Thursday, March 11, 2010

குளியலறை கவிதைகள்...

நான் குளிக்க
காத்திருக்கும் கடல்..
"ஒரு வாளித் தண்ணீர்"

ஆடை களையும்
நேரத்தில் மீண்டும் அவசரமாய்
சரிபார்த்துக் கொள்ளும் மனம்
"பூட்டிய கதவை"

அங்கமெல்லாம் பரவியிருப்பது
உயிரா?..,உன்நினைவுகளா?..,
தெரியவில்லை,இப்போது அவைகளுடன்
"ஊற்றிய நீரும்"

தன்னை அழுக்காக்காமல்
என் அழுக்கை நீக்கும்
"ஒரு சிறு சோப்புத் துண்டு"

மேனியில் வழியும்
மேகங்கள்..
"சோப்பு நுரைகள்"

உலரும் நுரைக்குள்
உன் ஈரநினைவுகளுடன் நான்..,
எங்கோ கேட்கும்
"உனக்குப் பிடித்த பாடல்"

தேய்த்துக் குளிக்கையில்
விரல் பட்டதால் - தன்
தேகம் சிலிர்த்துச் சினுங்கும்
"கொலுசு முத்து"

ஆசையாய்ப் பார்க்கும்
மஞ்சளை..அவஸ்த்தையாய்ப்
பார்க்கும் நான்.
"அணியயிருக்கும் வெள்ளை சீருடை"

காற்றிக்கும் விடுதலை..
"தெறித்த துளிகள் பட்டு
உடையும் நீர்க் குமிழி"

என்னைக் கவனிக்காமல்
கட்டுமான பணியில்
கவனமாய் ஈடிபட்டிருக்கும்
"கண்ணியமான எட்டுக்கால் பூச்சி"

சின்ன சின்ன
சுனாமிகளைத் தரும் இவள்,
எங்களுக்கான நிலநடுக்கம் - என்றபடி
"நகரும் எறும்புகள்"

முடித்த பின்னர்தான்
ஞாபகத்திற்கு வருகிறது..
வழக்கம் போல எடுக்க
"மறந்த டவல்"

என் உடைதான்
அதன் சமாதியாம்
"குளித்தபின் வழிய மறுக்கும் துளி"

மாற்றிய உடையுடன்
கண்ணாடி முன் நான்..
அவசரக் குளியலின்
அர்த்தம் சொல்லி சிரிக்கும்,
"காதோர சோப்பு நுரை"

இப்படியாய் முடிகிறது
என்...
"கவிதைக் குளியல்"

34 comments:

அகல்விளக்கு said...

வாவ்....

அருமை.....

மெல்லினமே மெல்லினமே said...

kuzhiyal kavithai asathal rasigai. Satharana
kuzhiyala vachi oru kavithai ezhuthitingale.
Unga kavithai enakku pidikkuk. Ennoda spottukkum vanthuttu pongalen.

ஜெனோவா said...

இரண்டு மாத இடைவெளிக்குப் பின் வரும் முதல் கவிதையே அதகளமாக இருக்கிறதே ... அசத்துங்கள் ;-)

நன்றாக இருந்தது !

சுடுதண்ணி said...

மிக அருமை. மிகவும் ரசித்தேன் :). பகிர்வுக்கு மிக்க நன்றி.

சத்ரியன் said...

//என்னைக் கவனிக்காமல்
கட்டுமான பணியில்
கவனமாய் ஈடிபட்டிருக்கும்
"எட்டுக்கால் பூச்சி"//

கவிதைக் கட்டுமானத்தின் பலம்மிக்க தூண்களாய்... மேற்சுட்டிய வரிகள்.

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

///என்னைக் கவனிக்காமல்
கட்டுமான பணியில்
கவனமாய் ஈடிபட்டிருக்கும்
"கண்ணியமான எட்டுக்கால் பூச்சி"//

மிக அருமை..!

D.R.Ashok said...

//என் உடைதான்
அதன் சமாதியாம்
"குளித்தபின் வழிய மறுக்கும் துளி"//

:)

யாதவன் said...

குட்டி குட்டி கவிதைகள் நெஞ்சை தொட்டு தொட்டு செல்கின்றன
தொடர்ந்தும் எழுதுங்க்கள்

நேசமித்ரன் said...

உலரும் நுரைக்குள்
உன் ஈரநினைவுகளுடன்
என் உடைதான்
அதன் சமாதியாம்
"குளித்தபின் வழிய மறுக்கும் துளி"

இடைவெளி காலத்தில் எவ்வளவு மாற்றம் மொழியில்

விடுபட்ட ஒவ்வொரு கவிதையும் வாசிக்கப்பட்டு கருத்து சொல்லப்படும்போது எய்தும் ஒரு பிரம்மிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை ரசிகை மிக்க நன்றி
தொடர்ந்து எழுதுங்கள் எழுதுவது ஒன்றே நமக்கான எழுத்தை நம்மிடம் கொண்டு சேர்க்கும் என்பதை நம்புபவன் நான் உங்களுக்கும் ....

vidhusha said...

//அங்கமெல்லாம் பரவியிருப்பது
உயிரா?..,உன்நினைவுகளா?..,
தெரியவில்லை,இப்போது அவைகளுடன்
"ஊற்றிய நீரும்//

//உலரும் நுரைக்குள்
உன் ஈரநினைவுகளுடன் நான்..,
எங்கோ கேட்கும்
"உனக்குப் பிடித்த பாடல்"//


//தேய்த்துக் குளிக்கையில்
விரல் பட்டதால் - தன்
தேகம் சிலிர்த்துச் சினுங்கும்
"கொலுசு முத்து"//


immoondrum enaku migavum piditha thangalathu varigal.vaasitha udane oohh!! poda vaithana. matra anaithum kuda arumai.thangalathu kavithai sarathil nanainthen. nandri rasigai...

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு ரசிகை!

:-)

மாயாவி said...

***அவசரக் குளியலின்
அர்த்தம் சொல்லி சிரிக்கும்,
"காதோர சோப்பு நுரை"***

அருமையாய் இருக்கிறது. வாழ்த்துகள்.

தோழி said...

நல்லா இருக்குங்க... ரசிகையின் எழுத்துக்களை நான் ரசித்தேன்...

சே.குமார் said...

வாவ்..!

அருமை..!

ரசித்தேன்..!

விஜய் மகேந்திரன் said...

vikatanukku anuppunga kavithaikalai rasigai,mukkiyama ithai

இரசிகை said...

vaasithu vaazhthiya aniththu ullangalukkum anbum..nantriyum...:)

லதானந்த் said...

உண்மையைச் சொல்கிறேன். மிகவும் அற்புதமாயிருக்கிறது. இதே சூழ்நிலையில் கவிதை எழுத ஆசை வந்து எழுதியும் ஆயிற்று. இடுகையிட்டால் டின் கட்டிவிடுவார்கள்.

இரசிகை said...

NANTRI LATHANANTH SIR.....:)

"உழவன்" "Uzhavan" said...

//
நான் குளிக்க
காத்திருக்கும் கடல்.. //
ஆரம்பத்திலேயே மனம் சிலிர்க்க ஆரம்பித்துவிட்டது.. மிக அருமையான கவிதை. வாழ்த்துகள்!

Priya said...

"கவிதை குளியல்" மிக அழகான கவிதையாக இருக்கிறது!ரசித்தேன்!

சே.குமார் said...

எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html


மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

நட்புடன்,

சே.குமார்.

Chitra said...

மிகவும் அழகாக, ரசித்து ரசித்து எழுதிய வரிகள்.

r.selvakkumar said...

குளியலே ஒரு சுகம். அதை மேலும் இரசனைக்கு உரியதாக்கி இருக்கிறது உங்கள் கவிதைகள்!

இரசிகை said...

nantri...kumar chitra selva &priya...:)

அகநாழிகை said...

நல்லாயிருக்குங்க கவிதைகள்.

ரசிகன்! said...

adada!!!

padma said...

செமை ரசிகை தாங்க நீங்க

மாரி-முத்து said...

ம்ம்....வழக்கம் போல 'நச்' கவிதைகள்...
கடைசியில் சொன்னீங்க பாருங்க
கலக்கலாய்....
//அவசரக் குளியலின்
அர்த்தம் சொல்லி சிரிக்கும்,
"காதோர சோப்பு நுரை"//

r.v.saravanan kudandhai said...

ஒரு குளியலறை செயல்களை இவ்வளவு அழகான கவிதையாக்க முடியுமா

வாழ்த்துக்கள்

தன்னை அழுக்காக்காமல்
என் அழுக்கை நீக்கும்
"ஒரு சிறு சோப்புத் துண்டு

kalakkal

r.v.saravanan kudandhai said...

அவசரக் குளியலின்
அர்த்தம் சொல்லி சிரிக்கும்,
காதோர சோப்பு நுரை

மிக மிக அருமை

Nundhaa said...

கொடுமை :(

இரசிகை said...

nantrikal pala........vanthu vaasiththa anaivarukkum!

sirappaaga nundha sir-ku:)

சுந்தர்ஜி said...

ஒரு குளியலறைக் குளியல் நதியில் ஒரு பெண் நீராடும் நளினத்தையும்,வனப்பையும் தூக்கி சாப்பிட்டுத் திகைக்க வைத்தது.ஒரு புள்ளியைக்கூட மிச்சம் வைக்காத பரிபூர்ணப் பார்வை கொண்ட க்ளாஸ் கவிதை.சபாஷ் ரசிகை.

அன்பரசன் said...

பிரமாதம்

Post a Comment