Tuesday, November 29, 2011

செரலாக் பொழுதுகள்..

ம்மா..
மியாவ்..
பெள பெள ...
கா கா..
கியா கியா..

எல்லாமுமாகவும்
மாற வேண்டியிருக்கிறது
அம்மாவாகிய நான்
ஒருவேளை உணவூட்ட

0

செரலாக் நரைமீசையுடன்
கம்பீரமாய்த்
தவழுகிறான்

0

ஒவ்வொரு மாதமும்
ஒவ்வொரு பிளேவர்
எல்லாவற்றிலும் அம்மா வாசனை

0

புறா பாரு
காரு பாரு
மலை பாரு
மரம் பாரு
குருவி பாரு

வாயிலிருந்ததை
விழுங்கிவிட்டான் போல,

அள்ளிக் கொடுக்கும் கரண்டியையே
பார்த்திருந்தான் அவன்

0

நிலா
வட்டமா?
சதுரமா?

குழப்புகிறது..

பாற்சோறு கிண்ணம்

12 comments:

விஜய் மகேந்திரன் said...

very good poem rasigai.....

நேசமித்ரன் said...

//செரலாக் நரைமீசையுடன்//

ரசித்தேன் ரசிகை , பயலைக்கு என் ஆசிகள் !

க ரா said...

awesome...

Raghu said...

த‌லைப்பும், முத‌ல் க‌விதையும் ரொம்ப‌ புடிச்சிருக்கு

இரசிகை said...

vaasiththu vaazhthiya ullangalukku anbum nantriyum..:)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

செரலாக் உண்ணாத குழந்தையின் கவிதை.அழகு.

இரசிகை said...

vani

sundarji

nantriyum anbum...:)

காமராஜ் said...

ரசிகை இப்படி எளிய வார்த்தைகளால் வாழ்வைக் கவிதையாக்கும் லாவகம் எளிதில் வாய்ப்பதில்லை.
காலையில் இருந்து இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன். ஈர்க்கிறது.

இரசிகை said...

nantri kaamaraj sir..
:)

portfolio said...

/வாயிலிருந்ததை
விழுங்கிவிட்டான் போல,
அள்ளிக் கொடுக்கும் கரண்டியையே
பார்த்திருந்தான் அவன்/

Nice!

இரசிகை said...

nantri mr.sezhiyan..........
:)

அணையான் said...

ஒவ்வொரு வரியும் அருமை!

Post a Comment