கண்ணீரில்லா
அலறல்கள்
பிறந்துவிட்டான்
இன்னும் மயக்கமுறவில்லை
நான்
தெளிவான குரலில்..
என்னோட அம்மாவை
கூப்பிடுறீங்களா..
கொஞ்சம் பாக்கணும்!!
துணியில்
சுற்றிய பேரனுடனும்
புன்னகையுடனும் அவள்
இப்போதும்,
வலி
துளிக்கண்ணீர்
சத்தமில்லா
அலறல்களுடன்
தெளிவான மயக்கம்
என்னுள்..!
6 comments:
கவிதை ரொம்ப அருமை.
-சே.குமார்
அருமை!
தன்னை ஈன்றபோது தன் தாய் என்ன பாடுபட்டிருப்பாள் என்னும் வலியறிதல்!
"'அவரை'க் கூப்பிடுறீங்களா?" என்னும் பொருத்தமில்லாத பொய்மரபை வெளிறடித்தல்!
//பேரனுடனும்
புன்னகையுடனும் அவள்
இப்போதும்,
வலி
துளிக்கண்ணீர்
சத்தமில்லா
அலறல்களுடன்
தெளிவான மயக்கம்//
'பேரனுடன்' என்று தொடங்கி அடுத்தடுத்து நோவுணரும் இந்த அடிகளுக்காகவும், கவிஞரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
:-))
என்னோட அம்மாவை
கூப்பிடுறீங்களா..
கொஞ்சம் பாக்கணும்!!
கவிதை சந்தோஷமாய் வலிக்கிறது.
vaasithu vaazhthiya ullangalukku anbum nantriyum..:)
ஒரு தாயை உணரவைக்கும் கவிதை. அபாரம்.
Post a Comment