Thursday, September 1, 2011

நிலாக்கள்..

-1-
தன்னைக் காட்டி
சோறூ
ட்டப்படும் குழந்தைகளை
வேடிக்கை பார்க்கிறது நிலா.

-2-
யுகயுகமாய் நீராடியும்
கறையுடன் சிரிக்கும்
மிதக்கும் நிலா!!

-3-
அழைக்க அழைக்க
செல்லாமல்,
பிழைத்தும் கிடக்கிறேனே??
என வேதனித்தது..
கறை அதிகமாவதை
உணர்ந்த நிலா.

ஏதோ ஒரு தெருவின்..,
எல்லா வாசல்களிலும்
ஏறி இறங்கியபடி
சென்றுகொண்டிருந்தாள் ஒரு சிறுமி,
நிலா நிலா ஓடி வா.. என்றழைத்தபடியே!!

13 comments:

துபாய் ராஜா said...

அனைத்தும் அருமை.

// ஏதோ ஒரு தெருவின்..,

எல்லா வாசல்களிலும்

ஏறி இறங்கியபடி

சென்றுகொண்டிருந்தாள் ஒரு சிறுமி,
நிலா நிலா ஓடி வா.. என்றழைத்தபடியே!! //

அனைத்திலும் அருமை.

கவிதையின் விவரிப்பில் காட்சி கண்முன்.

நேசமித்ரன் said...

சோழிகளைப் போல இறைந்து கிடக்கும் நிலாவோடு கிளத்தல் கவிதையாகும் ரசனைகளில்

வாழ்த்துகள் !

அகல்விளக்கு said...

நிலாவும் ஒரு தோழிதானே...

ரசனை அருமை...

r.v.saravanan said...

கவிதை அருமை.

Anonymous said...

நிலாவை ரசித்தேன் சகோதரி.

சே.குமார்
Http://vayalaan.blogspot.com

rajamelaiyur said...

//
தன்னைக் காட்டி
சோறூட்டப்படும் குழந்தைகளை
வேடிக்கை பார்க்கிறது நிலா.
//
அருமையான வரிகள்

rajamelaiyur said...

என்று என் வலையில்

விஜய் vs அஜித் யார் புத்திசாலி?

முனைவர் இரா.குணசீலன் said...

வேடிக்கை பார்த்த நிலவை நானும்
வேடிக்கை பார்த்தேன்..

முனைவர் இரா.குணசீலன் said...

மிதக்கும் நிலவோடு நானும்
மிதக்கிறேன்...

இரசிகை said...

vaasithu vaazhthiyavarkalukku nantiyum anbum...

ரிஷபன் said...

யுகயுகமாய் நீராடியும்
கறையுடன் சிரிக்கும்
மிதக்கும் நிலா!!

எல்லாக் கவிதைகளுமே அருமை.
நிலவின் மறுபக்கம் யார் அறிவார் ?

நம்பிக்கைபாண்டியன் said...

நிலவை சுற்றியிருக்கும் அழகிய நட்சத்திரங்களாக இந்த சிறுகவிதைகள்!

அணையான் said...

அருமைங்க!

Post a Comment