Wednesday, January 6, 2010

நிமிடங்கள் சில...

ஆடையின் முக்கியத்துவம்
அறியாமல்..,
அலைந்திருந்த நிமிடங்கள்.

ஒவ்வொரு தேவைகளுக்கும்
பெற்றோரைத்
தேடிய நிமிடங்கள்.

விரல்களில் காயாத மருதாணி..
ஜன்னலில் காயும் நிலவு..,
நடு இரவில் நகரா நிமிடங்கள்.

சரியான நண்பனை
உணர்த்தும்
உயர்வான நிமிடங்கள்.

இரணங்களின் அர்த்தம்
தெரியாமல்..
இராகங்களில் மட்டுமே
புதைந்திருந்த நிமிடங்கள்.

ஜன்னலோரம்
பேசும் காற்றோடு
பேசாமல் பயணித்த நிமிடங்கள்.

நிறுத்தம் வந்தபிறகு
ஆரம்பிக்கும்..,பிடித்த பாடலின்
யுத்த நிமிடங்கள்.

கடந்து செல்லும்
யாரோ ஒருவர்..உன்னை நினைவுபடுத்த
திரும்பிப் பார்க்க நினைக்கும் மனதை
சமாதானப்படுத்திய நிமிடங்கள்.

உன் புன்னகைப்
பரிமாற்றத்திற்காய்
விழிகள் பசித்திருந்த
பவித்திர நிமிடங்கள்.

நீ பார்த்தும்-அதை
நான் பார்க்கக் கிடைக்காமல்
பறிபோன நிமிடங்கள்.

சில கட்டளைகளுக்கு
கனவுகளைக் கடன் கொடுத்த
கனமான நிமிடங்கள்.

விழி பேச நினைக்கும்-அதை
இமைகள் தடுக்கும்..
இதயம் பேச நினைக்கும்-அதை
இதழ்கள் தடுக்கும்..
மௌனத்தின் நிமிடங்கள்.

தூக்கத்தின் மடியில்
துக்கத்தால் விழித்திருந்த
துயர நிமிடங்கள்.

இழந்ததை அறியாமல்,
கிடைத்ததென நம்பிய
ஏமாற்றத்தின் நிமிடங்கள்.

திசைகளாய் நீளும்
ஆசைகளை
ஓசையின்றி..,மனம்
அசைபோட்ட நிமிடங்கள்.

பிணமென்று
ஒருவர் ஒதுங்க..
அப்பா என்று
ஒருவர் அணைக்க..
நிலையில்லா வாழ்வின்
நிலை சொல்லும் நிமிடங்கள்.

படிந்த பழைய நினைவுகளில்
படிகமாய் உறைந்திருந்த
நிமிடங்கள்.

எதற்காக நான்?
என்று குழம்பியும்
இதற்காகத்தான் நான்..,
என்று தெளிந்தும்
என்னை எனக்குப்
புரியவைத்த புதின நிமிடங்கள்.

உழைப்பின் வியர்வையில்
கரைந்த..
உன்னத நிமிடங்கள்.

சுகமாய்..
சுமையாய்..
சுவாரஸ்யமாய்..
எமனாய்..
எதார்த்தமாய்..
எத்தனையோ நிமிடங்கள்
நம்மைக் கடந்தாலும்..,

அன்னையின் கருவறையில்
கண்மூடி..,
உயிரினுள் உயிராய்
உறங்கிக் கிடந்த
இருளின் நிமிடங்கள்தான் எல்லாமும்..!-என
உணரக் கிடைத்த நிமிடங்களில்
நாம் இருந்தால்..,
"அவைதான் அதிஷ்டத்தின் நிமிடங்கள்..."

29 comments:

ஒளியவன் said...

//
இழந்ததை அறியாமல்,
கிடைத்ததென நம்பிய
ஏமாற்றத்தின் நிமிடங்கள்.
//

arumai.

sathishsangkavi.blogspot.com said...

அழகான கவிதை...

S.A. நவாஸுதீன் said...

அப்பாடா!

புது வருஷத்துல ஒரு பெரிய கவிதை போட்டது ரொம்ப சந்தோசம் இரசிகை.

S.A. நவாஸுதீன் said...

///அன்னையின் கருவறையில்
கண்மூடி..,
உயிரினுள் உயிராய்
உறங்கிக் கிடந்த
இருளின் நிமிடங்கள்தான் எல்லாமும்..!-என
உணரக் கிடைத்த நிமிடங்களில்
நாம் இருந்தால்..,
"அவைதான் அதிஷ்டத்தின் நிமிடங்கள்..."////

வாவ். கலக்கிட்டீங்க இரசிகை. இனிமே இந்த மாதிரியே (பெரிய கவிதை) எழுதுங்களேன்.

தமிழ் said...

அருமை

நேசமித்ரன் said...

புது வருடத்தில் புதிய பரிணாமம் மற்றும் பரிமாணம்

வாழ்த்துகள் ரசிகை

பிடிச்சு இருக்கு

பூங்குன்றன்.வே said...

இந்த கவிதையை படித்த நிமிடங்கள் கூட அருமையாகத்தான் உள்ளது..வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

அன்பின் இரசிகை

நிலையில்லா வாழ்வின் நிலை சொல்லும் நிமிடங்கள்

அடடா அடடா - அருமை - நிமிடங்களில் இத்தனை வகை இருக்கிறதா - மிகவும் ரசித்தேன் கவிதையினை

நல்வாழ்த்துகள் இரசிகை

Anonymous said...

ரசனை கவிதை வாழ்த்துக்கள் :-)

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு வாழ்த்துக்கள்.....

பா.ராஜாராம் said...

வாங்கப்பு...

இதை ஓடிச்சு ஓடிச்சு பத்து பதிவா போடுற ஆளா இது?என்ன இப்படி ருத்ரதாண்டவம்?

ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா!கவிதையை முடிச்ச விதம் அழகு.

இரசிகை said...

vanthu vaasiththa aththanai kaviyullagalukkum nantri...:)

S.A. நவாஸுதீன்

//இனிமே இந்த மாதிரியே (பெரிய கவிதை) எழுதுங்களேன்//

yezhuthinaal,
kandippa post seiyuren...

பா.ராஜாராம்

//இதை ஓடிச்சு ஓடிச்சு பத்து பதிவா போடுற ஆளா இது?//

kinndal thaane...:)


//என்ன இப்படி ருத்ரதாண்டவம்?//

nijamaaththaan sollutheengalaa?

நேசமித்ரன் said...

//புது வருடத்தில் புதிய பரிணாமம் மற்றும் பரிமாணம்//

nantri mithran sir..:)

சந்தான சங்கர் said...

வினாடிகளில் படித்து
நிமிடங்களில் பின்னூட்டமிட்டேன்
இன்று நிமிடங்களும் கரைந்துவிட்டது
"அதிர்ஷ்டத்தின் நிமிடங்கள்" உணர்ந்து
உறைந்துவிட்டேன்..


அற்புதம் தோழி..

வாழ்த்துக்கள்..

மழைக்காதலன் said...

Fantastic... அற்புதம்...

மழைக்காதலன் said...

புத்தாண்டு வாழ்த்துகள் தோழி

விஜய் மகேந்திரன் said...

நல்ல கவிதை ரசிகை வாழ்த்துக்கள்

சத்ரியன் said...

ரசிகையாய்,

உன் நிமிடங்களைப் பதிவாக்கி விட்டாய்.

இந்தக் கவிதையைப் படித்து ரசித்து மகிழ்ந்த என் நிமிடங்களை உன் கவிதையினுள் நான் எப்படி இணைக்க?

இனிமையானதொரு கவிதை.

அதுவும் ரசிகையிடமிருந்து நீ........ண்டதொரு கவிதை.

கமலேஷ் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு ...வாழ்த்துக்கள்....

ஜெனோவா said...

மிகவும் காலம் தாழ்த்திய வாசிப்பு என்பதும் , பின்னூட்டம் என்பதும் புரிகிறது .. பொறுத்துக்கொள்ளுங்கள் ;-)
மிகவும் பிடித்திருந்தது இந்த கவிதை ...

வாழ்த்துக்கள்

அகஆழ் said...

\\பிணமென்று
ஒருவர் ஒதுங்க..
அப்பா என்று
ஒருவர் அணைக்க..
நிலையில்லா வாழ்வின்
நிலை சொல்லும் நிமிடங்கள்\\

மிகவும் அருமை.
படித்த நிமிடம் என்னை அப்படியே
உறைய வைத்து விட்டது.

அருவி said...

இனிமையை உணர வைத்த இன்ப நிமிடங்கள் இதை வாசித்த நிமிடங்கள்

பித்தனின் வாக்கு said...

நல்ல கவிதை இரசிகை. நன்றி.

பா.ராஜாராம் said...

ரசிகை,

நல்லாருக்கீங்களா?

கை ஒடைஞ்சது மாதிரி இருந்தது உங்கள் ஆங்கில முகம் பார்க்காதது. :-)

உங்களிடம் பகிர நிறைய இருந்தது.முக்கியமாய்,நீங்கள் முதல் பின்னூட்டமிட்ட "தகப்பனாய் இருப்பது" கவிதைக்கு கடந்த வருடத்தின் தமிழ்மண விருது!

திடீர்,திடீர் என ஓடி ஒளிந்து கொள்கிறீர்கள்...வயசாகிப் போனதால் தேட இளைக்குது மக்கா. :-))

எப்படியோ,

welcome back!

எழுத தொடங்குங்க..
(உங்கள் மின் முகவரி இல்லாததால் பின்னூட்டமிடுகிறேன்.வெளியிட வேண்டிய அவசியமில்லை.வெளியிட்டாலும் பாதகமில்லை. :-)

மிக்க நன்றி ரசிகை,எல்லாத்துக்கும்!

Ashok D said...

//பிணமென்று
ஒருவர் ஒதுங்க..
அப்பா என்று
ஒருவர் அணைக்க..
நிலையில்லா வாழ்வின்
நிலை சொல்லும் நிமிடங்கள்.//
:)

ரசிகன்! said...

சில கட்டளைகளுக்கு
கனவுகளைக் கடன் கொடுத்த
கனமான நிமிடங்கள்.///


lovely writing !!!

amazing!!!

இரசிகை said...

//ரசிகை,

நல்லாருக்கீங்களா?

கை ஒடைஞ்சது மாதிரி இருந்தது உங்கள் ஆங்கில முகம் பார்க்காதது. :-)

உங்களிடம் பகிர நிறைய இருந்தது.முக்கியமாய்,நீங்கள் முதல் பின்னூட்டமிட்ட "தகப்பனாய் இருப்பது" கவிதைக்கு கடந்த வருடத்தின் தமிழ்மண விருது!

திடீர்,திடீர் என ஓடி ஒளிந்து கொள்கிறீர்கள்...வயசாகிப் போனதால் தேட இளைக்குது மக்கா. :-))

எப்படியோ,

welcome back!

எழுத தொடங்குங்க..
(உங்கள் மின் முகவரி இல்லாததால் பின்னூட்டமிடுகிறேன்.வெளியிட வேண்டிய அவசியமில்லை.வெளியிட்டாலும் பாதகமில்லை. :-)

மிக்க நன்றி ரசிகை,எல்லாத்துக்கும்!

MARCH 9, 2010 3:36 PM //

nallaayirukkiren rajaram sir...

ungalin yella naatrikalukkum thirumba nantri.

(yen aangila mugam thediyatharkum)

santhosham.

D.R.Ashok..,
ரசிகன்!...

yellaarukkum nantriyudan vaazhthukalum.

"உழவன்" "Uzhavan" said...

அத்தனையும் அருமையான நிமிடங்கள்.. நான் இதைப் படிக்கும் இந்த நிமிடமும்..

இரசிகை said...

natri uzhavan ..:)

சுந்தர்ஜி said...

காலத்தின் வெவ்வேறு முகங்களின் ஓவியத்தீற்றல் உங்களின் இந்தக்கவிதை.என்ன நுணுக்கமாக தீர்க்கமாக இருக்கிறது ஒவ்வொரு கணங்களையும் நீங்கள் பார்ப்பது.சில இடங்களில் கண்ணீர்-சில இடங்களில் ஆனந்தம்-சில இடங்களில் ரசித்த குறும்பு-என இக்கவிதை ஒரு ராக ஆலாபனை.அற்புதம் ரசிகை.

Post a Comment