Monday, September 14, 2015

:)) raymond...

ம்மா நான் கண்டுபுடிச்சுட்டேன்.இதைத்தான் அதிகமா கேக்குறேன் நான் இப்போல்லாம் 

5 ஐ தலைகீழா எழுதினா வ எழுத்து வரும் ..ம்மா.. நான் கண்டுபுடிச்சுட்டேன்
இந்த காதுல இந்த ஓட்டை வழியாதான் சத்தம் நம்ம மனசுக்குள்ள போகுது அதான் எனக்கு கேக்குதும்மா.நான் கண்டுபுடிச்..
டென்னிஸ் game ல tie பிரேக் ல tie லாம் கொடுக்க மாட்டாங்கம்மா நான் கண்டு..
இந்த என் கூட படிக்கும் rinchen க்கு one two three லாம் தெர்லம்மா .. நான் கண்..
இந்த வரஞ்சிருக்கும் 8 flowers ஐயும் முன்னாடி இருந்து எண்ணினாலும் பின்னாடி இருந்து எண்ணினாலும் 8 ன்னுதான்மா வரும்.நான் க...
இந்த மங்கோ ஜூஸ் எப்படி செய்வாங்கன்னா,மாம்பழத்தை ஜார்ல போட்டு அரச்சி பில்ட்டர் பண்ணிடுவாங்க.அதுகூட சீனி போட்டு ஸ்பூன்ல கலக்கி இந்த பிரூட்டி டப்பால pack பண்ணிடுவாங்கம்மா.நான் க..
இப்படித்தான் சிப்ஸ் வாங்கினா ஒரு கண்டுபிடிப்பு play material வாங்கினா ஒரு கண்டுபிடிப்புன்னு  நிதம் ஒரு கண்டுபிடிப்பு நடக்கும் ஆய்வுக் கூடமாகி வருது வீடு.
:)
குழந்தைகள் உலகம் கண்டுபிடிப்புகளால் நிறைந்தும் வழியும் போல.அதே போல கேள்விகளும்,

இந்த egg குள்ள எப்படி எல்லோ பார்ட் white பார்ட்டும் போச்சு.அதுஎதுக்கு ஒன்னா கலக்கல.எப்படியே தனியாவே இருக்கு.

எதுக்கு எல்லாரும் வேற  வேற சாமி கும்பிடுறாங்க.

எல்லாருக்கும் குட்டிபாப்பா இருக்கு நமக்கு மட்டும் எதுக்கு இல்ல.

நான் எப்போ காலஜ் போவேன் 

இந்த நைட் மட்டும் எப்படி கருப்பாகுது.

நமக்கு எதுக்கு ரெக்கை இல்ல?

நீ படிக்கும் போதெல்லாம் என்னை எதுக்கும்மா உனக்குத் தெரியாது ?

நான் எதுக்குமா கருப்பா இருக்கேன் ?

இன்னும் இன்னும் ன்னு நிறையா...


4 comments:

துபாய் ராஜா said...

// குழந்தைகள் உலகம் கண்டுபிடிப்புகளால் நிறைந்தும் வழியும் போல.அதே போல கேள்விகளும் ,//

உண்மையான உண்மை. அவர்களது கேள்விகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் இப்போது நாம் கூறும் பதில்களே வாழ்நாள் முழுதும் அவர்களுடன் வலம் வரும்.

இரசிகை said...

thanx:)

லெமூரியன்... said...

ha ha ha....a 3 year nephew at my home started his questionings now...its actually intresting...! :-)

இரசிகை said...

thanx lemurian..

raymond ku 4.1/2 vayasu

Post a Comment