Monday, August 10, 2009

அம்மா போயிட்டு வாறேன்மா...

கடந்தகால வாழ்வை
அசைபோடும் பொக்கைவாய்த் தாத்தாவின்
நினைவில் கூட..
பள்ளிக் காலம் வந்து போகும்!!

நாமும் நினைவுத் தூசியைத்
தட்டிப்..பயணிப்போம்.,
நம் பள்ளிக் காலப் படிமங்களுக்குள்!

மாவுக் குச்சி..
பென்சில்..
பேனா..என வெவ்வேறு எழுதுகோல்கள்
நம்மைக் கிறுக்கிய காலம் அது!!

கடித்து பகிர்ந்த
தின்பண்டம்...
அதன் எச்சிலைப்
பெரிதுபடுத்தாது வாங்கிச் சுவைத்து
சிந்திய புன்னகைப் பூக்கள்...
கடனாய்கொடுத்த
மைத் துளிகள்-என்ற
சின்ன சின்ன
பரிமாற்றங்களில் தான்
நம் நட்பு வானம் விடிந்தது!!

பள்ளி மைதானத்தின்
விரிந்த வானத்தில்..
நிறைந்திருந்தது நம் உலகம்!

பள்ளி மணி ஓசை..
நட்ட மரக் கன்றுகள்..
முதல் சுற்றுலா..
முதல் தோழி..என
நாம் கடந்துவந்த
ஹைகூகளின் பட்டியல் நீளும்!

நடக்கவே தெரியாது நமக்கு
ஓடித்தான் நடந்தோம்..
உண்மை கூற வேண்டுமெனில்
பறந்தே திரிந்தோம்..
ஆம்!!
ஒரு கூட்டுப் பறவைகள் நாம்.
நமது சிறகுகள்..
சீருடையின் ஒரே வண்ணத்தால் மட்டுமே
அலங்கரிக்கப்பட்டிருந்தன..
இன.. மத..பேதமின்றி!!

விடுமுறை தினங்களிலும் கூட
பாடப் புத்தகங்களோடு பள்ளியில் நாம்..
சிரித்து விளையாடுவதற்காக!!

பழகிய விதிமுறைகள்..
திசைமாறிய குறிக்கோள்கள்..
நேராய் மாற்றிய தண்டனைகள்..
மதிக்க ஆரம்பித்த ஆசிரியர்கள்..
முயற்சிக்குப் பின்னும் தோல்விகள்..
தானாகவே வந்தமைந்த வெற்றிகள்..
இரசிக்க ஆரம்பித்த பாடல்கள்..
புரிய முயற்சித்த பாடங்கள்..,-எனத்
துவங்க ஆரம்பித்த போதுதான்
புரிந்தது..,
முடியவிருந்த பள்ளிக்காலத்தின் அருமை!!


15 comments:

S.A. நவாஸுதீன் said...

மாவுக் குச்சி..
பென்சில்..
பேனா..என வெவ்வேறு எழுதுகோல்கள்
நம்மைக் கிறுக்கிய காலம் அது!!

அழகு.

வித்யாஷ‌ங்கர் said...

nice -duraibharathy visit saamakodai.blogspot.com

நேசமித்ரன் said...

அருமை ரசிகை
கவிதை நல்லா வந்திருக்கு
உங்கள் வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம்

தண்டோரா இனி... மணிஜி.. said...

ஒரு வாட்டி மழை கொட்டிச்சா..நா ஒரு இடத்துல ஒதுங்கியிருந்தேன்..அது ஒரு ஸ்..கூலாம்

S.A. நவாஸுதீன் said...

பழகிய விதிமுறைகள்..
திசைமாறிய குறிக்கோள்கள்..
நேராய் மாற்றிய தண்டனைகள்..
மதிக்க ஆரம்பித்த ஆசிரியர்கள்..
முயற்சிக்குப் பின்னும் தோல்விகள்..
தானாகவே வந்தமைந்த வெற்றிகள்..
இரசிக்க ஆரம்பித்த பாடல்கள்..
புரிய முயற்சித்த பாடங்கள்..,-எனத்
துவங்க ஆரம்பித்த போதுதான்
புரிந்தது..,
முடியவிருந்த பள்ளிக்காலத்தின் அருமை!!

பழைய நினைவுகளைத் தட்டி எழுப்பி விட்டன உங்கள் வரிகள். மொத்தத்தில் மணம் நிறைந்த மனம் நிறைத்த மலரும் நினைவுகள்

துபாய் ராஜா said...

/கடித்து பகிர்ந்த
தின்பண்டம்...
அதன் எச்சிலைப்
பெரிதுபடுத்தாது வாங்கிச் சுவைத்து
சிந்திய புன்னகைப் பூக்கள்...
கடனாய்கொடுத்த
மைத் துளிகள்//

//பள்ளி மணி ஓசை..
நட்ட மரக் கன்றுகள்..
முதல் சுற்றுலா..
முதல் தோழி..என
நாம் கடந்துவந்த
ஹைகூகளின் பட்டியல் நீளும்!//

//நடக்கவே தெரியாது நமக்கு
ஓடித்தான் நடந்தோம்..
உண்மை கூற வேண்டுமெனில்
பறந்தே திரிந்தோம்..
ஆம்!!
ஒரு கூட்டுப் பறவைகள் நாம்.
நமது சிறகுகள்..
சீருடையின் ஒரே வண்ணத்தால் மட்டுமே
அலங்கரிக்கப்பட்டிருந்தன..
இன.. மத..பேதமின்றி!!//

//விடுமுறை தினங்களிலும் கூட
பாடப் புத்தகங்களோடு பள்ளியில் நாம்..
சிரித்து விளையாடுவதற்காக!!//

இனிய பள்ளிநினைவுகளை கண்முன் கொண்டுவந்த அழகான,இனிமையான வரிகள்.

//துவங்க ஆரம்பித்த போதுதான்
புரிந்தது..,
முடியவிருந்த பள்ளிக்காலத்தின் அருமை!!//

உண்மையான எல்லோரும் உணர்ந்த வரிகள்.

வாழ்த்துக்கள்.

Suresh K said...

"நடக்கவே தெரியாது நமக்கு
ஓடித்தான் நடந்தோம்.."
- சூப்பர்!!

நட்புடன் ஜமால் said...

ரொம்ப அருமையாக அந்த காலங்களுக்குள் கொண்டு போய்ட்டீங்க் ...

D.R.Ashok said...

எணக்கென்னவோ இது உங்கள் பதிவுகளிலேயே சுமாராய் தோன்றுகிறது.. anyway u started well.. first 3 paras..good

பிரவின்ஸ்கா said...

// நடக்கவே தெரியாது நமக்கு
ஓடித்தான் நடந்தோம்..
உண்மை கூற வேண்டுமெனில்
பறந்தே திரிந்தோம்..
//

நல்லாருக்கு .

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

பிரியமுடன்.........வசந்த் said...

//நமது சிறகுகள்..
சீருடையின் ஒரே வண்ணத்தால் மட்டுமே
அலங்கரிக்கப்பட்டிருந்தன..
இன.. மத..பேதமின்றி!!

விடுமுறை தினங்களிலும் கூட//

ஆம் சிறகுகள் இப்போ முறிக்கப்பட்டுவிட்டன சாதிமத வேறுபாடுகளால்

நல்ல கவிதை

பா.ராஜாராம் said...

ரசிகை...எனதன்பு சிநேகிதி... மூன்று நாளாக ஒரு வேலை...எனக்கும் எழுதுவதை தவிர கணினி குறித்து ஒன்றும் தெரியாது.நண்பரும்,சகோதரனும் பின் புலமாக இருப்பதில் நீங்கள் அறிய கிடைத்தீர்கள்.நீங்கள் அனுமதி தந்தால் இந்த கவிதையை நம் கருவேலநிழல்
" தொடக்க பள்ளிக்கும்" எடுத்து செல்ல நண்பரிடம் இறைஞ்சுகிறேன்.இந்த இறைஞ்சுகிறேன்தான் நம் ரசிகை தளத்தில் நீங்கள் எழுதி இருக்கும் கவிதைக்கான விமர்சனுமும்.அவ்வளவு முக்கியமான கவிதை இது.சம்மதம் தெரியபடுத்துங்கள் ரசிகை..பிறகு அங்கும் பதிவோம்.நன்றியும் அன்பும்.

நிலாரசிகன் said...

நல்லதொரு கவிதை...பால்யத்திற்குள் நுழைந்து திரும்பியது மனம்.

வாழ்த்துகள்.

இரசிகை said...

thandoraavin pinnoottam yetho valiyai undaakkukirathu.....

yenthak kuzhanthaiyum ini appadi sollaatha nilai uruvaakanumnu thonuthu...

anaivarin varukaikkum nantri..........:)

தண்டோரா ...... said...

/கடனாய்கொடுத்த
மைத் துளிகள்-என்ற//

கழுத்தை திருகி என்ற வார்த்தையும் இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.மன்னிக்கவும்.உங்கள் கவிதையை திருத்தவில்லை.கருத்தை சொன்னேன்..

Post a Comment