யாரும் திட்டாதிங்க...இன்னுமா இதுன்னு.., கஷ்டப்படாதீங்க:)
தாமதமான பதிவுக்கு மன்னியுங்கள் கவிதை(கள்) !!
a-z எழுதவில்லை அதற்கும் சேர்த்து மன்னியுங்கள்...!
அன்பிற்குரியோர் "அன்பில்லாதவர்களும் கூட"
ஆதரவானது "மனிதம் மட்டுமே"
இயல்பானது "மாற்றங்கள்"
ஈட்ட வேண்டியவற்றுள் ஒன்று "பிறரின் நம்பிக்கை"
உண்மையான பொய் "நான் ரெம்ப நல்லவ"
ஊருக்குள் என்னைப் பற்றி "வாயாடி"
எப்போதும் வாயில் "பிடித்த பாடலின் வரிகள்"
ஏதாவது ஒருநாள் தான் "அம்மாட்ட திட்டே வாங்காமல் கழியும்"
ஐ.................... :)"உற்சாகப் பொழுதுகளில் தானாய் உளறலில் வந்துவிடும் ஓர் எழுத்து"
ஒவ்வொருவரிடமும் "ஒரு வியக்கத்தக்க விஷயம் இருக்கும்னு நான்
நம்புறேன்"
ஓதுதல் நன்று -அதனால, "எந்த குழந்தையின் அம்மாவிடம் பேசும்போதும் கண்டிப்பா படிக்க வைங்கன்னு சொல்லும் வழக்கம் உண்டு "
ஒளவை மொழி.. "ஆறுவது சினம்"
ஃ .... "நல்ல படம்"
15 comments:
அன்பிற்குரியோர் "அன்பில்லாதவர்களும் கூட"
;;))super
ஃ .... "நல்ல படம்"
ஓகே... ரைட்டு
Thank u Rasihai
rasithen
vijay
உண்மையான பொய் "நான் ரெம்ப நல்லவ"
ஊருக்குள் என்னைப் பற்றி "வாயாடி"//
நல்லாயிருக்கு.... ரசிகையை ரசித்தேன்.
நல்ல பதில்கள் ரசிகை
ரசிகை
நல்லாயிருக்கு.
ஹை டீச்சர் ரொம்ப நல்லா அ ஆ இ சொல்லித் தர்ரிங்க, நல்லா இருக்கு. எனக்கு பாஸ் மார்க் போடுவிங்களா? இல்லைனா எங்க அப்பா கிட்ட சொல்லிடுவேன்.
எங்களுக்கு இரசிகை தான் தெரியும், வாயாடி வேறையா. இம்ம் யார் மாட்டுனாங்களே. பாவம். ஹா ஹா ஹா.
நல்ல கருத்துக்கள். நன்றி இரசிகை.
அன்பில்லாதவற்கும்
ஆதரவு தரும்
இயல்பு
ஈட்டியது
உண்மையான
ஊக்கம்.
எப்போதும்
ஏதாவது
ஐயபாட்டினை
ஒவ்வொருவரிடமும்
ஓதுதல் நன்று.
ஔவை மொழிபோல்..
நன்றி ரசிகை...
வாழ்த்துக்கள்.
//ஊருக்குள் என்னைப் பற்றி "வாயாடி"//
ரசிகை,
இப்பத்தானே தெரியுது...! சிக்கனமா எழுதும் போதே தெரிஞ்சிருக்கனும். சரி, இப்பவாவது ....!
varukaikku nantri....
inthath thodar pathivai ippo varaikkum rasikkum ullangalukku nantri!!
:)
ஐ!ரசிகையா இது!
verygood! எல்லாம் எழுதணும் மக்கா!பதில்கள் எல்லாம் ரசிக்கும் படி இருக்கு. :-)
nantri rajaram sir.......:)
ஐ!
அ முதல் ஃ வரை அருமை.
Nalla Padivu
Post a Comment