Thursday, October 29, 2009

வாசகங்கள்...

-1-
"பயன்படுத்துங்கள் என்னை"
தவறாகப்
புரிந்துகொள்ளப்பட்டது..,
குப்பைத் தொட்டியில்
குழந்தை..!!

-2-
"விளம்பரம்
செய்யாதீர்கள்"- என
விளம்பரம் செய்திருந்தார்கள்..!!

-3-
"இங்கே
சிறுநீர் கழிக்காதீர்கள்"
என்பதற்கு பதிலாக..,
சுவற்றின் வெளிப்புறத்தில்
பதிக்கப்பட்டார்களோ,கடவுளார்கள்..??

-4-
"எச்சில் துப்பாதீர்"
வெற்றிலைக்கறைகளுக்கிடையே..!!

14 comments:

ஒளியவன் said...

-1- அருமை.

Ashok D said...

அன்றாடம் பார்ப்பதுதான் அழகு.

நேசமித்ரன் said...

அருமை.:))

thunukku pola ezhuthaama konjam periya kavithai ezhutha muyarchukkalaamey rasigai !!

:)

பா.ராஜாராம் said...

வாவ்!எல்லாமே பிடிச்சு இருக்கு.மெருகு கூடிக்கொண்டு இருக்கிறது.

velji said...

it happens everywhere!
good writing.

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்தான பதிவு. நானும் சில சமயங்களில் நினைப்பேன், இங்கு சிறுனீர் கழிக்காதீர்கள் என்பதை கழிவறையிலும், கழிவறை என்பதை காம்பவுண்ட் சுவரிலும் ஒட்டினால் நம்ம ஆளுங்க சரியா உபயோகப் படுத்துவார்கள் என்று. நன்றி.

இரசிகை said...

mithran sir.........neenga sonnathu pola yezhutha naan muyarchi seiyuren.

vanthu vaasiththa anaivarukkum anbudan nantriyum..!!

அன்புடன் நான் said...

கவிதை 1 மிகமிக அருமை.
கவிதை 2 மிக அருமை.
கவிதை 3 அருமை.
கவிதை 4 சுமார். வாழ்த்துக்கள்.

சந்தான சங்கர் said...

குழந்தையையே
குப்பை தொட்டியில்
எறியும் மனம் இருக்கும்போது
மாற்ற மூன்றும் நாறியதில்
சொல்ல என்ன இருக்குது தோழி

சமுதாய விழிப்புணர்வு...

வாழ்த்துக்கள்..

இரசிகை said...

சி. கருணாகரசு
thangalin mathippeedukalukku nantri..!!

S.A. நவாஸுதீன் said...

கவிதைகள் அனைத்தும் நல்லா இருக்கு இரசிகை

துபாய் ராஜா said...

சமுதாயச்சிந்தனைகள் அருமை.

வாழ்த்துக்கள்.

நந்தாகுமாரன் said...

மூன்றாம் மற்றும் நான்காவது முரண்கள் மட்டும் நல்லாயிருக்கு ... ஆனால் முழுவதும் கவிதையாயில்லை ஆனாலும் கவிதைக்கு பக்கத்தில் இருக்கின்றன (near poetry)

விஜய் said...

தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன், வாருங்கள்

விஜய்

Post a Comment