-1-
தவிர்க்க முடியவில்லை..,
செவியின் கவனம்
குவிகிறது பக்கத்துவீட்டில்!!
"ஒலிக்கும் பிடித்த பாடல்"
-2-
தேவைக்கும் அதிகமாய்
உண்டுவிட்டாளாம்-வாந்தியெடுக்கும்
"பிச்சைக்காரி"
-3-
கூட்டணியுமில்லை..
சத்தமுமில்லை..
"ஒற்றை வளையல்"
-4-
இரசிப்பதை நோக்கி
முன்னேறவேயில்லை.
குற்றம் காண்பதிலேயே..,
சிக்கிக் கொண்ட மனசு!!
-5-
கரையில்..
காயும் சீலைக்காக,
ஆத்தினுள் காத்திருக்கிறாள் அவள்!!
"குளியலின் பெயரில்"
-6-
பாட்டியின் ஆசைமுத்தம்
இனிக்கவில்லை பேரனுக்கு
"கன்னத்தில் வெற்றிலைக்கறை"
12 comments:
சிறு கவிதைகளுக்குள் இவ்வளவு அர்த்தமா? கலக்குறீங்க ரசிகை
எல்லாமே ’நச்’சுன்னு இருக்கு
-3-, -5- கலக்கல் அண்ணி.
நல்ல மாற்றம் ரசிகை கவிதைகளில் எப்பிடி இருந்த நீங்க எப்பிடி இப்படி
வாழ்த்துக்கள்
ஆறும் அருமை.
2,3,4 அதி அருமை.
என் கவிதைகளையும் சற்று நேரம் கிடைத்தால் பாருங்கள்.
ஒலிக்கும் பிடித்த பாடலில்
சிக்கிக்கொண்ட மனசு,
ஒற்றை வளையல்
பிச்சைக்காரியின்
கன்னத்தில் வெற்றிலைகரை...
"எங்க மக்காவை ஆளை காணோம்?"என்று நினைத்து கொண்டுதான் இருந்தேன்.வந்தாச்சா?ஊருக்கு வந்ததும்,போகாத எல்லா கல்யாண வீட்டுக்கும் போய்,மொய் எழுதுறது மாதிரி,விட்டுப்போன எல்லா கவிதைகளுக்கும் மெய் எழுதிட்டீங்க போல?மிகுந்த அன்பும் நன்றியும் மக்கா.
உங்க கவிதைகளுக்கு வருவோம்..
என்ன இப்படி?அடுத்த வருஷம் இன்னியாரத்திற்கு,நேசன் வந்து "இந்த கவிதைக்கு என்னங்க அர்த்தம்?"என்று கேட்பார் போலேயே?அவ்வளவு முதிர்ச்சி ரசிகை கவிதைகளில்!3,4,5,6, ரொம்ப பிடிச்சிருக்கு.ரெண்டாவது யோசிக்க வைக்குது.நேசா,..ஆளு எங்கேயோ போயட்டாப்ள...நல்லா இருங்க!
சில துளிகளில்
ஓடிய ஆறு!!
ரசிகையின் கவிதைகளில்...
இது சரிதானே?
வாழ்த்துக்கள்..
இரசிப்பதை நோக்கி
முன்னேறவேயில்லை.
குற்றம் காண்பதிலேயே..,
சிக்கிக் கொண்ட மனசு!!//
நல்லாயிருக்கு முழுகவிதையும்.
கலக்கல்
கரையில்..
காயும் சீலைக்காக,
ஆத்தினுள் காத்திருக்கிறாள் அவள்!!
"குளியலின் பெயரில்"
all are short and sweet very nice
Post a Comment