எப்பவுமே water bottle இல்லாமல் வெளிய கிளம்புவதே இல்ல.
மழை பெய்யுதே, கொஞ்ச நேரத்துல போய்டலாம்,வெளிய வாங்கிக்கலாம், அது ஒரு சுமையா எதுக்கு இப்போ தண்ணீர் எடுத்துட்டு இருக்கிற நீ? இத்தனை கேள்விகளையும் தாண்டி கண்டிப்பா ஒரு குட்டி பாட்டிலிலாவது தண்ணீர் எடுத்துகிறது வழக்கம்.
அண்ணா நகர் to மாட்டுத்தாவணிக்கு மினிபஸ்ல போயிட்டு இருந்தேன்.
வண்டி கிளம்பும் போது ஓஓஓஓஓஓடி வந்து ஒரு குடும்பம் ஏறுச்சு.
அப்பா கையில் ரெண்டு குழந்தைங்க,வயித்தில் பிள்ளையுடன் அம்மா,ஒரு தாத்தா பாட்டின்னு வியர்த்து வதங்கி ஏறினாங்க.என் பக்கத்தில் இடம் இருந்துச்சு.
பிள்ளைங்க தண்ணீவேணும் தண்ணீவேணும் ஒரே அழுகை.பாவமா இருந்துச்சு.வயித்துக்குள்ள இருந்த குட்டி பாப்பாக்கும் தாகம் இருந்திருக்கும் அந்த அளவுக்கு வெயில் வெக்கை என்னோட bottle-i கொடுக்க வைத்தது.குழந்தைங்க உதடுகுவித்து உள்வாங்கி கன்னம் உப்பி ,சட்டை நனைத்து குடித்து தாகம் தீர்வதின் சந்தோசம் பிள்ளைகளின் முகத்தில்.அப்படியே பாட்டில் ஒவ்வொருத்தர் கைக்கும் போயிட்டு வந்துச்சு.வாய் வைக்காமல் குடித்தாலும் அவர்களின் சரி பிழையாகவே உணரப்பட்டது என்னால்.வைகை போல இப்போ என் பாட்டில் empty -யா வந்துச்சு.
பிள்ளைங்க வாய் வச்சு குடிசிட்டாங்க,அதான்..ன்னு தன்னிலை விளக்கத்திற்கு அவர் முயலும்போது நடத்துநர் வந்தார் .மேலமடை போகுமா என்றபடியே சட்டை பையை துழாவிய அவர் மேல நடத்துநர் சரேலென போகாதுயா இதுக்கா வேமா வந்து ஏறுனீங்க -ன்னு கோபப்பட்டார்.இல்ல சார் என் தண்ணிய காலி பண்ணன்னு எனக்குள்ள சொல்லிட்டு இருக்கும் போது stop இல்லாத இடத்தில் குடும்பமா இறங்கிட்டாங்க.
அவர்களின் பொறுப்பின்மை வருத்தமா இருந்துச்சு.முதல்ல,
உன் மகனுக்கு ஒரு டம்ளர் எடுத்து வச்சியான்னு கேட்க்கும் அம்மா ஞாபகத்தில் வந்து போனாங்க.ரெண்டாவதா,
இப்படித்தான் சிலர் நம்ம வாழ்க்கைக்குள்ள வர்றாங்க அப்புறம் போய்டுறாங்க அவுங்கல்லாம் வரும் போது நம்மட்ட இருந்த முக்கியமான விஷயம் போகும் போது சுருட்டி வாரி எடுத்துட்டு போய்விடப்படுது -ன்னு ஒரு எண்ணம் வரும்போதே மேற்படி எதையும்
யோசிக்காமல் பிடித்த பாடலுடன் கைகோர்த்து கொண்டது மனம்.
...........................................................................
அவசரத்துக்கு கூட மாட்டுத்தாவணி bus stand ல எதுவும் வாங்கிடக் கூடாது அங்க இருக்கும் சிறுதொழில் வியாபாரிகள் மேல இரக்கமே படவும் கூடாது.இதெல்லாம் மதுரை கற்று கொடுத்த பாடங்கள்.
-1-
பூ எவ்வளவு.
நூறு பத்து ரூபா.
சரி,நூறு தாங்க.
......
இதுல அம்பது பூதாங்க இருக்கும்.
ஆமாங்க ,bus stand - ல 50 பூதான் 100 பூ.
:(
-2-
மல்லிப்பூ எவ்வளவு ?
2000 வேணுமா 3000 வேணுமா
நான் ஊருக்கு போறேங்க.உங்க பக்கத்துல கடைலாம் போடும் plan எனக்கு இல்லன்னு சொல்லணும் போல இருக்கும்.எல்லாத்தையும் அடக்கிட்டு 500 போதும்னு சொன்னால் அவுங்கட்ட இருந்து வரும் சலிப்பான expression.வீட்டில் போய் அந்த பூவை வைக்கும்போதும் ஞாபகம் வரும்.
-3-
ஒரு எலுமிச்சம் பழச்சாறு வேணும்.எவ்வளவு?
15 ரூபா
ம்ம் .. தாங்க என்றபடியே 20 ரூபாவை கொடுத்தால் ஒரு fivestar சேர்த்து வைத்தார்.சாக்லட் வேணாம் சார்.
change இல்ல
ஒரு ரூபாக்குதானடா இப்படில்லாம் அரங்கேற்றுவீங்க.நாலு மடங்கு உங்க அட்டகாசம் கூடிட்டா.(வழக்கம் போல சொல்லல) argue செய்து பிறகு நான் ரெம்ப நேரம் துழாவி தேடி 5 ரூபா கொடுத்து கூலிங் குறைஞ்சபோன சாற்றை பருகியதெல்லாம் ஒரு கதை.
-4-
ஒரு tea.
ரெம்ப நேரம் சர்ர்ர்ர்ர்ர் சர்ர்ர்ர்ர் சர்ர்ர்ர்ர்
எனக்கு சூடாவே இருக்கட்டும்னு சொல்லுறதை கேக்கவேயில்ல மாஸ்ட்டர்ர்ர்ர்ர்ர் ஆத்து ஆத்துன்னு ...ஆத்திடாரு.
ரெம்ப நேரம் கழிச்சு தான் tea குடிச்சேன்.
6 ரூபாக்கு நுரைதான்..
-5-
popcorn விக்கிறவர்
மாதுளை விக்கிறவர்
திரும்ப திரும்ப
வந்து வந்து
வேணாம்னு
சொல்ல சொல்ல
ஒன்னு பத்து ரூபா
ரெண்டு இருபது ரூபா
மூணு முப்பது ரூபா
ஆமாங்க
நாலு நாப்பது ரூபா
அஞ்சு ஐம்பது ரூபா
எனக்கும் வாய்பாடு தெரியும்னு நான் சொல்லுற (கத்துற )அளவுக்கு ..
-6-
frnz கூட outing.
கையேந்திபவன்.
தோசை சாப்பிட்டு முடிஞ்சுட்டு.
போதும்னு எழும்போது
அவித்து
ஆடை அவிழ்த்து கொட்டிய ஆவிபறக்கும் இட்லி மேல் ஒரு கவனம்.
ஆளுகொன்னு சாப்பிடலாமா என்று கேட்டுகொண்டிருக்கும் போதே
இன்னைக்கு வியாபாரத்தில் முதல் தட்டுங்க..
ஒன்னுலாம் தர முடியாதுன்னு சொன்ன அந்த அம்மா இன்னும் என்னை என்னவோ செய்தபடியே இருக்கிறாள்.
..............................................................................
..............................................................................
இவுங்களையெல்லாம் குறை சொல்லவில்லை.அவரவர் நியாயம் அவரவர்க்கு.அறியாமல் நானும் கூட இதைவிட அதிகமாகவே யாரையாவது தொந்தரவு செய்திருக்க கூடும் என்ற எண்ணமே என்னை சகிக்க கற்றுக்கொள்ள வைக்கிறது.
வாழ்க!
வாழ்க!
No comments:
Post a Comment