Monday, July 13, 2009

உதிரிப் பூக்கள்..

ழை..
-1-
ழைப்பின்றி
வரும்
தீயணைப்புப்படை!!
-2-
காற்று
மண்டலத்தின்
தூசு தட்டும்
ஈரத் துடைப்பான்!!

கண்ணீர்..
விழிகளுக்கும்
வியர்த்துவிட்டதோ?

முகமலர்ச்சி..
மனமகிழ்ச்சியின்
நேரடி ஒளிபரப்பு!!

வேண்டும்..
ஆசைகளை உறங்க வைக்க
ஒரு தாலாட்டு!!

பூக்கள்..
ஒரே நாளில்
ஒரு சாம்ராட்சியம்!

குழந்தைகள்..
ஒரே தேவனின்
பல பிரதிபலிப்பு!!

மரணம்..
வாழ்க்கை வைத்த
முற்றுப் புள்ளி!!

ஏழை..
பணத்தால்
கைவிடப்பட்டவன்!!

காளான்..
மழைக்குப் பின்
ஏன்னிந்தக் குடை?

கவிதை..
கருவைச் சுமக்கும்
தாய்மை!!

ஓவியம்..
தூரிகையின் பயணத்தால்
உருவான புண்ணியஸ்தலம்!!

போர்வை..
மூடிப் படுக்கும் போது
எனை மூழ்கடிக்கும்
சிந்தனைக் குடில்!!

மௌவல்..
மழலையின் சிரிப்பில்
அம்பலமான ரகசியம்!!

வண்ணத்துபூச்சி..
-1-
வண்ணங்களுக்கு என்று
சிறகு முளைத்தது?
-2-
நித்தமும் ஹோலி
உங்களுக்கு!!

7 comments:

ஒளியவன் said...

கலக்கிட்டீங்க அண்ணி. வாழ்த்துகள். ஒவ்வொன்றும் அழகு!

நட்புடன் ஜமால் said...

அனைத்தும் அருமை.


[[கண்ணீர்..
விழிகளுக்கும்
வியர்த்துவிட்டதோ?]]

இது மிகவும் இரசித்தது.

*இயற்கை ராஜி* said...

அருமை.

ப்ரியமுடன் வசந்த் said...

//பூக்கள்..
ஒரே நாளில்
ஒரு சாம்ராட்சியம்!//

//வண்ணத்துபூச்சி..

நித்தமும் ஹோலி
உங்களுக்கு!!//

ரசிச்சது.......

S.A. நவாஸுதீன் said...

உங்க கவிதைக்கு நான் ரசிகனாயிட்டேன். எல்லாமே அருமையா இருக்கு

S.A. நவாஸுதீன் said...

என்னால் உணர முடிகிறது
என்னுள் நீ!
உன்னால் உணர முடிகிறதா?..
உன்னுள் நீ இல்லை என்பதை!!

உங்களின் இந்த பழைய கவிதை அசத்தல் போங்க.

Ash said...

விழிகளுக்கும்
வியர்த்துவிட்டதோ?

nice one :)

Post a Comment