Friday, May 7, 2010

மழை நாளில்...

வெளியே மழை.
உள்ளே நான்.
இருவருக்குமிடையே
சிக்கித் தவிப்பதாய் உணர்த்தின..,
மூடாக்கதவருகே ஒ(ப)துங்கிய
ஈர ஜோடிச் சிட்டுக்குருவிகள்.

நெல்மணிகள் எடுக்கத்தான்
எத்தனித்தேன் - அவைகளோ
பறக்க எத்தனிக்கின்றன.
அமைதியாகின்றேன்.

விருந்தாளிகளைக்
கவனிக்காத
எனக்கு மட்டும் எதற்கு?..
கோப்பையில் தேநீர்
ஆறிப்போக விட்டுவிட்டேன்.

நிர்ச்சலனமாய்
நாங்கள்..
சலசலக்கிறது
மழை..

மூவருமாய் மழை
பார்த்தோம்.
இடையிடையே..,
நான் அவற்றையும்..
அவை என்னையும்..

இன்னுமாய்..,
ஒன்றையொன்று
அவை பார்த்துக்கொண்டது,
மழையை விட அழகாயிருந்தது எனக்கு..!!

35 comments:

அகநாழிகை said...

அருமை.

க ரா said...

/இன்னுமாய்..,
ஒருவரையொருவர்
அவைகள் பார்த்துக்கொண்டது,
மழையை விட அழகாயிருந்தது எனக்கு..!!
//
அற்புதம்.

சந்தனமுல்லை said...

:-) Liked the last two stanzas!

நேசமித்ரன் said...

:)

முயற்சி நல்லா இருக்கு !

மெல்லினமே மெல்லினமே said...

nalla irukku rasihai!

பா.ராஜாராம் said...

ரசிகையின்(நான் வாசித்த வரையில்)

the best 1

நேசா,

//முயற்சி நல்லா இருக்கு!// பாவி.

காண்டு, ரசிகை. :-)

முல்லை சொன்ன பகுதி...yes!

r.v.saravanan said...

மழையில் நனைந்த கவிதை அழகாயிருக்கிறது

r.v.saravanan
kudanthaiyur.blogspot.com

Chitra said...

அழகு. அருமை.

லதானந்த் said...

ரசித்தேன். புரிந்துகொண்டேன். வாழ்த்துக்கள்.

Madumitha said...

உங்கள்
கவிதையும்
ஜில்.

ny said...

PA. RAJARAM's comment...

thousand repeats!!!!!
without changing a letter!!

சீமான்கனி said...

//விருந்தாளிகளைக்
கவனிக்காத
எனக்கு மட்டும் எதற்கு?..
கோப்பையில் தேநீர்
ஆறிப்போக விட்டுவிட்டேன்.//

அழகு வரிகள் ரசிகையின் ரசிப்பினை அழகாயிருந்தது எனக்கு...வாழ்த்துகள்...

சுந்தர்ஜி said...

குருவிகளொத்த மென்மையான கவிதை.ரொம்ப அழகாய்ச் செடியில் அசையும் மலர் போலத் தமிழில் அசைகிறது ரசிகை.உங்களின் இந்த நடை இயல்பா இருக்கு.

கனிமொழி said...

ரொம்ப அழகா இருக்குங்க.....
:-)

Paleo God said...

ரொம்ப அழகா இருக்குங்க. ரசிச்சு காட்சிகளாய் விரித்த வரிகள் அபாரம். :)

வாழ்த்துகள்!

இரசிகை said...

vaasiththu vaazhththiya anaivarukkum nantriyum anbum:)

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப அழகா இருக்குங்க...
வாழ்த்துகள்!

Priya said...

மழை கவிதை அழகு!

மாதேவி said...

மழையுடன் ஜோடிச்சிட்டுக்கள் அழகாய் கண்முன்னே விரிகின்றன "எனக்கு... "

Anonymous said...

TEACHER AMMA,

ENIYA..ANNAIYAR THINA VALTHUKAL

V.V.S GROUP
COMPLAN SURYA

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

டிஜிடல் காமிராவில் மழையை படம் பிடித்தாற் போல் இருந்தது

Nathanjagk said...

மழையின் ஈரமும் பறவையின் துறுதுறுப்பும் ஒருங்கமைந்திருக்கக் காண்கிறேன்.

மழை அபூர்வமாகவும், பக்கம் வரும் குருவிகள் அதிசயமாகவும் ஆகிவிட்டதில்.. இக்கவிதை ஒரு ஏக்கத்தை விதைக்கிறது.

நெருக்கமாக ஒரு மழையையும் ஜோடியையும் ஒளிப்படமாகப் பார்த்த திருப்தி - நிஜமாகவே!!!!

மனதார்ந்த வாழ்த்துக்கள் இரசிகை மேடம்!

நட்புடன் ஜமால் said...

ஏன் வரிகள் அதிகமாக வரத்துவங்கியது.

சிறிய வரிகள் கவிதை சொல்லும் அழகே இங்கு மிகவும் இரசிக்க வைத்தது :)

அன்புடன் அருணா said...

அடடா!அழகு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தேநீரை ஆறவிட்டதும் , அவை ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டதும் ,
மிக மிக ரசிகை தான் நீங்கள்..

இரசிகை said...

//
சே.குமார் said...
ரொம்ப அழகா இருக்குங்க...
வாழ்த்துகள்!
//

nantri thodarntha vaasippukkum vaazhththukkum:)

//
Priya said...
மழை கவிதை அழகு!
//

nantringa priya...!

//
மாதேவி said...
மழையுடன் ஜோடிச்சிட்டுக்கள் அழகாய் கண்முன்னே விரிகின்றன "எனக்கு... "
//

muthal varukaikkum vaazhththukkum nantringa maathevi:)

//
complan surya said...
TEACHER AMMA,

ENIYA..ANNAIYAR THINA VALTHUKAL

V.V.S GROUP
COMPLAN SURYA
//

nantri thambi...:)

//ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
டிஜிடல் காமிராவில் மழையை படம் பிடித்தாற் போல் இருந்தது
//

muthal varukaikkum vaasippukkum nantri ARR(name perusaa irukkennu surukkunaa..hit initial kidaikkuthu)..sir:)
//
ஜெகநாதன் said...
மழையின் ஈரமும் பறவையின் துறுதுறுப்பும் ஒருங்கமைந்திருக்கக் காண்கிறேன்.

மழை அபூர்வமாகவும், பக்கம் வரும் குருவிகள் அதிசயமாகவும் ஆகிவிட்டதில்.. இக்கவிதை ஒரு ஏக்கத்தை விதைக்கிறது.

நெருக்கமாக ஒரு மழையையும் ஜோடியையும் ஒளிப்படமாகப் பார்த்த திருப்தி - நிஜமாகவே!!!!

மனதார்ந்த வாழ்த்துக்கள் இரசிகை மேடம்!
//

nantri...jeganaathan sir:)
neenga yennai madam nu sollurathu fun - aa thonuthu:)
m...ippo neenga unga orijinal name illaamal yethaavathu nick name -la set seithirunthaal naan yethukku sir solla poren.
saringa sir.. paravaayillai.irunthaalum madam nu vaasikkum pothu kubukkunnu sirippu vanthuduthu:))

//
நட்புடன் ஜமால் said...
ஏன் வரிகள் அதிகமாக வரத்துவங்கியது.

சிறிய வரிகள் கவிதை சொல்லும் அழகே இங்கு மிகவும் இரசிக்க வைத்தது :)
//

jamal sir.....
velippadaiyaka yennangalai pakirnthamaikku nantri.

m......naan ippadithaan yezhuthanumnu yezhuthuvathillai.
kuttiyaa.....pesusaa....nnu naan menakkiduvathillai.ithu nerthal.

mela irukkum kavithai..,yenga veettil nadanthathu.half an hour kitta ukkaanthirunthen.mela yenna irukko athai thaan ulvaanginen.yezhuthinen.

irunthaalum ungal karuththai manathil kolkiren..:)

//
அன்புடன் அருணா said...
அடடா!அழகு!
//

vaanga mam...:)
nantriyum anbum!

ஆடுமாடு said...

நல்லாருக்கு.

//நான் அவைகளையும்..
அவைகள் என்னையையும்//


அவை என்பதே பன்மைதான்.
/அவைகள்/ தேவையில்லை.
எல்லாருமே இப்படி்த்தான் எழுதுகிறார்கள்.
இது இலக்கணப்படி தவறு.

இரசிகை said...

முத்துலெட்சுமி nantri.....:)

//
ஆடுமாடு said...
நல்லாருக்கு.

//நான் அவைகளையும்..
அவைகள் என்னையையும்//


அவை என்பதே பன்மைதான்.
/அவைகள்/ தேவையில்லை.
எல்லாருமே இப்படி்த்தான் எழுதுகிறார்கள்.
இது இலக்கணப்படி தவறு.
//

muthal varukaikkum vaasippukkum nantri!

appo,
naan avaiyaiyum
avai yennaiyaiyum - nu
yezhuthanumaa sir?

ஆடுமாடு said...

//appo,
naan avaiyaiyum
avai yennaiyaiyum - nu
yezhuthanumaa sir? //


நான் அவற்றையும்.

அன்புடன் நான் said...

மிக மிக செரிவான கவிதை.
புதிய சிந்தனை... மிக ரசித்தேன்.

பாராட்டுக்கள்

மங்குனி அமைச்சர் said...

//விருந்தாளிகளைக்
கவனிக்காத
எனக்கு மட்டும் எதற்கு?..
கோப்பையில் தேநீர்
ஆறிப்போக விட்டுவிட்டேன்.///


நல்ல மனசு, கவிதை முழுவதும் அருமை

Anonymous said...

rasi

akkaaaaaa....yen padinmam padivu vara villai.

padivugalum varavillai???

enda blog pakkam vanthuvitu ponga rasiakka..

pasathudan
tambi
surya

கார்த்திகா said...

rasikkiren, kavithaiyaiyum rasigaiyaiyum. :)

பத்மா said...

ஆஹா அருமை ஒரு sauceril அந்த டீயை கொடுத்திருக்கலாம் .அந்த விருந்தாடிகளை கொஞ்சம் எங்க வீட்டுக்கு அனுப்புங்களேன் ப்ளீஸ்

அணையான் said...

அருமை

Post a Comment