Monday, August 7, 2017

#HBD Joshua

Joshua க்கு ஒருவயசு.ஆகஸ்ட் 07 2016 ல பிறந்தான்.நைட் 9.50 இருக்கலாம்.ஒரே மழை.ரேமண்ட் பிறக்கும் போதும் அப்படித்தான் மழை.
மழை எனக்கு ஒரு நம்பிக்கை ஊடகம்.பிடிச்ச பாட்டு போல.

பிறந்ததுமே நீல நிறம் ஆகி ICU ல வச்சு அப்புறம் மஞ்சள் நிறமாகி போட்டோதெரபி க்கு போய்ன்னு 5 நாள் கஷ்ட்டபட்டான்.அந்த குட்டி கையில் காலில் ஊசி மருந்து போட்டோதெரபி வெப்பம் குளுக்கோஸ் ன்னு பார்த்து விரக்தியா ஆனதென்னவோ உண்மைதான்.
அப்புறம் வீட்டுக்கு வந்து அதீத கவனம்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும்.கொஞ்சம் கொஞ்சமா நல்லாவே வளந்தான்.
அப்புறம் ஒருநாள் ஏப்ரல் 4 லில் முதன்முதலா பிட்ஸ் வந்துச்சு.MRI ல செரிப்ரல் அட்ரோபி ன்னு ரிசல்ட்.அழுது நொறுங்கி வேற வழியில்ல பினட்டாயின் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு.3வருஷம் கொடுக்கணும்னு சொல்லியிருக்காங்க.

இதுவரை 
21 வாட்டி பிட்ஸ் 
4வாட்டி மருந்தின் அளைவை கூட்டி கொடுத்திருக்காங்க 
27 நாள் இரவு ஹாஸ்பிடல் 
5 நாள் இரவு 102 டிகிரி வரை குறையாத காய்ச்சல்ன்னு ஏதேதோ நோயின் நாட்களின் பட்டியல் 

ஆட்டிசம் குழந்தையாகலாம் 
பேசாமல் போய்டலாம் 
வளர்ச்சி இல்லாமல் போய்டலாம் 
படிக்க முடியாமல் போய்டலாம் 
இப்படி நிறையா லாம் கள்.இரவை நரகம் ஆக்கும். 

எல்லாமும் தவிர்த்து ஒவ்வொரு மாசமும் சரியான வளர்ச்சி இருக்குன்னு ஹாஸ்பிடல் போய் செக்அப் சொல்லும்போது ஒரு ஆசுவாசம் அது ரெம்பவே நிம்மதி கொடுக்கும்.

இப்போ தவழ்ந்து எழுந்து நிக்குறான்.

எப்படி இந்த சின்ன குழந்தை எல்லாத்தையும் தாங்கிக்கிடுதுன்னு யோசிச்சா , ஒரு நிஜம் தெரிஞ்சது.
அவன் என்னை தைரியமானவளா மாத்தியிருக்கான்.

மடியில பிட்ஸ் வந்து வெட்டிவெட்டி இழுத்து  நீலமாகும் அவனை பார்க்கும் துணிகரமும் அவனை சரியாக்கிடலாம்னு எனக்குள்ள தினமும் சொல்லிக்கும் போதும் ஒரு அம்மாவா நான் வளர்ந்திருக்கேன் 

இதையெல்லாம் எழுதும் போது எனக்கு அழுகையே வரல.அவன்தான் என்னை வளர்த்திருக்கான் 
வேறென்ன சொல்ல?

வாழ்க வளர்க

No comments:

Post a Comment