புங்கன்னு பிரின்சிபால் சொன்ன நியாபகம் வந்துச்சு)

-0-

அப்பா சிமெண்ட் கரைச்சு உடைஞ்ச இடத்துல பூசிட்டு இருந்தாங்க 
raymond நானும் நானும்னு உள்ள உள்ள போயி விழுந்துட்டு இருந்தான் 

அப்பா கோவமா கையில பட்டால் கை பொத்துப் போகும் தள்ளி நில்லுன்னு சொன்னதும் 

அப்போ,உங்க கைக்கு மாம்ப்பா?

-0-

மதியம் சாப்பிட வரும் தம்பி மறுபடியும் கடைக்கு போக படாதபாடு எல்லாரையும் படுத்துவான்.கிளம்புடா கிளம்புடான்னு எல்லாரும் கதற கதற அவனாட்டுக்கும் இருப்பான்.

ஒருநாள் எல்லாரும் மதியம் சாப்பிடும்போது 
அப்பா raymond-க்கு ஊட்டிக் கொண்டே சாப்பிட்டு முடிச்சதும் குப்புறடிக்க படுக்கணும் இல்லாட்டி அடி விழும்ன்னு சொன்ன நிமிஷம் ,என் தம்பி சரிப்பா 
தந்தை சொல்மிக்க மந்திரமில்லைன்னு சொல்லிட்டே போய் படுத்துட்டான். 

உன்னை சொல்லல.கடைக்கு கிளம்பு இது அப்பா. 
மாப்ள உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயம் ஹ்ம்ம் அப்படி பொலம்பிக்கிட்டே, ஐவின்.. அப்பா கடைக்கு போகட்டுமான்னு தொட்டில் பக்கம் போய் நின்னுகிட்டான்.மாமா இனி ஐவின் சரின்னு  சொன்னாத்தான் கிளம்புவாங்க போலன்னு ஜீவா கொடுத்த timing இன்னும் நச்.

அப்போ ஐவின் பிறந்து 10 நாளாயிருந்தது.

Thursday, February 12, 2015

...

-0-

அதிகாலையிலேயே எழும்பிவிட்ட
குழந்தைகளுக்கு விளையாட
தூங்கும் இரு பொம்மைகள்
அம்மா அப்பா  

-0-

கிச்சு கிச்சு கிச்சு 
சொல்லிக் கொண்டிருக்கும் போதே 
சிரிக்கத் துவங்கும் 
குழந்தைமை .