காக்கொரோச்சு
கொசுமுத்தைஇதெல்லாம் இப்போ கோவத்தில் இருந்தால் என்னோட மகன் திட்டும் வார்த்தைகள்.அவனை வேணும்னே கோவப்படுத்தி அதிகமா என்னோட தம்பிதான் அந்த திட்டைலாம் வாங்கிப்பான்.
அதிகமா பயப்படும் விஷயம் ஷாம்பூ பாத்.daily காலைலே கேக்க ஆரம்பிச்சுடுவான்.தலைக்கு குளிக்க வேணாம்.தலைக்கு குளிக்க வேணாம்.இந்த ஸ்லோகம் ஒருமணி நேரத்துக்கும் மேல தொடர்ந்து ..... கேட்டுட்டே இருக்கலாம்.எதுக்கும் divert ஆகாமல் சொல்லீட்டு இருப்பான்.ஒருநாள் நானும் தம்பியும் சேர்ந்து raymond ஐ சும்மா விரட்டி விரட்டி தலைக்கு குளிக்க வச்சுட்டோம்.அழுதுட்டே இருந்தான்.இனி அடுத்தவாரம் தான் ஷாம்பூ பாத்ன்னு அவனுக்கு சொன்னேன்.உடனே சமாதானம் ஆயுட்டான்.அடுத்த நாள் காலைல raymond வழக்கம் போல சொல்லுரதை சொல்லவேயில.நானும் அதை கவனிக்கல.ஏதோ தம்பிக்கும் அவனுக்கும் வாக்குவாதம்.குளிக்கிரத தம்பி பேச்சுவாக்கில் இழுத்துட்டான்.raymond வேகமா அம்மா சொன்னாங்க இனி அடுத்த வாரம்தான் ஷாம்பூ பாத்ன்னு பதில் சொல்லியாச்சு.தம்பி உடனே உனக்குத் தெரியதா raymond இன்னைக்குத்தான் அடுத்த வாரம்னு சொல்லியதும் என்னட்ட வந்து அம்மா இன்னைக்கம்மா "அடுத்தவாரம்"-ன்னு கேட்ட raymond முகத்தில் பயம் கலந்த innocence.
கொஞ்சம் இறங்கி மடங்கி கெஞ்சுவதெல்லாம் school கிளம்பும் போது மட்டும்தான்.மத்தபடில்லாம் , அவன் நம்பள கண்டுக்கவே மாட்டன். எதாவது சேட்டைகொஞ்சம் அதிகம் ஆச்சுன்னா...என்னோட தம்பி அக்கா அவன கிளப்பு,சாந்தா டீச்சர்ட்ட விட்டுடலாம்னு தான் சொல்லுவான்.ஒரு நாள் தம்பி அப்படி சொல்லும் போது நான் உடனே ஐயையோ.. உன்னால முடியாதே ,அவன் அப்போவே தூங்கிட்டான்னு சொன்னதும் வேகமா வேலைய (சேட்டையை)விட்டுட்டு கண்ணை இருக்க மூடி படுத்துக்கிட்டான்.அப்படியா அப்போ கொறட்டை சத்தம் காணும்னு தம்பி சொன்னதும்
raymond கொர்ர்ர் கொர்ர்ர் கொர்ர்ர் ன்னு சொல்லிட்டே படுத்திருந்தான்.
நல்லாயிருந்தது.
:)
2 comments:
ஹா... ஹா...
இப்ப சிறுசுகல்லாம் பயங்கரமாயிடுச்சுங்க சேட்டையில...
nantri kumar..
Post a Comment