Wednesday, April 7, 2010

ஒவ்வொரு மனதிடமும்...

Happy world health day to all........!!
முன்குறிப்பு:வேலை பார்க்கும் போது, என்னோட ஒரு மாணவிக்கு மன நிலை சரியில்லாமல் போனபோது..,(நீ...லாம் சொல்லிக் கொடுத்தா இப்படித்தான் ஆகும்னு என் தம்பி கலாயிச்சதெல்லாம் அப்போதான்)
அவளுடன் psychiatric hospital - லில் ஒரு இரவும், இரு பகல்களும்.., தங்க வேண்டியிருந்தது.அப்போ,இரவெல்லாம் பிற நோயாளிகளின் உளறல்களும் என் மாணவியின் நடவடிக்கைகளும் என் உறக்கத்தைப்றித்தன...,பின்வரும் வரிகளைக் கொடுத்தன..!

மரிக்கும் முன்
சிரி!

மனம் பிழைக்க
அழு!

பிழையானாலும்
பேசு!

கேள்விகள்
கேளு!

பதில்கள்
தேடு!

உன் செயல்
யோசி!

வாழ்க்கையை
அழை!

தீயதை
மற!

குற்றம்
களை!

உரியதை
எடு!

மீதியைக்
கொடு!

கபடம்
விடு!

எண்ணம்
தெளி!

கிடைத்தவை
வாசி!

நல்லவை
காண்!

தீயவையும்
அறி!

விழு பின்
எழு!

கட்டளை
(கைக்)கொள்!

தோல்வியில்
கல்!

வண்ணத்துப் பூச்சியாய்
நிறம் கொள்!

வானவில்லாய்
வளை!

தும்பி போல்
தேன் காண்!

கொள்கை
கொள்!

உன் கருத்தை
சொல்!

வன்மை
உடை!

மென்மை
பேண்!

உள்ளம்
திற!

உணர்வுகள்
பிரி!

எல்லாம்
நேசி!

ஆபத்திலாவது
விழி!

செய்திகள்
சுவை!

கீதம்
இசை!

பிறர் இதயம்
அசை!

பறவையாய்
பற!

பூக்கள்
பார்!

நிலவையும்
நினை!

குழந்தைகள்
ரசி!

பசித்தாலும்
ருசி!

ருசிக்காவிட்டாலும்
புசி!

உழைத்தே
தேய்!

உண்மைக்குள்
தோய்!

உறவுகள்
இணை!

நம்பிக்கை
வளர்!

நிகழ்வுகள்
பகிர்!

இயற்கையோடு
புணர்!

மனிதம்
உணர்!

இன்னும் ஆயிரம்....

பின்.,
உன் உருவமில்லா மனம்
நோயாகாது..!
நிச்சயமாய்
பூரணமாகும்..!!

மனதைப் பிணமாக்காதே - அதற்கு..,
உயிரூட்டு!
உரமேற்று!

உள்ளத்தால்
உலகம் காண்..!

மனிதனாகவேவாவது
மரி....!!

57 comments:

Chitra said...

அருமை என்ற ஒற்றை சொல்லில், இந்த கவிதைக்கு பின்னூட்டம் போட இயலாது. simply superb! ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், மேலோங்கி நிற்க வேண்டிய கருத்துக்களை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

மெல்லினமே மெல்லினமே said...

kaliyuga avvaiye vazhga!
Aram seyya virumbu!
Aaruvathu sinam!
Iyalvathu karavel!
Ha!Ha!Ha! He..He..

அகல்விளக்கு said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை...

திகைத்து நிற்கிறேன்...

திகழ் said...

அற்புதம்

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு ரசிகை!

//(நீ...லாம் சொல்லிக் கொடுத்தா இப்படித்தான் ஆகும்னு என் தம்பி கலாயிச்சதெல்லாம் அப்போதான்//

அட..தம்பி நம்மாள். :-)

கனிமொழி said...

Ahaaaaaaa.......
Ipdi oru kavithai ithuvaraikkum padichathey illa...
:-)
Really superb....

Anonymous said...

today onwards

complan surya

ungal kavithiku

rasigar agivittar

enbathi thirivithukolkirom..

alaga thirukukural pola oru kavithai..

wow super;

vasika masanthosmaga erunthathu..

neriya kavi eluthunga

kavthiku
rasigan

varuthapadatha vassippor sangam
complan surya
nandri
valga valamudan

நேசமித்ரன் said...

//(நீ...லாம் சொல்லிக் கொடுத்தா இப்படித்தான் ஆகும்னு என் தம்பி கலாயிச்சதெல்லாம் அப்போதான்//

அட..தம்பி நம்மாள். :-)//

அப்ப நானு மக்கா..?

ஆத்தீ சூடி நலம் செய்த

கை ரா சி
ர சி கை
கை ரு சி

லதானந்த் said...

ரசிகைபோல் எழுது!

seemangani said...

ஆஹா...அழகு அருமை அர்த்தம் நிறைந்த பதிவு...அசத்தல்...

திகழ் said...

உங்களின் வரிகளைப் படிக்கையில் வான் புகழும் வள்ளுவத்திற்கு வாலி எழுதிய விரிக்குறள் தான் நினைவிற்கு வருகிறது
.............................

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (குறள் 35)

பொறாமையைப் -
பொடி;
அவாவை -
அடி;
வெகுளியை -
விடு ;
சுடு சொல்லைச் -
சுடு ;

நான்கும்
நான்கு தீங்கு ;அவற்றின்
நிழலில்
நிற்காமல் நீங்கு !

நான்கையும் புறம் - தள்ளி
நடத்துதல் அறம் !

.............................

நல்ல தமிழையும் நயத்தையும் தங்களின் வரிகளில் கண்டேன்

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்

நன்றிகள்

அன்புடன்
திகழ்

இரசிகை said...

//

remba nantri chtra......:)

//
மெல்லினமே மெல்லினமே said...
kaliyuga avvaiye vazhga!
Aram seyya virumbu!
Aaruvathu sinam!
Iyalvathu karavel!
Ha!Ha!Ha! He..He..
//
:)
nantringa..!

//
அகல்விளக்கு said...
என்ன சொல்வதென்று தெரியவில்லை...

திகைத்து நிற்கிறேன்...
//

nantri ahal........:)

//
திகழ் said...
அற்புதம்
//
nantri thikazhl...!

//
பா.ராஜாராம் said...
ரொம்ப நல்லாருக்கு ரசிகை!

//(நீ...லாம் சொல்லிக் கொடுத்தா இப்படித்தான் ஆகும்னு என் தம்பி கலாயிச்சதெல்லாம் அப்போதான்//

அட..தம்பி நம்மாள். :-)
//
nantri rajaram sir....:)
yennai yethuvum sollurathunna...avanukku halva saappidurathu mathiri.
mm.....ungaal thaan:)

//
கனிமொழி said...
Ahaaaaaaa.......
Ipdi oru kavithai ithuvaraikkum padichathey illa...
:-)
Really superb....
//
mikka santhosham nantriyum kooda!

//complan Surya said...
today onwards

complan surya

ungal kavithiku

rasigar agivittar

enbathi thirivithukolkirom..

alaga thirukukural pola oru kavithai..

wow super;

vasika masanthosmaga erunthathu..

neriya kavi eluthunga

kavthiku
rasigan

varuthapadatha vassippor sangam
complan surya
nandri
valga valamudan
//

nantri..........:)

//
நேசமித்ரன் said...
//(நீ...லாம் சொல்லிக் கொடுத்தா இப்படித்தான் ஆகும்னு என் தம்பி கலாயிச்சதெல்லாம் அப்போதான்//

அட..தம்பி நம்மாள். :-)//

அப்ப நானு மக்கா..?

ஆத்தீ சூடி நலம் செய்த

கை ரா சி
ர சி கை
கை ரு சி
//

vaarththaikalin sollaadal...nice:)

appuram.....
neenga illaamalaa..?.....:)

//
லதானந்த் said...
ரசிகைபோல் எழுது!
//
remba periya vaarththainga.........!
nantri..:)

//
seemangani said...
ஆஹா...அழகு அருமை அர்த்தம் நிறைந்த பதிவு...அசத்தல்...
//
nantri.............:)

//
திகழ் said...
உங்களின் வரிகளைப் படிக்கையில் வான் புகழும் வள்ளுவத்திற்கு வாலி எழுதிய விரிக்குறள் தான் நினைவிற்கு வருகிறது
.............................

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (குறள் 35)

பொறாமையைப் -
பொடி;
அவாவை -
அடி;
வெகுளியை -
விடு ;
சுடு சொல்லைச் -
சுடு ;

நான்கும்
நான்கு தீங்கு ;அவற்றின்
நிழலில்
நிற்காமல் நீங்கு !

நான்கையும் புறம் - தள்ளி
நடத்துதல் அறம் !

.............................

நல்ல தமிழையும் நயத்தையும் தங்களின் வரிகளில் கண்டேன்

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்

நன்றிகள்

அன்புடன்
திகழ்
//
remba nantri..........:)

vaali-yin virikural arimukaththirkum pakirvukkum nantri...thikazhl!

விக்னேஷ்வரி said...

ரொம்ப அழகா இருக்கு ஒவ்வொரு வரியும்.

சே.குமார் said...

azhagana varikal.

ovvonrum vazhkkaiyin arththam sollukirathu.

great rashigai.

சத்ரியன் said...

//தீயவையும்
அறி!//

ஆஹா...! தமிழுக்கு இன்னொரு ஒளவையார் கிடைச்சிட்டாங்க.

Anonymous said...

NEENGALUM ELUNTHUNGA PADINMA VAYATHU THODAR..

EPPADIKU

V.V.S SANGAM.

Anonymous said...

//தீயவையும்
அறி!//

ஆஹா...! தமிழுக்கு இன்னொரு ஒளவையார் கிடைச்சிட்டாங்க.

---paarunga evangalku ellam ungala patti aakinathila avlo santhosam...

ethalam tappu...

Priya said...

வாவ்... சூப்பர்ப்!

இரசிகை said...

//விக்னேஷ்வரி said...
ரொம்ப அழகா இருக்கு ஒவ்வொரு வரியும்.
//
nantringa.....!

//
சே.குமார் said...
azhagana varikal.

ovvonrum vazhkkaiyin arththam sollukirathu.

great rashigai.
//
nantringa.........!

//
சத்ரியன் said...
//தீயவையும்
அறி!//

ஆஹா...! தமிழுக்கு இன்னொரு ஒளவையார் கிடைச்சிட்டாங்க
//
ok peraandi...:)

//
Complan Surya said...
NEENGALUM ELUNTHUNGA PADINMA VAYATHU THODAR..

EPPADIKU

V.V.S SANGAM.
//

azhaippuku nantri..
kandippa yezhuthuren..
unga valaith thalathil neenga yezhuthiyirukkeengalaa?naa vanthu paathen illaiye.

//
Complan Surya said...
//தீயவையும்
அறி!//

ஆஹா...! தமிழுக்கு இன்னொரு ஒளவையார் கிடைச்சிட்டாங்க.

---paarunga evangalku ellam ungala patti aakinathila avlo santhosam...

ethalam tappu...
//

nadakkap pora vishayam thaane..,
yenna ippove solleettaanga...
paravaayilla surya,athuvum
nallaathaan irukku:)

//
Priya said...
வாவ்... சூப்பர்ப்!
//

vaanga priya.., nantriyum kooda!

"உழவன்" "Uzhavan" said...

// மனிதனாகவேவாவது
மரி....!!//
 
இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு.
மனதைப் பன்படுத்தும் வரிகள். அருமை

துபாய் ராஜா said...

மாந்தர் அனைவரும் மனதில் கொள்ள வேண்டிய அருமையான வாசகங்கள்.

தமிழ் உதயம் said...

முதலில் சாதாரணமாக, வேகமாக வாசித்தவன் - பிறகு நிதானித்து, உணர்ந்து வாசித்தேன். அருமை ரசிகையே.

Anonymous said...

azhaippuku nantri..
kandippa yezhuthuren..
unga valaith thalathil neenga yezhuthiyirukkeengalaa?naa vanthu paathen illaiye.
---eppadi erukumnu kekeren..nan chinna pillinga..athupola padivu elutha experience venum..hmm athuvari vasangana erukiren..neengal padividungal.pinnodatm idukiren..

ungal varukikum karuthukum mikka nandri..nijama padivu pathvai eppdi eluthuvathu patri thiriavillai.thirinthukondu muyarchikren.

unga karutthu paricelika patu udanadiya amulukku varukirathu..

nandri valga valamudan.

ர‌கு said...

எல்லாமே ந‌ல்லாருக்குங்க‌, ஆத்திச்சூடி வாசிச்ச‌ ஃபீல் :)

அகநாழிகை said...

வாசிக்க நல்லாயிருக்கு.
0
இரண்டு விஷயங்கள்
1. வரிகளை ஏன் இந்த அளவுக்கு ஒடிக்கணுமா?
2. மரிக்கும் போது எப்படி சிரிக்க முடியும்?

இரசிகை said...

//
"உழவன்" "Uzhavan" said...
// மனிதனாகவேவாவது
மரி....!!//

இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு.
மனதைப் பன்படுத்தும் வரிகள். அருமை
//
nantri uzhavan!

//
துபாய் ராஜா said...
மாந்தர் அனைவரும் மனதில் கொள்ள வேண்டிய அருமையான வாசகங்கள்.
//
nantri raja....sir!

//
தமிழ் உதயம் said...
முதலில் சாதாரணமாக, வேகமாக வாசித்தவன் - பிறகு நிதானித்து, உணர்ந்து வாசித்தேன். அருமை ரசிகையே.
//
m.....nantringa..
muthal varukaikkum!

//
Complan Surya said...
azhaippuku nantri..
kandippa yezhuthuren..
unga valaith thalathil neenga yezhuthiyirukkeengalaa?naa vanthu paathen illaiye.
---eppadi erukumnu kekeren..nan chinna pillinga..athupola padivu elutha experience venum..hmm athuvari vasangana erukiren..neengal padividungal.pinnodatm idukiren..

ungal varukikum karuthukum mikka nandri..nijama padivu pathvai eppdi eluthuvathu patri thiriavillai.thirinthukondu muyarchikren.

unga karutthu paricelika patu udanadiya amulukku varukirathu..

nandri valga valamudan.
//
ok....!

//
ர‌கு said...
எல்லாமே ந‌ல்லாருக்குங்க‌, ஆத்திச்சூடி வாசிச்ச‌ ஃபீல் :)
//

vaanga ragu..
unga thalathirku vanthu vaasikkum pothu niraiya siruchchen:)
vaasippukum muthal varukaikkum nantri!

இரசிகை said...

//அகநாழிகை said...
வாசிக்க நல்லாயிருக்கு.
0
இரண்டு விஷயங்கள்
1. வரிகளை ஏன் இந்த அளவுக்கு ஒடிக்கணுமா?
2. மரிக்கும் போது எப்படி சிரிக்க முடியும்?
//
vaasikka nallaayirukkunu sonnathukku remba nantringa sir...!

visham 1:
ippadiththan yezhuthanumnu naan yezhuthala..
athu thaanaa amainjathu.
ore neraththil kada kadanu yezhuthitten..
appuram yentha thiruththamum seiyavillai.
osaikal onnu pola mudiyurathu pola mattum rearrange seiyunnu appa sonnaanga..athaiyum kooda kekkala.

visayam 2:

marikkum MUN siri!
ippadithaan naan yezhuthiyirukken.
MUN - appaninaa..,vaazhvirkum saavirkum idaippatta pozhuthil nuthan naan mean pannuren

naan paaththa niraiya peru sirikkirathey illainga....
saththamaa sirikkirathinaala niraiya nalla visayam udambukkullaiyum manasukkullaiyum nadakkuthaanga.athaith thaan solla muyarchi seithenga.

marikum POTHU siri nu sollavaralai.marikkum POTHUM siri-appadi sonnaalum thappillainga.sirichutte seththu porathukkum koduththu vachchurukkanum thaane!yella kadamaikalaiyum niraivaa mudicha oru panpatta manushanaala athu mudiyumnuthaan naan ninaikkiren!

pathil lil thappu irunthaa perusaa yeduththukkaatheenga ..

nantri sir:)

இரசிகை said...

//அகநாழிகை said...
வாசிக்க நல்லாயிருக்கு.
0
இரண்டு விஷயங்கள்
1. வரிகளை ஏன் இந்த அளவுக்கு ஒடிக்கணுமா?
2. மரிக்கும் போது எப்படி சிரிக்க முடியும்?
//

marupadiyum..

1.odikkalaam odikkak koodaathungira arithalum thelivum yenakku kidaiyaathunga...
sollik kodunga kaththukiduren:)

2.vaaramaayiram padathil..
appa surya..,
sirichutte thaanga saavaar.
athu oru arumaiyaana tharunama aakidumla!!

kartin said...

wow!!

//பிறர் இதயம்
அசை//

my favourite :)

Anonymous said...

hilo hilo....rasigai madam

ethu ellam tappu eppdiey..padil chollikitu eruntha epo adutha padivu varum..

ungal padivukkga engal v.v.sangam katukonduerukirathu..

nandri valga valamudan..

kavithai varatha kovathoda
oru vasagan.
complan surya..

(pinkurippu thangal vendukolin udathviyila valaipakkam matra muyachi cithu eullen..thavarugala erunthal suttikattavum..ennai membarthu udavum..)
thank you teacher

அகநாழிகை said...

உங்கள் மின்னஞ்சல் முகவரி தர இயலுமா?
aganazhigai@gmail.com

Nundhaa said...

எரிச்சல் :(

இரசிகை said...

nanatri...kartin:)

vaanga surya...yezhuthum pothu post seiyuren.

//
அகநாழிகை said...
உங்கள் மின்னஞ்சல் முகவரி தர இயலுமா?
aganazhigai@gmail.com
//
sorry sir..appadillaam venaamnu naan ninaikkiren..thavaraka purinthu kolla venaam.

//
Nundhaa said...
எரிச்சல் :(
//
:)

iyo......paavam neenga.
menakkittu vanthu..., kashttap pattuttu poka vendiyathaa pochu..i feel sorry about it:(

மைதிலி கிருஷ்ணன் said...

அருமையான வரிகள்.. அசந்து போய்விட்டேன் இரண்டு வார்த்தைகளில் தத்துவம்... வாழ்த்துக்கள் தோழி

ரசிகன்! said...

:)

கொல்லான் said...

/மென்மை
பேண்!//
நல்ல சொல்லாடல்.
தொடருங்கள்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

+Ve Anthony Muthu said...

//மனதைப் பிணமாக்காதே - அதற்கு..,
உயிரூட்டு!
உரமேற்று!

உள்ளத்தால்
உலகம் காண்..!//

நான் நேசிக்கும் வரிகள். நன்றி!

கவிதன் said...

இது என்ன திருக்குறளின் புது வடிவமா? பிரமிக்க வச்சிட்டீங்க ரசிகை!!!
அற்புதம் !!!

வாழ்த்துக்கள்!

பா.ராஜாராம் said...

நந்தா..
//எரிச்சல்..//
நந்தாவிற்கு கொம்பு வந்தாச்சு,
.
வெறும் கடமுடாவா கவிதை?

பிள்ளைகள் விளையாடும் வீட்டில்...

என்ன நந்தா நீங்க?

இரசிகை said...

//
மைதிலி கிருஷ்ணன் said...
அருமையான வரிகள்.. அசந்து போய்விட்டேன் இரண்டு வார்த்தைகளில் தத்துவம்... வாழ்த்துக்கள் தோழி
//

nantri maithily...muthal varukaikkum vaasippukkum:)

//
ரசிகன்! said...
:)
//

:)

//
கொல்லான் said...
/மென்மை
பேண்!//
நல்ல சொல்லாடல்.
தொடருங்கள்.
//

nantri kollaan..........!

//
www.bogy.in said...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in
//

nantri www.bogy.com

//
+Ve Anthony Muthu said...
//மனதைப் பிணமாக்காதே - அதற்கு..,
உயிரூட்டு!
உரமேற்று!

உள்ளத்தால்
உலகம் காண்..!//

நான் நேசிக்கும் வரிகள். நன்றி!
//

nanatri antony sir......:)

//
கவிதன் said...
இது என்ன திருக்குறளின் புது வடிவமா? பிரமிக்க வச்சிட்டீங்க ரசிகை!!!
அற்புதம் !!!

வாழ்த்துக்கள்!
//

nanatri kavithan...........!

//
பா.ராஜாராம் said...
நந்தா..
//எரிச்சல்..//
நந்தாவிற்கு கொம்பு வந்தாச்சு,
.
வெறும் கடமுடாவா கவிதை?

பிள்ளைகள் விளையாடும் வீட்டில்...

என்ன நந்தா நீங்க?
//

yenna sollanu theriyala......:)
naan remba santhosap pattennu unmaiya solleedavaa?...
"niraiya nantrinu" 'ore' vaarththaiyil sorry sorry 'irande' vaarththaiyil mudichchukkavaa?

azhak koodaathunnu pidivaathamaa irukkum nilaiyil.., aaruthalaa oru anbaana kaikal nammai pidikkum pothu thaana vazhiyum kaneerai thadukka mudivathillai...athu polathaan unaruren:)

[o...appo, nunda sir in pinnoottam paarththu azhukai vanthuchchaanellaam kindal seiyak koodaathu...,rajaram sir:)........]

ITHAI VITTUDALAAM....OK VAA...:)

பா.ராஜாராம் said...

ரசிகை,

கவிதை/பின்னூட்டதுக்கெல்லாம் அழக்கூடாது.சிரிச்சிக்கிட்டே சமர்த்தா தூங்கிப் போயிரனும்.

ஒரு விஷயம்,

நந்தா,நேசமித்திரன் மாதிரி one of the great poet. also,strait.

நம் கவிதைகளை பொது வெளியில் வைக்கும் போது எல்லாவிதமான கருத்துக்களையும் தாங்கனும் பாஸ். :-)

இரசிகை said...

yes BOSS...:)
naanum appadiththaan yeduththukitten......
nunda sir in kavithaikalaiyum padichchirukken.pidikkavum seiyum.
avarin pinnoottam paathikkala...

kavalai padannu yenakku niraiya vishayangal irukku sir...:)
irunthaalum,sollura vithama solliyirunthaal maruththudavaa poromnu mattum thonuchchu.

maththapadi samarththaathaan purinjukkitten.

nantri raja ram sir...:)

இரசிகை said...

//

//
பா.ராஜாராம் said...
நந்தா..
//எரிச்சல்..//
நந்தாவிற்கு கொம்பு வந்தாச்சு,
.
வெறும் கடமுடாவா கவிதை?

பிள்ளைகள் விளையாடும் வீட்டில்...

என்ன நந்தா நீங்க?
//

yenna sollanu theriyala......:)
naan remba santhosap pattennu unmaiya solleedavaa?...
"niraiya nantrinu" 'ore' vaarththaiyil sorry sorry 'irande' vaarththaiyil mudichchukkavaa?

azhak koodaathunnu pidivaathamaa irukkum nilaiyil.., aaruthalaa oru anbaana kaikal nammai pidikkum pothu thaana vazhiyum kaneerai thadukka mudivathillai...athu polathaan unaruren:)

[o...appo, nunda sir in pinnoottam paarththu azhukai vanthuchchaanellaam kindal seiyak koodaathu...,rajaram sir:)........]

ITHAI VITTUDALAAM....OK//

yeththanai peru(nunda's comment)vaasichchuttu poiyuppaanga..
aanaal athai ungalukkku mattum thaane kekkanumno/sollanumno thoniyirukku.
appadi mattume yosichchu.., yennul vantha mana niraivuthaan itha pinnoottaththil pathilaa irukku.

verethuvum illai....:)

nantri raja ram sir...!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒவ்வொரு வரியிலும் உண்மை தொனிக்கிறது. மிக மிக அருமை.

பா.ராஜாராம் said...

verygood!

go ahead..

RaGhaV said...

//உள்ளத்தால்
உலகம் காண்..!//

அருமை.. :-))

இரசிகை said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
ஒவ்வொரு வரியிலும் உண்மை தொனிக்கிறது. மிக மிக அருமை.
//

muthal varukaikku nantri...amiththumma:)

//
பா.ராஜாராம் said...
verygood!

go ahead..
//

kandippaa..
thank you sir!

//
RaGhaV said...
உள்ளத்தால்
உலகம் காண்..!//

அருமை.. :-))
//
nantri ragav..!
ungalin irndu pullik kolangal nallaayirukkum.

r.v.saravanan kudandhai said...

உன் உருவமில்லா மனம்
நோயாகாது..!
நிச்சயமாய்
பூரணமாகும்..!!

அருமை

r.v.saravanan kudandhai said...

மாணவி குணமாகி விட்டார்களா

r.v.saravanan kudandhai said...

நன்றி எனது வலை தளத்திற்கு வருகை தந்ததற்கு தொடருங்கள்

மாணவி குணமாகி குணமடையவில்லை என்று நீங்கள் தெரிவித்திருப்பது

மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது
கடவுள் அவருக்கு துணை இருப்பாராக

மெல்லினமே மெல்லினமே said...

Ullam enbathu ulagamagalam!
engaeyo ketta padal!

Rajesh V said...

அருமை.. வாழ்த்துக்கள் ..

பிரியமுடன் பிரபு said...

மனிதனாகவேவாவது
மரி....!!
////
ம் சூப்பர்

சுந்தர்ஜி said...

ரசிகை.ஒங்களோட profile என்னன்னு சொன்ன பதிவு.இப் பதிவில் உங்களை யாரென்று தெரிந்துகொண்டேன்.சிந்தனையும் தெளிவும் பக்கம் பக்கம் நிற்கின்றன.அற்புதம்.பிடியுங்கள் குறிஞ்சி மலர் கொண்டு கட்டிய ஒரு பூங்கொத்து.

goma said...

நான் என் அனுபவ வரிகளை இணைக்கலாம் என்று பார்த்தால் எதையும் விட்டுவைக்காமல் எல்லவற்றையும் தேன் சொட்ட சொட்ட பிழிந்து விட்டீர்களே.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.

Post a Comment