Wednesday, August 19, 2009

உனது பெயர்..

எனது புத்தகங்கள் எல்லாம்
அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது..
உனது பெயராலே!

எனது உளறல்களும்
எனது கிறுக்கல்களும்
உனது பெயராகிப் போனது!

உன்பெயரின் எழுத்துக்கள்
சொல்லியே.. பூக்கள் பறிக்கிறேன்!

உன் பெயரின் முதல் எழுத்தாய்
என் ஒற்றை முடி வளைக்கிறேன்!!
அது கலையாமலிருக்க..அதில்-என்
நெற்றி பொட்டை ஒட்டுகிறேன்.

உன் பெயர் எழுதியே
படிந்த தூசி விலக்குகிறேன்!

சிதறிய வார்த்தைகள் சேர்த்து
உன்பெயர் புனைகிறேன்!

இனிப்பை நேசிக்கும்
குழந்தையின் மனம்போல
எனது பேனாவும், மையும்
உனது பெயரை நேசிக்க ஆரம்பித்துவிட்டன!
ஆம்..,
நீயே...எழுதியிருக்கமாட்டாய்
இத்தனைமுறை உன்பெயரை!

உமிழப்பட்ட மையெல்லாம்
உன் பெயர் சொல்லியே
உறைந்து போனது..,
உயிர் துறந்தது..!!

உன் பெயர் எழுதும்போது..
கரைந்த மை,
மோட்சம் பெற்றது!!
சிதறிய மை,
அதிஷ்டம் இழந்தது!!

உனது பெயர் எழுதிக்
கரைந்த இறந்தகாலம்
உன் பெயரை உள்வாங்கி
உயிர் பெற்றது.

எனது பெயர் முழுமைபெற்றது
உனது பெயரோடு
தன்னைச் சேர்த்தபோது!

நான் இறந்தபின்
பிறந்த குழந்தை,
உன்பெயர் சொல்லி அழைக்கப்பட்டால்...
என் ஆன்மா திரும்பிப் பார்க்கும்!!

13 comments:

ஒளியவன் said...

உன் பெயரோடு
பெயர்ந்து செல்கிறது
என் இதயம்!

ஒளியவன் said...

கலக்கல் கவிதை அண்ணி.

Suresh K said...

ரொம்ப நல்ல இருக்குங்க...

S.A. நவாஸுதீன் said...

உமிழப்பட்ட மையெல்லாம்
உன் பெயர் சொல்லியே
உறைந்து போனது..,
உயிர் துறந்தது..!!

நான் இறந்தபின்
பிறந்த குழந்தை,
உன்பெயர் சொல்லி அழைக்கப்பட்டால்...
என் ஆன்மா திரும்பிப் பார்க்கும்!!

ரொம்பவும் ரசித்த அற்புதமான வரிகள். அருமை இரசிகை.

சப்ராஸ் அபூ பக்கர் said...

///இனிப்பை நேசிக்கும்
குழந்தையின் மனம்போல
எனது பேனாவும், மையும்
உனது பெயரை நேசிக்க ஆரம்பித்துவிட்டன!///

பிடித்தமான, ரசித்த கவி வரிகள்.....

வாழ்த்துக்கள்.....

நட்புடன் ஜமால் said...

உன் பெயரின் முதல் எழுத்தாய்
என் ஒற்றை முடி வளைக்கிறேன்!!
அது கலையாமலிருக்க..அதில்-என்
நெற்றி பொட்டை ஒட்டுகிறேன்.]]

ரொம்ப வித்தியாசமாக இருக்கு.

நட்புடன் ஜமால் said...

மேலும் பாஸ்வேர்டில் இருக்கும் ‘அவர்’ பெயர்

Ashok D said...

உமிழப்பட்ட மையெல்லாம்
உன் பெயர் சொல்லியே
உறைந்து போனது..,
உயிர் துறந்தது..!!

class

பா.ராஜாராம் said...

அடிச்சு கலக்குறீங்க ரசிகை...எழுத்தின் மெருகு கூடி,கூடி வருகிறது.//உன் பெயரின் முதல் எழுத்தாய் என் ஒற்றை முடி வளைக்கிறேன்.அது கலையாமலிருக்க...அதில்-என் நெற்றி போட்டு ஒட்டுகிறேன்//..பிறகு அந்த கடைசி பாரா கசிந்து உருக்குகிறது...இனி காதல் கவிதை வேண்டுவோர் கவனத்துக்கு..."இதோ ரசிகை தளம்!"

இரசிகை said...

jamal sir.......
appadilaam yethuvum illai.

maraiththu vaikka vendiya vishayamthaan yen pass word.kandippa yaarudaiya peyarum illai:)

rajaram sir,jamal sir,-naan rasiththa varikalum athuve!!

rasiththavarkalukku nantri.

துபாய் ராஜா said...

பெயர்க்கவிதை அருமை.

//எனது உளறல்களும்
எனது கிறுக்கல்களும்
உனது பெயராகிப் போனது!//

//நீயே...எழுதியிருக்கமாட்டாய்
இத்தனைமுறை உன்பெயரை!//


//எனது பெயர் முழுமைபெற்றது
உனது பெயரோடு
தன்னைச் சேர்த்தபோது!//

ரசிகை நல்லா ரசித்து,ரசிக்கும்படி எழுதியுள்ளீர்கள்.

தமிழ் said...

/உமிழப்பட்ட மையெல்லாம்
உன் பெயர் சொல்லியே
உறைந்து போனது..,
உயிர் துறந்தது..!!/

அருமை

சந்தான சங்கர் said...

உன் விழிகளுக்கு கூட

இத்தனை மை பூசியிருக்க மாட்டாய்!

உண்மைக்கு மெய் என்று சொல்வதைவிட

இரசிகையின் மை என்று சொல்லலாம்.

Post a Comment