Raymond என் கூட பேசிக்கிட்டு இருந்தான்.
ம்மா
(பக்கத்துவீடு) முனிசா அக்கா LKG படிக்காங்க.அனுசா அக்கா UKG.
நானு AKG, அப்புறம் BKG, CKG,DKG,....(அதுக்கு பிறகு Z வரைக்கும் போச்சு.)
crayons, sketch, வாங்கிக் கொடுத்துருக்கு.
நோட் புக் தவிர்த்து எல்லாப் பக்கமும் எழுதுறாரு.எதையும் தடுக்கிறதில்ல.
sketch - i வாயில் வைக்கும் போதுதான் பதட்டமான கோபம்.தங்கம்(கோபமான தங்கம்) பேப்பர் , தரை, கதவு, சுவரு -இதுலமட்டும்தான் எழுதணும்.வாயில் வைக்க கூடாதுன்னு சொல்லிட்டே ஸ்கெட்ச் - i பிடிங்கினேன்.
அப்போ நாக்கில் எழுதக் கூடாதான்னு கேக்குறான்.
இந்த உணவை தந்த இறைவனுக்கு நன்றி
இப்படி சொல்லிட்டுதான் சாப்பிடுவான்.மழலையா கேக்கும் போதும்,அவன் சொல்லிச் திரும்ப சொல்லும் போதும் சந்தோசம்.இப்போ கொஞ்சநாளா ,திருக்குறள் சொல்லுறான்.அந்தக் குறள் பகுத்துண்டு ன்னு துவங்கும்.மீதி 6 வார்த்தைகளும் ஒன்னும் புரியாது.மாப்பிள்ள நீ சொல்லுறது கலைஞர்க்கே புரியாதுடான்னு சொல்லிக் கொண்டே தம்பியும் குறள் சொல்லுறான்.
yellow கலர் வாத்து,green கலர் ஹெலிகாப்ட்டர் ,blue கலர் fish பொம்மை வாங்கி கொடுத்ததில் ,fish தான் ரெம்ப பிடிச்சுருக்கு போல தூங்கும் போதும் அவன் நெஞ்சில் கிடக்கிறது அந்த நீல மீன் .சேட்டை பண்ணினால் குழம்பு வச்சுடுவேன் , குழாய திறந்து விட்டுட்டு நீந்து மீனு,-இப்படில்லாம் மீன் கூட பேசிட்டே இருக்கான் .வாங்கும்போது கூட இத்தனை அழகாய் இல்லை இந்த மீன்.இதுதான் வேணும்னு அவன் தேர்ந்து கொள்வதில் ஆச்சர்யமே மிஞ்சுகிறது எனக்கு.
குளிர்பானங்கள் (மாசா ,கோக்,பெப்ஸி,)இதெல்லாம் நாங்க tonic -ன்னு சொல்லி வச்சுருக்கோம் .கால்வலி ,காது வலி,க்குதான் இதெல்லாம் குடிக்கணும்ன்னு சொல்லி வச்சுருக்கு,but ,தம்பி taste காண்பிச்சாச்சு போல.ம்மா ,ரெம்ப கால் வலிக்கு மாசா டானிக் வாங்கிட்டு வாங்கன்னு போன்ல கேக்குறான்.
எல்லாமே அழகு .
3 comments:
ஹாஹா....
மழலை பேச்சழகு...
வாழ்த்துக்கள்
எல்லாமே அழகுதான்!
nantri se.kumar.
nantri iya..
:)
Post a Comment