உன்னைப் பிரசவித்து...
தன்னை
கொண்டாடிக்கொள்ளத்
துவங்கிவிட்டது.., நீ
பிறந்த இந்நாள்!
-2-
உனக்கல்ல...
உன்னைப் பெற்ற
அன்றைய "நாளுக்கு"
வாழ்த்து!
பிற 364 நாட்களிடமிருந்தும்.
-3-
உனக்காக... நான்
தேர்ந்தெடுத்த - அந்தவொரு
வாழ்த்து அட்டையிடம்.,
தங்கள் வாழ்த்துகளை
சொல்லியனுப்பியிருந்தன...
அங்கிருந்த பிற
வாழ்த்தட்டைகளெல்லாம்!!
-4-
தேவதைகளெல்லாம்
வேகமாகவே தூங்கச்சென்றனர்
நாளை அதிகாலமே வந்து
உன்னை ஆசிர்வதிக்க வேண்டுமென்று!
-5-
உன் பிறந்தநாளன்று..,
மற்றவர்களுக்குத்தான்..
இனிப்பு!
எனக்கு..
நீ!
-6-
எனக்காக அவளா?
அவளுக்காக நானா?
என்னைப் போலவே
குழம்பியிருந்தன...
உன் பிறந்தநாள்
பரிசுப் பொருட்களும்!
-7-
உலகத்தில் நீ எங்கு சென்றாலென்ன?
வாழ்த்துகள் உரைப்பேன்
மறவாமல்.
உன் காதுக்கெட்டும்
தூரத்தில்தான் நான்!
-8-
உன் வீட்டுவாசலில்..,
உன்னை வாழ்த்த
ஒரு பூங்கொத்து
காத்துக்கொண்டிருக்கிறது
பூமியின்..
அத்தனைப் பூக்கள் சார்பாகவும்!
-9-
தவறுதலாய்...
மறந்துபோய்விட்ட
உன் பிறந்தநாளை..,
மீண்டும் தெரிந்துகொள்ள
தினமும் வாழ்த்து கூறியது
நினைவிற்கு வருகிறது..
இந்தப் பிறந்தநாளிலும்!!
-10-
என் பிறந்தநாள்
கொண்டாடப்பட வேண்டிய
விஷயம்தான்... - அது
உன் நினைவில்
இருக்கும்வரை! என
எப்பொழுதோ நீதான் கூறினாய்..
-11-
நம்...
அறிமுகத்திற்கு பின்
வந்த உன்
முதல் பிறந்தநாளில்..,
20 பரிசுப்பொருட்கள்
என்னிடமிருந்து!
பழைய 19 பிறந்தநாளுக்கும்
சேர்த்து!!
-12-
நான் இறந்து போனதை
உறுதிப்படுத்திக்கொள்!!
உனக்கு.. என்
பிறந்தநாள் வாழ்த்து
வராதபட்சத்தில்!!
-13-
என்னடி அத்தனை அவசரம் உனக்கு?
நான் அழைக்கும் முன்பே
என்னை அழைத்து
"வாழ்த்துடா.. "
நான் மறுபடியும்
பிறக்க வேண்டும் என்கிறாய்!!
4 comments:
உனக்கல்ல...
உன்னைப் பெற்ற
அன்றைய "நாளுக்கு"
வாழ்த்து!
பிற 364 நாட்களிடமிருந்தும்.\\
ரொம்ப பிடிச்சது
காதலின் ஆழம்
//தவறுதலாய்...
மறந்துபோய்விட்ட
உன் பிறந்தநாளை..,
மீண்டும் தெரிந்துகொள்ள
தினமும் வாழ்த்து கூறியது
நினைவிற்கு வருகிறது..
இந்தப் பிறந்தநாளிலும்!!//
அழகு
சத்தியமாய் இதனை நீங்கள்தான் எழுதினீர்களா?!?
Awesome!
கவிதை 3 மற்றும் 5 மிகவும் ரசித்தேன்.
தொடரட்டும் கவிதைப்பணி.
//உனக்காக... நான்
தேர்ந்தெடுத்த - அந்தவொரு
வாழ்த்து அட்டையிடம்.,
தங்கள் வாழ்த்துகளை
சொல்லியனுப்பியிருந்தன...
அங்கிருந்த பிற
வாழ்த்தட்டைகளெல்லாம்!!//
அற்புதமான வரிகள்.....
உங்கள் கவிதைகள் கவிதைக்கே அழகு சேர்த்துவிட்டன.....
Post a Comment