0
கரியாமல் எரியும்  நான் 
நீ பற்றியதில்.
0
மிக மிகத் 
தனிமையாய் அழுகிறேன் 
ஈரமானாயா நீ?
0
எழுதிக் கொண்டேயிருக்கிறேன் 
ததும்பிக் கொண்டேயிருக்கிறாய் நீ!
0
கவிதைகள் உதிர்க்காமல் 
கடந்து  போகவே தெரியாத 
நீ பற்றி அறிவாயா நீ??
0
மொத்த மழையின் 
தெப்ப ஈரம் தரும் 
ஒற்றை துளியினாள் நீ.
0
உதிர்ந்த பூக்களையெல்லாம் 
கிளையேற்றி பார்க்கும் 
கவிதைமனம் கொடுத்ததென்னவோ 
நீ மட்டும் தான்.
0
கோர்ப்பதும் 
உதிர்ப்பதுமாய்
இருந்தன விழிகள்.
சிதறின 
சில நீ - க்கள்.
0
நீ யின்றி அமையாது உலகு 
கவிதையான பிழை.
5 comments:
Nalla irukku yellam
நீ யின்றி அமையாது உலகு
கவிதையான பிழை.//
:)
nantri anbu..
nantri mithran sir..
:)
\\கரியாமல் எரியும் நான்
நீ பற்றியதில்//
Ithu super. :-)
\\எழுதிக் கொண்டேயிருக்கிறேன்
ததும்பிக் கொண்டேயிருக்கிறாய் நீ!//
உங்க ரத்தத்தோட கலந்திருப்பனோ அந்த நண்பன்..!
காதல் ரசம் சொட்டுதே இந்த வரிகள்ள..!
:-)
vaanga lemuriyan..
nantri.
Post a Comment