Wednesday, March 25, 2015

raymond

raymond எழுதிக் கொண்டிருந்தான் 
ம்மா..
இதை டபுள் வீ  ன்னுதானே 
சொல்லணும் எதுக்கு டபுள் யு ன்னு சொல்லுறோம் 

யோசிச்சாலும் பதில் கிடைக்கப் போறதில்லை அதனால 
நீ வேகமா எழுதி முடியேன்னு கொஞ்சம் அதட்டலா 
சொல்லிகொண்டிருக்கும் போதே 

பக்கத்தில் இருந்த தண்ணீரை குடிக்க ஆரம்பிச்சுட்டான் 

என்னடா?? ன்னு கேட்டால் 

ட்ரிங்க்ஸ் பிரேக் -ன்னு பதில் 
(வேர்ல்ட் கப் -மேட்ச் ல கவனிச்சிருக்கான்)
..........................................................................................................
சண்டே கிளாஸ் போறான் 
பைபிள் வசனம் மனப்பாடம் பண்ண சொல்லுவாங்க 

மெம்மொரி பண்ணுன்னா?என்னம்மா 

மனப்பாடம் பண்ணுறது  

மனப் பாடம்னா?

பாக்காமல் சொல்லுறது raymond 

(நான் திரும்ப திரும்ப சொல்லி அவனும் சொல்லி மனப்பாடம் பண்ணிட்டான்)

கண்ணை இறுக்க மூடிட்டு 
லூக் 1:37
for nothing is impossible with GOD 

இப்போ எதுக்கு கண்ணை மூடுற நீ?

பாக்காமல் சொல்லனும்ல அதான்.
..........................................................................................................

evening walk போகும் போது ஒரு குட்டி பூ கீழ கிடந்தது.
நான் எடுத்து கையில் வச்சுகிட்டேன் 

தனக்குத்தான் வேணும்னு raymond வாங்கிகிட்டான் 

இதுல இருந்துதான் மரம் வருமாம்மா ?

ம்ம் .. இதுல காய் அப்புறம் பழம் 
பழத்துல இருந்து விதை 
விதைல இருந்து மரம் வரும்  

மறுநாள் ஸ்கூல்க்கு போகும் போது 
புறா இறகு ஒன்றை கையில் எடுத்துகிட்டு 
இதுல இருந்து புறா வரும்லன்னு கேட்டான் 

ங்கே.. ன்னு பார்த்தேன் 

உனக்கு தெரியாது.நான் அப்பாட்ட கேட்டுகிறேன்னுட்டான்
......................................................................................................
ம்மா..
எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தா 

நீ ஐஸ்கிரீம் ஸ்பெல்லிங் மனப்பாடமா படிச்சுடு,வங்கித் தர்றேன் 

கோவமா..,அப்போ lion க்கு ஸ்பெல்லிங் சொன்னா சிங்கம் வாங்கித் தருவியோ?
..............................................................................................
இந்த மலையெல்லாம் எப்படி வளந்துச்சு?
மழை பெய்யும் போது தானா வளந்துச்சு 
(அவனே கேள்வி அவனே பதில்)
.............................................................................................

2 comments:

துபாய் ராஜா said...

மழலை அரும்புகள் செய்யும் குறும்புகள் எல்லாம் நினைத்து நினைத்து இனிக்க வைக்கும் கரும்புகள்.

இரசிகை said...

:)

Post a Comment