மனிதர்களோடு
மரித்துக் கொண்டிருக்கிறது
மனிதமும்..!
மனிதநேயத்திற்கு
வைக்கப் பட்டதால்.,
மரித்த மனிதர்களுக்கு
வைப்பதற்குப் பஞ்சம்
"மலர் வளையங்கள்"
வெடியின் சத்தத்தில்
நாட்டை விட்டு
வெளியேறியது "அமைதி"
தனக்கு அமைதியைத் தேடி!
சமாதானம்
சமாதியாகின்றது
சப்தமின்றி..!
உயிர் வழிந்தோடுகிறது
உறையாத..
இரத்தத்தோடு !
இரத்தத்தின் பிசுபிசுப்பில்
நிலத்தின் நிறம்மாறிக்
கொண்டிருக்கிறது
மனிதர்களின்
மனம் மாற வழியில்லை!!
உயிரின் உன்னதம்
உணராமல்.., மனிதன்
மனிதனை அழிக்கப்
போராடுகிறான்...!
ஆயுதங்களைஅழிக்க..
அழியாத போர்
ஆயுதங்களால்..!!
முரண்பாடான காரணங்களோடு
உடன்பாடேனோ?உண்மை புரியவில்லை...
அங்கே
காயங்களோடும்
கண்ணீரோடும் கதறும்
மனிதர்கள் பற்றிவாசித்த
செய்தித்துளிகள் என்னுள்
கண்ணீர்த் துளிகளாய்...!
அவைகள்..,
காற்றில் கலந்து
அவர்கள்
காயங்களுக்குமருந்தாகட்டும்!!
(பின்குறிப்பு: படிக்குப் போது எழுதினது..இப்போ டைரி-யை திருப்பும் போது கிடைச்சது.நினைவுகளில் வந்து போன,அந்த நாட்கள்.. உங்களின் பார்வைக்கும் ..
16 comments:
அங்கே
காயங்களோடும்
கண்ணீரோடும் கதறும்
மனிதர்கள் பற்றிவாசித்த
செய்தித்துளிகள் என்னுள்
கண்ணீர்த் துளிகளாய்...!
..........கண்ணீர்த் துளிகளாய்...!
//அங்கே
காயங்களோடும்
கண்ணீரோடும் கதறும்
மனிதர்கள் பற்றிவாசித்த
செய்தித்துளிகள் என்னுள்
கண்ணீர்த் துளிகளாய்...!//
Realy Super wording....
Ithu 2003 la mattum nadakkala rasihai.50 years
munnadiye nadanthirukku. athula sila varigal,
Maanilamael sila manidaral enna maruthal
paraiyya manithan maariyathenaiyya?
Vaanathil nilavil aathavan thisaiyil maruthal
yethaiyya? manithan maariyathenaiyya?
Anbaiyum,panbaiyum thannalathal baliyakkidum
pethaiyaai manithan maariyathenaiyya?
Thesam sudugadavathu nandro?theivathin peral
kolvathum nandro?
Anbe aandavan endru ninaithal, anaivarum orr kulamagave vazhlnthal,
Thanalai angae veedugal vizhuma? thaiyin pirival seigalum azhuma?
santhi,santhi enum Gandhiyin kuralum oynthida
seibavanai manithan maariyathenaiyya?
:)
அட அப்பவேவா ..
நல்லா இருக்கு பிள்ளைத்தமிழ்
நல்லாருக்கு பாஸ்!(நேசன் சொன்னது போல் மன்னிக்கிற பிள்ளை தமிழ்.)
இதை விடுங்க,
2003-இல் படிச்சிக் கிட்டு இருப்பதாக சொல்லி இருக்கீங்க..இப்போ ஏழு வருஷம் ஆச்சு.
ஏழோடு ஏழு பதினாலு,அது ஒரு பத்து இது ஒரு பத்து.ஆக முப்பத்தி நாலு,தை வந்தா முப்பந்தஞ்சு வயசு!
யார்ட்ட..
கண்டு புடிச்சமா இல்லையா?
ராஜா,சிங்கம்டா மக்கா நீ!
nantri chitra..,sankavi..,melliname..:)
appuram..,
//
நேசமித்ரன் said...
:)
அட அப்பவேவா ..
நல்லா இருக்கு பிள்ளைத்தமிழ்
//
mithran sir.. nantri.
//
பா.ராஜாராம் said...
நல்லாருக்கு பாஸ்!(நேசன் சொன்னது போல் மன்னிக்கிற பிள்ளை தமிழ்.)
இதை விடுங்க,
2003-இல் படிச்சிக் கிட்டு இருப்பதாக சொல்லி இருக்கீங்க..இப்போ ஏழு வருஷம் ஆச்சு.
ஏழோடு ஏழு பதினாலு,அது ஒரு பத்து இது ஒரு பத்து.ஆக முப்பத்தி நாலு,தை வந்தா முப்பந்தஞ்சு வயசு!
யார்ட்ட..
கண்டு புடிச்சமா இல்லையா?
ராஜா,சிங்கம்டா மக்கா நீ!(KANDIPPAA)
//
:))
rajaram sir neenga kanakkula ivvalavu weak nu ippothaan theriyum......
10-i koottaamaal vittutteenga:))
ok.....ok........
manasuvanthu nalllaayirukkunnu sonneengale remba nantri:)
hi pls keep writing.pls give me your email id.thanks for your solid comments to my poems regards
////////////////////வெடியின் சத்தத்தில்
நாட்டை விட்டு
வெளியேறியது "அமைதி"
தனக்கு அமைதியைத் தேடி!///////////
நல்ல சிந்தனை !
//உயிரின் உன்னதம்
உணராமல்.., மனிதன்
மனிதனை அழிக்கப்
போராடுகிறான்...!//
வரிகளில் வேதனை கலந்த வலி.
அருமையான வரிகள்.
கல்லூரி காலத்தில் இப்படி ஒரு கவிதை... அருமை..!
உங்கள் தீவிர வாசிப்பிற்கும் கருத்துக்களுக்கும் நன்றியும் அன்பும்!
nantri shankar,kumar &rajachadrasekar...:)
நல்லாருக்குங்க...
//
வெடியின் சத்தத்தில்
நாட்டை விட்டு
வெளியேறியது "அமைதி"
தனக்கு அமைதியைத் தேடி! //
பிடித்த வரிகள்.
மறக்க முடியாத மறக்க வேண்டிய நினைவுகள்
//மனிதநேயத்திற்கு
வைக்கப் பட்டதால்.,
மரித்த மனிதர்களுக்கு
வைப்பதற்குப் பஞ்சம்
"மலர் வளையங்கள்"//
மலர் வளையங்கள் வைக்கும் அளவுக்கு இங்கே பொறுமையும் பரிவும் இன்னும் இருக்கிறதா..?
நல்ல வரிகள்.. இந்த பகுதிக்கு முதல் முறை வருகிறேன் என்று நினைக்கிறேன்..
நன்றி..
nantri amaichar avarkale.........:)
vaanga saamak kodaangi!
Post a Comment