அதிகமாகவே வளர்ந்துவிட்ட
தலைமுடியுடன்.. நகங்களும்..
முதலாமத்தில்
எண்ணையின் "இல்லாமை"
இரண்டாமதில்
அழுக்கின் "நிறைவு"
இந்த சோகமான
முரண்பாடுகளுக்கிடையில்
ஆணா?
பெண்ணா?-என்ற
வினாக்களுக்கு இடமேயில்லை..,
அந்த நடை பயின்ற
மனிதப் பிறவி
புழுதியை மட்டுமே
ஆடையாகக் கொண்டதால்!!
வலதுகையால்..
தலையைச் சொறிந்து கொண்டே
நீட்டிய இடதுகையின்
உள்ளங்கையில்..
நான் வைத்த
பழைய ஒருரூபாய் நாணயம்
புதிய ஒளியைக் கொடுத்தது
அந்த இளம்பிறையின் முகத்தில்!!
"எந்தத் தேவையைப்
பூர்த்தி செய்துவிடும்
இந்த ஒற்றை நாணயம்.."என்ற
என் எண்ணக் குடைச்சலுடன்
இந்த நிகழ்வு
முற்று பெற்று கொண்டிருக்க....
கடந்து சென்று கொண்டே
என்னை நோக்கிய அந்தக்
குழந்தையின்..
விழுந்த பற்களுக்கு இடையே
எழுந்த புன்னகை
மீதமாய் என்னில்...
கொடுத்ததற்கும் மேலாகப்
பெற்றுக் கொண்ட நானோ..
இப்பொழுது..,
கடனாளியாக!!!
Monday, August 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
கொடுத்ததற்கும் மேலாகப்
பெற்றுக் கொண்ட நானோ..
இப்பொழுது..,
கடனாளியாக!!!
அருமையான கவிதை, இரசிகை.
நீங்கள் வலையேற்றியதிலேயே இதுதான் கொஞ்சம் நீண்ட வரிகளை கொண்டுள்ளது ...
அருமையான நிகழ்வு - வரிகளில் சிக்கி கிடக்கிறோம்
வரிகளும் நானும் ...
யாசகம் கொஞ்சம் யோசிக்க வைத்தது.....
வாழ்த்துக்கள்......
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
இந்தக் கவிதை எனக்கு பிடிச்சிருக்கு
யப்பா இப்போவாது நீண்ட கவிதை எழுதினீங்களே!
கவிதை நல்லாருக்கு
இப்பதிவிற்கான பின்னூட்டமல்ல.. (Personnal)
அன்பு ரசிகை,
வணக்கம்.
என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து கூறியுள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி.
தாங்கள் கூறியபடி 'அழகு பூதம்' பதிவில் படத்தை மாற்றிவிட்டேன்.
தொடர்ந்து வாருங்கள்.கருத்துக்களால் என்னை திருத்துங்கள்.
நண்பர்களுக்கும் எனது வலைப்பூவை அறிமுகப்படுத்துங்கள்.
நன்றி.வணக்கம்.
அன்பன்,
(துபாய்) ராஜா
//"எந்தத் தேவையைப்
பூர்த்தி செய்துவிடும்
இந்த ஒற்றை நாணயம்.."என்ற
என் எண்ணக் குடைச்சலுடன்
இந்த நிகழ்வு
முற்று பெற்று கொண்டிருக்க//
தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வை அழகாக கவிதையாக வடித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
//கடந்து சென்று கொண்டே
என்னை நோக்கிய அந்தக்
குழந்தையின்..
விழுந்த பற்களுக்கு இடையே
எழுந்த புன்னகை
மீதமாய் என்னில்...//
கலக்கல் வரிகளில் காட்சிகள் கண்முன்.
//கொடுத்ததற்கும் மேலாகப்
பெற்றுக் கொண்ட நானோ..
இப்பொழுது..,
கடனாளியாக!!! //
அருமை.அருமை.
அழகான வரிகள்...
முத்தான மூ்ன்று வரிகளோடு வருவிங்க திடிரென இந்த மாற்றம்தான் ஏனோ....
நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல கவிதை ரசிகை!
Post a Comment