Saturday, August 20, 2011

இது கவிதையல்ல...

இது மழைக்கவிதை
என்றேன்...

குடையுடன் வாசிக்க
வந்த சிலர்.
லயித்து குடைவிரிக்க
மறந்து நனைந்தனர்..

தெறிக்கும் துளிகளிலிருந்து
தம்மை ஒதுக்கிக்கொண்டனர் சிலர்...
விரித்த குடைக்குள்

சிலர் கிடைக்காத
நிலா நட்சத்திரம் தேடினர்..

இடி..
மின்னல்..
குளிர்காற்று..
வானவில்..
என தேடல்கள் கூடியிருக்க,

முதலாவதாய் எழும்
மண்வாசனை நுகர
யாராவது வாய்த்தால
மழை என்னுள்!!

12 comments:

rajamelaiyur said...

இது கமெண்ட் இல்லை

rajamelaiyur said...

தமிழ்மணம் இணைத்து விட்டேன்

முனைவர் இரா.குணசீலன் said...

நானும் மழையில் நனைந்தேன்..

r.v.saravanan said...

கவிதை மழையில் நனைந்தேன்

Anonymous said...

வாவ்... கவிதை மழையைப் போல அழகு.

சே.குமார்.
மனசு (http://vayalaan.blogspot.com)

KParthasarathi said...

என்ன வளமான கற்பனை.அசர்ந்து விட்டேன்.நன்றி

நட்புடன் ஜமால் said...

அந்த மழை எங்களுக்குள்ளும் ...

நேசமித்ரன் said...

நல்லாருக்கு ரசிகை :) வாழ்த்துகள்

துபாய் ராஜா said...

//குடையுடன் வாசிக்க

வந்த சிலர்.

லயித்து குடைவிரிக்க

மறந்து நனைந்தனர்..//


மண் வாசனை மணத்தில் குடை விரிக்க மறந்தவர்களில் நானும் ஒருவன்.

இரசிகை said...

vaasithu vaazhthiya yellaarukkum nantriyum anbum..!

Unknown said...

மழை போல உங்கள் மழை கவிதை அருமை..வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

முதலாவதாய் எழும்
மண்வாசனை நுகர
யாராவது வாய்த்தால
மழை என்னுள்!!

மழை எல்லோர் மீதும் பெய்கிறது..
சிலருக்கு கவிதையாகி
சில விதையாகி ..
நனைவது பிடிப்பது போல மழை பற்றிய கவிதையும் அழகாய் நனைக்கிறது

Post a Comment