Saturday, August 29, 2009

அந்த நூல் அவனை வாசிக்குமா??

சத்தம் போடாதே மனமே..,
அவளைக் கண்டதும்.
இது நூலகம்!!

பல நேரங்களில்
நான் நூலகத்திற்கு செல்வது..,
அவளை வாசிப்பதற்காக மட்டுமே!!

எதற்காக..அவள்,
புருவங்கள் நெரித்தாள்?
விழிகள் விரித்தாள்?
குறுநகை கொண்டாள்?
எந்த வரிகளில் கரைந்து போனாள்?-என..,
எத்தனை சந்தேகங்கள் என்னுள்!!
"அவளைப் படித்த பின்"

வரிகளின் கரைகளில்
உருளும்.. அவள் விழிகளின்
கரம்பிடித்து உலவும்
என் மனமும்!!

ஆழ்ந்த கவனத்துடன்
நகர்ந்துகொண்டே இருக்கிறாள்..
நகர்த்தும் பக்கங்களுக்குள்.
நானோ..அவளினுள்!!

"அசையா ஓவியம்"
"இமைக்கும் சிற்பம்"
"தேவதை நீ
நூலகம் கோயில்"
"என்னிதய நூலகத்தில்
கவிதைத் தொகுப்பாய் நீ!"-என
அலங்கரிக்கிறேன் அவளை
என் கவிதைகளாலும்..
கனவுகளாலும்..
ஆனால்,அவளோ..
கலைந்த கூந்தல் சரிசெய்யும்
விரல்களின் அசைவில்..-என்
கனவுகள் கலைக்கிறாள்!!

அவள் புரட்டிய புத்தகங்களிலேயே
புதைந்து போகிறேன் நான்..
அவள் கைரேகைகள் தேடித்தேடி!!

தொடர்ந்தே இருந்தாலும்
தொலைவாகவே இருக்கிறேன்.
என்றாவது ஒருநாள்..
நேரம் ஒதுக்குவாளா அவள்..?
என் விழிகள் வாசிக்க!!

ஆம்!!

அந்த நூல்
அவனை வாசிக்குமா???

10 comments:

An...Bu said...

எல்லாமே நல்லா இருக்கு...!!!

எதற்காக..அவள்,
புருவங்கள் நெரித்தாள்?
விழிகள் விரித்தாள்?
குறுநகை கொண்டாள்?
எந்த வரிகளில் கரைந்து போனாள்?-என..,
எத்தனை சந்தேகங்கள் என்னுள்!!
"அவளைப் படித்த பின்"

அவள் புரட்டிய புத்தகங்களிலேயே
புதைந்து போகிறேன் நான்..
அவள் கைரேகைகள் தேடித்தேடி!!

ரொம்ப அழகா இருக்கு..:)

Suresh K said...

எனக்குப் புரியலயே :-(... முதல்ல ஒரு ஆண் ஒரு பெண் பற்றி சொல்ற மாதிரி இருந்தது...ஆனா கடைசியில 'அந்த நூல்
அவனை வாசிக்குமா???'
னு முடிச்சிருக்கீங்க.... [ஒரு வேளை முதல்ல வந்தது எல்லாம் ஒரு புத்தகம் பேசியது மாதிரி எழுதி இருக்கிங்களோ?]கொஞ்சம் நான் புரிஞ்சிக்க எனக்கு விளக்கம் சொல்லுங்களேன்...

இரசிகை said...

suresh....

neenga muthalil purinthu kondathu migach chariye...

avalaip patriya avanin yennangal-i pakirnthu vittaan...
kettu mudikkum pothu namakku thonum illaiyaa..
nadakkuma?nadakkaathaannu?
appadi oru kelvithaan athu..


mukkiyamaa ingu puththakangale pesala!!

purinjirukkumnu ninaikkiren..:)

Ashok D said...

//வரிகளின் கரைகளில்
உருளும்.. அவள் விழிகளின்
கரம்பிடித்து உலவும்
என் மனமும்!!
என்னிதய நூலகத்தில்
கவிதைத் தொகுப்பாய் நீ!"-
கூந்தல் சரிசெய்யும்
விரல்களின் அசைவில்
கனவுகள் கலைக்கிறாள்!!//

நல்ல வரிகள் ரசிகை

நேசமித்ரன் said...

அழகா இருக்கு

paartheengalaa rasigai kavithainnu vandhaale vilakkam thaan

enkitta vilakkam kettuttu vandhu inga vilakkam solreenga neenga ..

nalla munnetram

vaazhthukkal

:)

மணிஜி said...

திருடிக்கொண்டு வந்துவிட வேண்டியதுதான்..

S.A. நவாஸுதீன் said...

அனைத்தும் அற்புதம் இரசிகை.

Suresh K said...

Ipa purinjiduchu :-).... Purinchathuku apuram imunnadi vida romba nalla iruku unga Kavithai!

சந்தான சங்கர் said...

விசிறிக்குள் உயிரற்ற
சிறகுகள்..
ரசிகைக்குள் உயிருள்ள
கவிதைகள்...

வாழ்த்துக்கள்..

நட்புடன் ஜமால் said...

எதற்காக..அவள்,
புருவங்கள் நெரித்தாள்?
விழிகள் விரித்தாள்?
குறுநகை கொண்டாள்?
எந்த வரிகளில் கரைந்து போனாள்?-என..,
எத்தனை சந்தேகங்கள் என்னுள்!!
"அவளைப் படித்த பின்"]]


மிக அழகான காட்சி விரிகின்றது கண் முன்னே

Post a Comment