கொஞ்சநாளுக்கு முன்னாடி வலை பதிவாளர் நேசமித்திரன் கூட பேசும் வாய்ப்பு கிடைத்தது.கவிதை எழுதுவது குறித்த உரையாடல் அது.மான்கொம்பு-இலையுதிகாலம்,நொச்சியிலை-மயில்பாதம்-நிலாமுகம் இப்படி கவிதைகள் குறித்தும் ,கவிதை எழுதும் விதம் பற்றியும் பேசியபிறகு நான் எதை எழுதினாலும் அதை நானே பொருட்படுத்திக் கொள்ளாத ஒரு மன நிலை எனக்கு.
அப்புறம் சில நாள் கழித்து புதிய வரிகள் எனக்குள் அதை எழுதாமல் அதை அப்படியே தூக்கி அப்புறமாய் வைத்தும் அது என்னை தொந்தரவு செய்தபடியே இருந்தது.
பிறகு மித்திரன் சார்க்கு எனக்கு தோன்றியதை நான் எழுதி அனுபுறேன் நீங்க அதற்கு வடிவம் கொடுங்கன்னு சொல்லி ஒரு மெயில் செய்தேன்.
விரித்து வைத்த நீல வரைபடத்தாளென வானம்
எதற்காக நிர்ணயிக்கப்பட்ட
புள்ளிகளோ அவை.
அதை இணைத்துவைத்த
பென்சில்கரங்கள் யாருடையவையோ
x அச்சு
y அச்சு
தேடிய என் பயணம் நீள்கிறது
தொடரும் நீள்மலைத்தொடர்களுடன்
இதுதான் என்னுடைய கிறுக்கல்
எதற்கோ நிர்ணயிக்கப்பட்ட
புள்ளிகளை இணைத்துத் தோற்கும்
பென்சில்கரங்கள் யாருடையவை
நீல வரைபடதாளாய் படபடக்கிறது வானம்
என் பயணம் நீள்கிறது
தொடரும் நீள்மலைத்தொடர்களுடன்
அரைவட்டமடித்து கிளையமர்கிறது
ஒரு இராப் பாடி பறவை
அதனிடம் கேட்க சில அட்ச தீர்க்க ரேகைகளின்
கதைகளிருகின்றன
இப்படிதான் அதை மித்திரன் சார் திருப்பி கொடுத்திருந்தாங்க
நல்லாயிருந்தது.
3 comments:
இந்தப் பதிவினை நான் Google+, Facebook-இல் பகிர்ந்துள்ளேன். (அதாவது இந்தப் பக்கத்துக்கு link கொடுத்து இருக்கிறேன்). அங்கே சொடுக்கி இங்கே வருபவர்கள் இதை வாசிக்கச் சிரமப் படுகிறார்கள். இதன் லே-அவுட்டை மாற்றச் சொல்லி உங்களிடம் சொல்லச் சொல்கிறார்கள். அதனால் இந்தப் பின்னூட்டம். ஆவன செய்யவும்.
மிக அருமையான பதிவு.
nantri ungalin anaithu pinnoottangalukkum.
varukaikkum.
Post a Comment