Wednesday, July 8, 2009

என் எண்ணக்குடை விரிப்புகள்..

-1-
இமைக்குடை நீ பிடித்து
மழைவிழி தாழ்த்துகிறாய்...
நனைவெதென்னவோ நான்தான்!!

-2-
உன்
பாதம் நனைத்த
மழைத்துளியிடம் தோற்ற..,
குடையாகத்தான்
நான் உன்னிடம்!!

-3-
நிராகரித்தாய்
...
நனைவதற்கு ஆசைப்பட்ட
குடைக்கம்பியானது
என் காதல்!!

தாமதமாய்..,

ஏற்றுக்கொள்கிறாய்...
குடைக்காளான் விரித்த
நிழலாகிப் போனது
உன் காதல்!!

-4-
குடையுடன்
...
காத்திருக்கிறது
ஒரு காதல்!!
மழைக்காக..

வந்து விட்டதோ
வெயில்..

பத்திரமாகவே காதல்
குடைக்கு நன்றி!!

-5-
ஒரு
குடைக்குள்..,
நனையாமல்
இரு துளிகள்..
நீயும்!
நானும்!

10 comments:

நட்புடன் ஜமால் said...

இமைக்குடை நீ பிடித்து
மழைவிழி தாழ்த்துகிறாய்...
நனைவெதென்னவோ நான்தான்!!]]

ஒரு குடைக்குள்..,
நனையாமல்
இரு துளிகள்..
நீயும்!
நானும்! ]]


மிக மிக மிக அருமை ...

அகநாழிகை said...

\\குடைக்காளான் விரித்த
நிழலாகிப் போனது
உன் காதல்\\

அருமையான வரிகள்...

கவிதை நன்றாக இருக்கிறது.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

நந்தாகுமாரன் said...

கவிதையின் அழகியல் கவர்கிறது

Anonymous said...

அழகான வண்ணத்தெரிவு, இந்த பக்கத்திற்கு...
அற்புதமான வார்த்தைத்தெரிவு, இந்த கவிதைக்கு...

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒரு குடைக்குள்..,
நனையாமல்
இரு துளிகள்..
நீயும்!
நானும்!//

அட்டகாசம்

Admin said...

உங்கள் பதிவுகள் அருமை தொடருங்கள்.....
வாழ்த்துக்கள்.... தொடர்ந்து எழுதுங்கள்..


நம்ம பக்கமும் வந்து பாருங்களேன்...

Prapa said...

superb.

நேசமித்ரன். said...

உங்கள் கவிதைகள் அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள்.....

நேசமித்ரன். said...

உங்கள் கவிதைகள் அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள்.....

-nesamithran.blogspot.com

பா.ராஜாராம் said...

ஒரு குடைக்குள்
சற்றேறக்குறைய சன்னத்தை
நனைத்தபடி பயணிக்கிரர் இருவர்..
சற்றேறக்குறைய சகலத்தையும்
நனைத்தபடி பயணிக்கிறோம்
சகலரும்!
வாழ்த்துக்கள் ரசிகை!

Post a Comment